நீரிழிவு / சர்க்கரை நோய் உள்ளவர்கள் உட்கொள்வதற்கு என தனியாக சுகர் ஃப்ரீ உணவு பண்டங்கள் சிலவன சந்தையில் விற்கப்படுகின்றன. இவை நிஜமாகவே சர்க்கரை கலப்பு இல்லாததா என்றால்... இல்லை என்பது தான் உண்மை.
இதில் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் தான் அதிகளவில் நீரிழிவு தாக்கங்கள், பாதிப்புகள் ஏற்படுகின்றன.
டயட் சோடா, வெள்ளை சர்க்கரை என பலவன நமது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
அதிலும், அடிக்கடி சாப்பிடும் உணவுகளில் இவற்றின் கலப்பு இருக்கிறது என்பதையே பலர் அறிந்திருப்பதில்லை...
கோதுமை பிரெட்!
மைதா பிரெட் தான் ஆரோக்கியத்திற்கு தீமையானது, எனவே கோதுமை பிரெட் சாப்பிடலாம், இது ஆரோக்கியமானதும் கூட என கூவி, கூவி விற்கின்றனர்.
ஆனால், உண்மையில் இதுவும் செயற்கை இனிப்பூட்டிகள் கலந்து தான் விற்கப்படுகின்றன. இவையும் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.
தயிர்!
தயிர் (ஃப்ளேவர்கள் சேர்க்கப்பட்ட, கெட்டி தயிராக பெட்டிகளில் அடைத்து விற்கப்படுபவை) ஆரோக்கியமானது என கூறி, சூப்பர் மார்கெட் போகும் போதெல்லாம் மக்கள் வாங்கி வந்து உணவுகளில் சேர்க்கின்றனர். ஆனால், இதில் இயற்கை சர்க்கரையுடன் சேர்த்து செயற்கை இனிப்பூட்டிகளும் கலக்கப்படுகின்றன.
க்ரானோலா!
க்ரானோலா என்பது ஓட்ஸ், தேன், நட்ஸ் போன்றவை சேர்த்து தயாரிக்கப்படும் காலை உணவு. ஹெல்தி பார் உணவுகள் என்ற வகையில் இதை விற்கின்றனர்.
ஆனால், இதில் இனிப்பு சுவைக்காக அதிக செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல. இதனால், உடலில் இரத்த சர்க்கரை அளவு தான் அதிகரிக்கும்.
சூயிங்கம்!
நீங்கள் உணரும் இனிப்பு சுவையானது, செயற்கை இனிப்பூட்டிகள் கலப்பு இல்லாமல் இனிப்பு சுவையை இவற்றில் கொண்டு வரவே முடியாது. எனவே, இதை சாதாரணமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ண கூடாது.
குறைந்த கொழுப்பு பானங்கள்!
சந்தையில் இன்று ஆரோக்கியமானவை, இது ஆப்பிள் ஜூஸ், சாலட் ஜூஸ், மாம்பழத்தின் ரியல் டேஸ்ட், அப்படியே கொண்டு வந்த ஆரஞ்சு என விளம்பரப்படுத்தி விற்பார்கள். ஆனால், அவற்றில் எல்லாமே இந்த செயற்கை இனிப்பூட்டிகள் கலப்பு இருக்கிறது.
அஸ்பார்டேம், சுக்ரல்ஸ் ; சர்க்கரை ஆல்கஹால் எனப்படும் சர்பிட்டால் மற்றும் சைலிடோல் போன்றவற்றின் கலப்பு இருக்கிறது.
கெட்சப்!
கெட்சப்பில் தான் அதிகளவில் உயர் ஃபிரக்டோஸ் காரன் சிரப் மற்றும் இதர சர்க்கரை வகைகள் சேர்க்கப்படுகின்றன. சில பிராண்டுகள் கலோரிகளை குறைக்க இவற்றுடன் செயற்கை இனிப்பூட்டிகளை சேர்த்துவிடுகின்றனர்.
No comments:
Post a Comment