Friday, 1 September 2017

சர்க்கரை வியாதி இருக்குதா? உங்க ஈறுகளை பத்திரமா பாத்துக்கோங்க!!

சர்க்கரை நோயானது வாயில் மைக்ரோபியம் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதால் ஈறு நோய் ( பீரியோடோன்டிஸ்ட்) என்ற நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோயானது பற்களை சுற்றி வீக்கத்தையும் எலும்பு இழப்புகளையும் உருவாக்குகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆராய்ச்சியை எலிகளுக்கிடையே நடத்தினர். ஹைபர்கிளைசெமிக் டயாபெட்டீஸ் அதாவது இரத்த சர்க்கரை அளவு அதிகம் கொண்ட எலிக்கும் மற்ற சாதாரண எலிக்களிக்கிடையே செய்த ஆராய்ச்சியின் முடிவானது டயாபெட்டீஸ் எலியில் பாக்டீரியாக்களின் தாக்கம் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த டயாபெட்டிக் எலி பெரியோடென்டிஸ்ட் மற்றும் பற்களில் எலும்பு இழப்பு போன்றவற்றை கொண்டுள்ளது . மேலும் IL-17அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த டயாபெட்டிக் எலி மனிதரை போன்றே பெரியோடென்டல் எலும்பு இழப்பு மற்றும் IL-17 அதிகரிப்பு போன்றவற்றை ஜெனிடிக் ரீதியாகவே கொண்டுள்ளது என்று தனா கிரேவ்ஸ் பெனிஸ்சுலவேனியா யுனிவர்சிட்டியிலிருந்து சொல்கிறார்.
இந்த தகவலானது நாளிதழ் செல் ஹோஸ்ட் ஆன்ட் மைக்ரோப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி அப்படியே நகர்ந்து டயாபெட்டிக் எலியின் மைக்ரோ ஆர்கானிஸத்திற்கும் சாதாரண எலி மற்றும் விலங்குகளுக்கிடையே நடத்தப்பட்டது.How Diabetes Fosters Gum Disease?CT ஸ்கேன் ரிப்போர்ட் படி 42 % எலும்பு இழப்பு மற்றும் மைக்ரோபியம் மற்ற எலிகளைக்காட்டிலும் டயாபெட்டீக் எலியில் அதிகமாக உள்ளது என்பதை தெரிவித்தது.
மேலும் டயாபெட்டீக் எலிகளிடமிருந்து மற்ற எலிகளுக்கு பரவிய பற்களின் எலும்பு இழப்பு பிரச்சினை ஆன்டி IL17 மூலம் தீவிரமாகுவது குறைக்கப்பட்டது.
இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிவது என்னவென்றால் டயாபெட்டீஸ் வாயில் மைக்ரோபியம் மூலம் பல் வீக்கம் மற்றும் எலும்பு இழப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறதாம்.
ஆன்டி பாடி IL17 இந்த பற்கள் வீக்கம் மற்றும் எலும்பு பிரச்சினையை எலிகளில் குறைப்பதால் மனிதருக்கும் இந்த பிரச்சினையை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.How Diabetes Fosters Gum Disease?இந்த ஆராய்ச்சி ரிப்போர்ட் டயாபெட்டிக் நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து பல் ஈறுகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள பரந்துரைக்கப்படுகிறது.
டயாபெட்டீஸ் நோயானது பீரியோடென்டல் நோயுடன் தொடர்புடையதாக இருப்பதால் நோயாளிகள் தங்கள் பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் ஈறு நோய் பிரச்சினை வருவதை குறைக்கலாம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...