Friday, 1 September 2017

இத செஞ்சா ஜிம் போகாமலே உடலை ஃபிட்டாக்கலாம்! எப்படி தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தில் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பிட்னசில் அதிகமான அக்கறை செலுத்தி வருகிறது இன்றைய தலைமுறை. துரித உணவுகள் பக்கம் ஓடும் அதே நேரத்தில் புதுப்புது டயட்டுகள், ஜிம், ஜாக்கிங்  என்று பல விஷயங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள்.
இவை எல்லாவற்றையும் விட பிட்னஸுக்கு எக்சர்சைஸ் மட்டும் வேண்டாம் கலையோடு சேர்ந்த விஷயமாக இருக்கட்டும் என்றெண்ணி பிட்னஸ் டான்ஸ்களும் இன்று நிறைய வந்துவிட்டது. உடல் ஆரோக்கியத்திற்காகத் செய்யப்படும் டான்சகளை பற்றிய தொகுப்புபாலட் டான்ஸ் :

பாலட் டான்ஸ் :

உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும். தசைகளுக்கு நிறைய வேலை அளிப்பவை என்பதால் சதைகளும் ஆரோக்கியமாக இருக்கும். பெரும்பாலும் சுற்றுதலும் உடலை பேலனிசிங்காக வைத்துக் கொள்ளக்கூடிய ஸ்டெப்ஸ்களே அதிகம் வரும்.கால்,தொடை, பகுதிகள் நல்ல வடிவமாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.இதனை வீட்டில் தனியாக பயிற்சி செய்வதை விட தகுந்த பயிற்றுனரின் உதவியுடன் பயிற்சி செய்வதே சிறந்தது.ஸ்விங் டான்ஸ் :

ஸ்விங் டான்ஸ் :

லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை டான்ஸிற்கு தனியாக ரூல்ஸ் எல்லாம் எதுவும் இல்லை. நண்பர்கள் பலர் ஒரு இடத்தில் ஒன்று கூடி ஒரு மணி நேரம் வரை ஆட வேண்டும், சில ஸ்விங் கிளப் துவங்கப்பட்டு அதன் மூலமாக பலரை ஒன்றிணைத்து ஆடுகிறார்கள். உங்களுக்கு பிடித்தமான ஆடை எதுவும் அணிந்து கொள்ளலாம். இந்த வகை நடனத்தில் ஒரு மணி நேரத்தில் 300 கலோரி குறைத்திட வேண்டும் என்பது தான் அவர்களுது ஒரே குறிக்கோள்.பெல்லி டான்ஸ் :

பெல்லி டான்ஸ் :

நம் உடலை செதுக்கும் இவ்வகை நடன அமைப்பிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அடிவயிற்று தசையை குறைக்கச் செய்யும். ஏரோபிக்ஸ் ஸ்டெப்ஸ் சில வந்தாலும் பெரும்பாலும் வயிற்றுக்கு அசைவு கொடுக்கிற மாதிரியான ஸ்டெப்ஸ்கள் அதிகமிருக்கும். முதுகுவலி, ஷோல்டர் வலி இருப்பவர்கள் இந்த வகை நடனத்தை ஆடலாம். அதிரடியான ஸ்டெப்ஸ்கள் இல்லாமல் மைல்ட்டான ஸ்டெப்ஸ்களே அதிகமிருப்பதால் கர்ப்பிணிகள், வயதோனோர் ஆடலாம்.ஜும்பா :

ஜும்பா :

நம் ஊரில் இது மிகப்பிரபலம். பாட்டிற்கேற்ப சின்ன சின்ன டான்ஸ் ஸ்டெப்ஸ்கள், நம் உடலை நல்ல கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும். இதற்கு டிஷர்ட், ஷார்ட்ஸ் அல்லது லெகின்ஸ் டான்ஸ் விட்னஸ் ஷூஸ் முக்கியம்.டேப் டான்ஸ்:

டேப் டான்ஸ்:

முழுவதும் கால்கள் அசைந்து கொண்டேயிருக்க வேண்டும். எப்படி ஆடினாலும் முழு உடலின் எடையை கால் தாங்கிடும். ஒரு காலை ஊன்றி குதிப்பது, இன்னொரு காலை மேலே தூக்கியவாரே ஒற்றைக்காலுடன் ஆடுவது, என்று இருக்கும். இந்த வகை நடனத்திற்கும் டிஷர்ட்-லெகின்ஸ்,ஷார்ட்ஸ்,ஷூ அவசியம்.உடம்பில் தசைகள் தொங்காமல் இருக்க செதுக்குவது போல இந்த வகை நடனத்தை ஆடினால் ஒரு மணி நேரத்திற்கு 250 கலோரி வரை குறைக்கலாம்.சல்ஸா டான்ஸ் :

சல்ஸா டான்ஸ் :

இந்த வகை நடனத்தில் நீங்கள் ஆடுவது பொறுத்து 600 கலோரி வரை குறைக்க முடியும். அடிப்படையான சில ஸ்டெப்ஸ்களை கால்களுக்கு இருந்தாலும் பெரும்பாலானவை உங்கள் மொத்த உடலுக்கும் சேர்த்தே இருக்கும்.
தசைகளுக்கு மட்டுமல்லாமல் எலும்புக்கும் சேர்த்தே இது வலுசேர்க்கும். எந்த வகையினரும் இதனை ஆடலாம். ஆர்த்தடைட்டீஸ் வருவதை தடுத்திடும்.லைன் டான்ஸ் :

லைன் டான்ஸ் :

வயதானவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ். அதிரும்படியாகவோ, வேக வேகமான ஸ்டெப்ஸ்களோ இருக்காது மைல்ட்டான, லேசாக அசைவுகள் கொண்ட ஸ்டெப்ஸ்களே அதிகமிருக்கும். இதற்கும் டான்ஸ் பாட்னர் எல்லாம் தேவியில்லை வரிசையாக நின்று ஆடுவர்.நியா டான்ஸ் :

நியா டான்ஸ் :

ஓர் நடனம், ஓர் தற்காப்பு கலை,யோகா எல்லாம் கலந்த கலவை தான் இந்த நியா. ஏரோபிக் நடனப்பயிற்றுனர் இருவர் சேர்ந்த இந்த நடன அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். பெரிய அறையில் நடனம் ஆடும் இவர்கள் அறை முழுமைக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது விதி. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வெளியில் நினைத்தால் மட்டும் போதாது மனதளவில் அதற்கு நாம் தயாராக வேண்டும். அதே போல இது வெறும் டயட் மற்றும்
எக்சர்ஸைஸ்களால் மட்டும் நடைபெறுவதல்ல உடலும் மனமும் சேர்ந்தே இதில் முக்கிய பங்காற்றுகிறது என்று சொல்கிறார்கள் இந்த நடன வடிவமைப்பாளர்கள்

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...