உலகையே அச்சுறுத்திய ஜிகா வைரஸ் தாக்கினால் என்ன மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரம்ப நாட்களிலேயே அதனைக் கண்டறிந்து தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நன்று.
காய்ச்சல் :
சாதரணமாக ஒரு மனிதனுக்கு டெம்ப்பரேச்சர் 37.5 டிகிரி வரை இருக்கும். ஆனால் ஜிகா வைரஸ் தாக்கினால் 38.5 டிகிரி வரை காய்ச்சல் ஏற்படும்.
தண்ணீர் :
இவர்களுக்கு உடலிலுள்ள தண்ணீர் சத்து எல்லாம் சீக்கிரமாக வறண்டு போக ஆரம்பிக்கும். உடலிலுள்ள ரத்தத்தின் அளவும் வெகுவாக குறைந்திடும். அதிகமாக வியர்க்கும்.
கண் பாதிப்பு :
கண்கள் வறண்டு போகுதல், கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்றவை ஏற்படும். சாதரண கண் வலி போன்ற அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.
சருமம் :
சில நேரங்களில் சருமத்தில் அரிப்பையும் ஏற்படுத்தும். தோல் சிவந்து திட்டு திட்டாக மாறும்.
சோம்பல் :
உடலிலுள்ள நீர்ச்சத்து எல்லாம் குறைந்துவிடுவதால், ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள்.
தசை வலி:
தசைகளை எல்லாம் இறுக்குவது போன்றதொரு வலி உண்டாகும். கை,கால் முட்டிகளில் வீக்கம் உண்டாகும்.
அமைதி :
நம் உடலில் நோய்த் தொற்று ஏற்பட்டவுடனேயே நமக்கு அறிகுறிகள் தெரியாது. மெதுவாகவே தெரிய ஆரம்பிக்கும்.
டெங்கு :
டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் வகைகளில் ஒரு வகை தான் இந்த ஜிகா. அதனால் அறிகுறிகள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாக கூட இருக்கலாம்.
மருத்துவ கண்காணிப்பு :
ஆரம்ப அறிகுறிகளின் போதே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றிடுங்கள். இன்குபேஷன் பீரியட் என்று சொல்லப்படுகிற இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை நடத்தப்படும் மருத்துவ சோதனைகளில் தான் ஜிகா வைரஸ் இருக்கிறதா இல்லையா என உறுதியாகும்.
No comments:
Post a Comment