சாப்பிட்டு முடித்தவுடன் லேசாக தூக்கம் வரும்... என்ன சாப்பிட்ட மயக்கமா என்று கிண்டலாக கேட்டிருப்போம் அப்படி தூங்குவோரை கிண்டலும் செய்திருப்போம். இந்த கட்டுரையை தொடர்ந்து படித்தால் இனி அப்படி செய்ய மாட்டீர்கள்.
ஒரு நாளில் நீங்கள் தூங்கும் குட்டித் தூக்கம் என்பது உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது லியாண்டோ டாவின்சி,ஐன்ஸ்டீன்,எடிசன் போன்ற மேதைகள், அறிவியலாளர்கள் எல்லாம் குட்டித்தூக்கம் போடுபவர்களாகத்தான் இருந்தார்கள்.
குட்டித்தூக்கத்தின் வகைகள் :
இது மொத்தம் மூன்று வகைப்படும். முதல் வகையில் திட்டமிட்ட நேரத்தில் தூங்குவது, இரண்டாம் வகை, நம்மையும் அறியாமல் அல்லது வேலைப் பளு காரணமாக செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் போது நம்மையும் அறியாமல் தூங்குவது. மூன்றாம் வகை பழக்கப்பட்ட குட்டித்தூக்கம்.தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்குவது.
எச்சரிக்கை உணர்வு :
எப்போதும் ஒரு விழிப்புணர்வுடன் இருக்க உதவுகிறது. விமானத்தில் விமானிகளுக்கு எல்லாம் தூங்குவதற்கான நேரமிருக்காது. பெரும்பாலும் இப்படியான குட்டித்தூக்கம் இருந்தால் எதையும் எச்சரிக்கையாக அணுக முடியும். அத்துடன் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும்.
நினைவுத் திறனை அதிகரிக்கும் :
பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அது புத்தாக்கம் பெறும். அத்துடன் தொடர்ந்து டம்ப் செய்வது போல் அல்லாமல் இப்படி நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும்.
மன அழுத்தம் :
தொடர்ந்து இப்படியான குட்டித்தூக்கம் மூலமாக ஓய்வு எடுக்கும் பட்சத்தில் மன அழுத்தம் குறையும். அத்துடன் ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும். டென்சனை கன்ட்ரோல் செய்தாலே உடலில் ஏற்படுகின்ற முக்கால்வாசி பிரச்சனைகளை தவிர்த்திடலாம்.
ரத்தநாளங்கள் சுறுசுறுப்படையும் :
ஒரு நாள் சரியான தூக்கம் இல்லையென்றாலே நம்முடைய ரத்த நாளங்கள் பாதிப்படையும். இதனால் இதயப் பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற நேரங்களில் இந்த குட்டித் தூக்கம் பெரிதும் உதவியாய் இருக்கும். மூளைக்கு தேவையான ஓய்வு கொடுப்பதால் ரத்த நாளங்கள் சுறுசுறுப்படையும். இதனால் ரத்த ஓட்டமும் சீராகும்.
கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் :
புதிய நாளை துவங்குவது போன்று குட்டித்தூக்கம் முடிந்து எழும் போது உணர்வீர்கள். இதனால் புதிதாக ஒரு விஷயத்தை துவங்கும் போதோ அல்லது புதிய பாடத்தை படிப்பதற்கு முன்னால் இப்படியான குட்டித்தூக்கம் போட்டால் கூர்ந்து கவனிக்க ஏதுவாக இருக்கும்.
நிதானத்துடன் முடிவெடுக்க முடியும் :
அவ்வப்போது இது போன்ற ஓய்வு நம் மூளைக்கு கண்டிப்பாக தேவை. பல வேலைகளை அடுத்தடுத்து செய்து கொண்டிருக்கும் போது திடீரென எடுக்கப்பட்ட முடிவுகள் நமக்கு சிக்கலையே ஏற்படுத்தும். குட்டித் தூக்கத்திற்கு பிறகு எந்த வித யோசனைகளும் இன்றி மனம் அமைதியாக இருக்கும் என்பதால் அந்நேரத்தில் சரியான முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.
மறதி நோய் :
குறைவான தூக்கம் அன்றைய நாளை கடினமானதாக மாற்றுவதுடன் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவர்களுக்கு வயதான காலத்தில் அல்சைமர் எனப்படும் மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது போன்ற குட்டித்தூக்கம் தொடர்ந்தால் மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்
எப்படி தூங்க வேண்டும்?
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தை குட்டித்தூக்கத்திற்கு ஒதுக்குங்கள். அதிக வெளிச்சமில்லாத அமைதியான இடம் இருந்தால் நன்று. 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தூங்கலாம். இதற்கு மேலே சென்றால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படும். இரவு நீண்ட நேரம் முழித்திருந்தால் காலையில் எழுவது பிரச்சனையாகும். இதனால் உங்களின் தூக்க சுழற்சி பாதிக்கப்படும்.
No comments:
Post a Comment