உடலில் சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவு அவசியம் இருக்க வேண்டும்.குளுக்கோஸ் அளவு சற்று குறைந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமானாலோ நமது உடல் ஆரோக்கியத்திற்கு அது தீங்காகவே முடியும்.
நமக்கு தேவையான சர்க்கரையளவைத் தாண்டி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால் அதில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
இப்போது ஒரு நாளில் உங்களது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது என்பதை சில அறிகுறிகளை வைத்து நீங்களே கண்டுபிடிக்கலாம்.
1.சோர்வு :
உடலுக்கு தேவையான சர்க்கரையை எனர்ஜியாக எடுத்துக் கொண்டது போக நிறைய குளுக்கோஸ் உடலில் இருந்தால் அது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். அதிக சோர்வாக இருந்தால் உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்.
2. சாப்பிடத்தூண்டும்.
அதிகமான இனிப்பு உணவுகளை தேடித்தேடி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றாலும் உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது என்று அர்த்தம். ஏனென்றால் உடலிலிருக்கும் சர்க்கரை ஒரு போதைப் பொருளைப் போல செயல்பட்டு அதே உணவை சாப்பிடத் தூண்டும்.
3. மன மனச்சோர்வு:
உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் காரணமேயில்லாமல் சோகமாக இருப்பது, சமூகத்துடன் ஒத்து வாழ முடியாமை, சோம்பேறித்தனம், மனச்சோர்வு போன்றவை ஏற்படும். மன ரீதியாக எமோசனலாக இருப்பார்கள்.
4. நோய் எதிர்ப்பு சக்தி :
உடலில் அதிகரித்துள்ள சர்க்கரையளவு நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்திடும்.இதனால் அடிக்கடி காச்சல், சளி போன்றவை ஏற்படும்.
5. சருமப் பிரச்சனை :
சருமத்தில் அடிக்கடி அலர்ஜி, சருமம் வறண்டு போதல், சரும வறட்சி போன்றவை ஏற்ப்பட்டால் கூட அது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டதற்கான காரணமாக இருக்கலாம். சருமப் பிரச்சனைக்கு வேரில் உள்ள சிக்கலை தீர்க்காமல் மேலோட்டமாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது மேலும் மேலும் பாதிப்புகளை அதிகப்படுத்தும்.
6. பற்கள் :
பல்வலி அல்லது வாய்துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்ப்பட்டால் கூட உடலில் சர்க்கரையளவு எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
7. எனர்ஜி காலி :
உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உடலில் உள்ள எனர்ஜி வேகமாக காலியாகும். சீக்கிரமாகவே நீங்கள் சோர்ந்து போவீர்கள்.
8. தொப்பை :
உடலில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது இன்சுலினும் அதிகரிக்கும் நிலை உண்டாகிறது. அதனால் கொழுப்பு வளர்சிதை மாற்றம் குறைந்து வயிற்றில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும். இதுவே தொப்பை உருவாகக் காரணமாகிவிடுகிறது.
9. மூளை :
மூளையின் செயல்பாடுகள் சரியாக இருக்க, மூளையில் ரத்த ஓட்டம் சீராக நடைபெற வேண்டும். இதற்கு குளுக்கோஸ் காரணமாய் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும். அடிக்கடி தூக்கம் வருவது, முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுவது போன்றவை ஏற்ப்படும்.
No comments:
Post a Comment