Friday, 1 September 2017

விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

விரதம் என்றதும் உங்கள் மனதில் தோன்றும் எண்ணம் என்ன? நிறைய பேர் இதை மதச்சார்பான செயலாக நினைத்து பயப்படுகின்றனர்.
விரதம் உங்கள் உடல் எடையை குறைக்கவும் அதற்காக நீங்கள் ஃபுட் டயட் மேற்கொள்ளும் ஒரு கருவி தான் அது. இதைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருந்தால் அதன் பயன்கள் உங்களுக்கு கிடைப்பது சாத்தியமே. அதே நேரத்தில் உங்கள் உடலையும் இதற்கு ஒத்துப் போகச் செய்ய வேண்டும்.Benefits of Fasting You Need To Knowவாங்க வாசகர்களே விரதத்தினால் இதுவரை நீங்கள் எதிர்பார்க்காத அல்லது கேள்விப்படாத நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.மூளையின் செயல்திறனை அதிகரித்தல்

மூளையின் செயல்திறனை அதிகரித்தல்

விரதம் இருப்பதால் உங்கள் மூளையில் நிறைய நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. மூளையில் உள்ள புரோட்டீனான brain-derived neurotrophic factor(BDNF)
உங்கள் மூளையில் ஆரோக்கியமான நியூரான்கள் உருவாகுவதற்கும், நியூரான் செல்களுக்கிடையே உள்ள தொடர்புகளை அதிகரிக்கவும், அதற்கு நீங்கள் மேற்கொள்ளும் விரதம் தூண்டுகிறது.
மேலும் இதனால் அல்சீமர், டிமென்ஷியா, மன அழுத்தம் போன்றவைகள் வருவது குறைக்கப்படுகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு மனத்தெளிவை ஏற்படுத்துகிறது.இரத்தத்தை தூய்மையாக்குதல்

இரத்தத்தை தூய்மையாக்குதல்

வயதாகுதல் என்பது இயற்கையின் ஓரு பகுதி அதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நீங்கள் விரதம் இருந்தால் வயதாவது தடுக்கப்படும். ஆமாங்க நம் உடலில் உள்ள HSH (human growth hormone) அதிகமாக தூண்டிவிடப்படுகிறது.
இந்த ஹார்மோன் குறைவு தான் நாம் வயதாகுவதற்கு ஒரு காரணமாம். இது மட்டும் இல்லங்க விரதத்தின் போது உங்க சீரண மண்டலத்திற்கு சில நேரம் ஓய்வு கொடுப்பதால் உங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகி விடுகிறதாம்.டைப்-2 டயாபெட்டீஸ்

டைப்-2 டயாபெட்டீஸ்

நீங்கள் நம்பினால் நம்புங்கள் விரதம் உங்கள் இன்சுலின் அளவை குறைத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இதனால் டைப்-2 டயாபெட்டீஸ் பற்றிய கவலை இனி உங்களுக்கு தேவையில்லை.இதய நோய் :

இதய நோய் :

சில பேருக்கு தெரியாது எப்ப பசிக்குது எப்ப சாப்பிடனும் என்று. விரதம் உங்கள் பசி செயலை தூண்டும் க்ரெலின் ஹார்மோனை சரிசெய்து உங்கள் பசியின் முறையை ஒழுங்குபடுத்துகிறது. ஏனெனில் விரதம் இருக்கும் போது பசிக்கும் முறை மறைந்து போவதாலாகும்.மாசு மருவற்ற சருமம் கிடைக்க

மாசு மருவற்ற சருமம் கிடைக்க

விரதத்தின் போது சீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுப்பதால் உங்கள் உடல் மற்ற செயல்களுக்கு அந்த எனர்ஜியை கொடுக்கும்.
இறந்த செல்களை நீக்குதல், பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்தல், இரத்த சுத்திகரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளுமாம். இந்த செயல்கள் நேரடியாக உங்கள் சரும அழகிற்கும் உடல் வடியமைப்புக்கும் உதவுகிறதாம்.எச்சரிக்கை

எச்சரிக்கை

விரதத்திற்கு சரியான பயிற்சி இல்லையென்றால் அது உங்களுக்கு துன்பமாக முடியும் . இதில் சரியான முறையை சரியான வழியில் பின்பற்றுவது மிகவும் முக்கியம். எல்லாரும் விரதத்திற்கு தயாராக முடியாது. கண்டிப்பாக கருவுற்ற பெண்கள், தாய்ப்பாலுட்டும் பெண்கள் விரதம் இருந்தால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம்.
விரதம் என்பது நீங்கள் பயப்படும் அளவிற்கான பயிற்சி கிடையாது. இதைப் பற்றிய அறிவின் மூலம் சரியான முறையில் சரியான வழியில் பயிற்சி செய்தால் நீங்கள் எதிர்பார்க்காத நன்மைகள் கிடைப்பது சாத்தியமே.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...