உடல் சோர்வாக இருந்தால் உடனே உறங்கிவிடுவோம். அதுவே மனம் சோர்வாக இருந்தால் உறக்கமே வராது. நல்ல உறக்கம் வேண்டும் வேனில் மனதை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எவன் ஒருவன் நல்ல உறக்கம் பெறுகிறானோ? அவனே உலகில் சிறந்த பாக்கியசாலி.
நல்ல உறக்கம், நல்ல ஆரோக்கியத்தின் முதல் அறிகுறி. இதோ! உறக்கத்தை உங்களுக்கு பரிசளிக்கும் சூப்பர் 5 கை வைத்தியங்கள்...
சின்ன வெங்காயம்!
சின்ன வெங்காயத்தை நீரில் உப்புப் போட்டு வேக வைத்து. நன்கு வெந்த பிறகு அந்த நீரை வெள்ளை சாதத்துடன் சேர்த்து இரவு பிணைந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் பெறலாம்.
திப்பிலி!
திப்பிலி வேர் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து மிதமான அளவில் சூடு செய்த பாலுடன் சேர்த்து, உடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் நல்ல உறக்கம் வரும். இதை படுக்கும் முன் குடிக்க வேண்டும்.
பாகற்காய்!
பாகற்காய் சாற்றை நல்லெண்ணையில் கலந்து உறங்கும் முன்னர் உச்சந்தலையில் தேய்த்து படுத்தால் நல்ல உறக்கம் பெறலாம்.
வேப்பிலை!
வேப்பமர இலைகளை வறுத்து சூடோடு தலையில் வைத்து வந்தால் நல்ல உறக்கம் பெறலாம்.
சர்பகந்தா!
சர்பகந்தா எனும் செடியின் வேரை பொடியாக்கி, அதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து காலை, இரவு இருவேளை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நிம்மதியான உறக்கம் பெறலாம்.
No comments:
Post a Comment