எல்லார்க்கும் பிகோரெக்ஸியா நோய் பற்றி தெரியும். ஆனால் அது என்ன பிகோரெக்ஸியா? என்று நினைக்கத் தோன்றும். இது அனோரெக்ஸியாவிற்கு எதிர்ப்பதமான நோயாகும்.
இந்த நோயால் சிறிய சதவீதமான பாடிபில்டர்ஸ் பாதிப்படைகின்றனர். இது ஒரு அபாயமான பாதிப்பாகும். இது மன அழுத்தம் மற்றும் தற்கொலை போன்றவற்றை தூண்டுகிறது.
சில ஆண்கள் தங்களது உடல் ஆற்றலுக்காகவும் தங்களது உடலமைப்பில் திருப்தி ஏற்பட்டு மன அழுத்தத்தை குறைக்கவும் தவறாக ஸ்டிராய்டு மற்றும் போதை மருந்துக்கு அடிமையாகுவதால் இந்த நோயின் தாக்கம் அதிகமாகிறது. இதைப் பற்றிய தகவலை பார்க்கலாம்.எப்படி ஆரம்பிக்கிறது ?
பிகோரெக்ஸியாவால் பாதிக்கப்படக் காரணம் தங்களது உடலை பெரிதாக காட்ட ஆரம்பிப்பதே முதல் விளைவு. அதற்காக நிறைய எடைகளை தூக்கி உடற்பயிற்சியை செய்து தசைகள் மற்றும் உடலை பெரிதாக்குவர். ஆனால் அவர்களது பார்வையில் தங்களது உடலமைப்பில் திருப்தி இல்லாத நிலையை ஏற்படுத்துவதால் மன அழுத்தம், மன அழுத்த நோய் போன்றவை ஏற்படுகிறது.
மற்றொரு பெயர்
இந்த நோயின் மற்றொரு பெயர் மஸில் டிஸ்மார்பியா. இது அவர்களின் சுய உணர்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது ஒரு தொல்லையா?
பிகோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது தசைகளை வலுவேற்றுவதற்காக எப்பொழுதும் பாடி பில்டிங் செய்து கொண்டு வெளி உலக வாழ்க்கையை விடுத்து ஜிம்லிலே இருந்து பயிற்சி செய்து கொண்டே இருப்பர்.
தவறான ஸ்டிராய்டு பழக்கம்
தங்கள் உடலமைப்பை மேலும் மேம்படுத்த ஸ்டிராய்டு போன்ற தவறான புரோட்டீன் பவுடர், அனபோலிக் ஸ்டிராய்டு மாத்திரைகள் போன்றவற்றை எடுப்பதால் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி வெளியே வர முடியாமல் மேலும் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
அதிகமான வளர்ச்சி
அவர்கள் அதிகமான வளர்ச்சியை அடைந்த பிறகும் கூட இந்த பிகோரெக்ஸியாவால் அவர்களுக்கு தங்களது உடலமைப்பில் போதுமான திருப்தி ஏற்படுவதில்லை. அவர்கள் பார்வையில் இன்னமும் அவர்கள் சிறியதாகவே தெரிகின்றனர்.பாதிப்பு யாருக்கு?
தற்போதைய நிலவரப்படி கொஞ்சம் பேர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நிறைய பேர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதே தெரியவில்லை என்றும் ரிப்போர்ட் சொல்கிறது. பிக்ஓரஷியா தாழ்வு மனப்பான்மை மற்றும் அனிஸ்சிட்டி போன்றது. எப்பொழுது மன அழுத்தம் அதிகரிக்குதோ அப்பொழுது அபாயமும் தொடங்கி விடுகிறது.
என்ன விளைவுகள்
பிகோரெக்ஸியா பரம்பரையாக வரும் பாதிப்பும் கூட. மூளையின் செயல்திறனை சமநிலையின்மை ஆக்குகிறது. சில பேர்கள் தவறான பழக்க வழக்கங்களுக்கு தள்ளப்பட்டாலோ அல்லது செய்தாலோ இதனால் பாதிப்படைகின்றனர்.
நிறைய ஆண்கள் வலுவான தசைகள் தான் ஆணழகு என்பதை நினைப்பதாலும், சூப்பர் ஹீரோவாக மாற நினைப்பதாலும் ஏற்படுகின்றது.
சிகிச்சை வாய்ப்புகள்
இந்த பிகோரெக்ஸியாவில் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டிப்பாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அறிவு மற்றும் மன நல ரீதியான தெரிபி மற்றும் மருந்துகள் உங்களுக்கு உதவும்.
No comments:
Post a Comment