தென்னை மரம் தான் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான மரமாகும். கோக்கோ நியூசிஃபெரா என்பது இதன் அறிவியல் பெயர். இதிலிருந்து கிடைக்கும் தேங்காய் பல மில்லியன் மக்களின் உணவாக உலகெங்கும் பயன்படுகிறது.
சரியான காலநிலையை கொண்டு இருப்பதால் தேங்காய் உற்பத்தியில் நமது இந்தியா தான் 3 வது இடமாக இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ்க்கு அடுத்ததாக உள்ளது. தென்னிந்திய தான் இதற்கு மிகவும் தகுந்த இடமாக உள்ளது.
இந்த மரம் 30 மீட்டர் உயரமும் ஒரு நேரத்தில் 12 தேங்காய்களை கொடுக்கும் தன்மையும் வாய்ந்தது . இந்த தேங்காயின் வெளிப்புற பிரவுன் கலர் ஓட்டை உடைத்து பார்த்தால் உள்ளே வெள்ளை நிற சாப்பிடக் கூடிய தேங்காய் உணவு இருக்கும்.
நல்ல உயரமான அல்லது குட்டையான என்று நிறைய மர வகைகள் இதில் இருக்கின்றன. இதன் விதைகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். தேங்காய் தண்ணீர், எண்ணெய், பால், க்ரீம், நட்ஸ் போன்ற நிறைய பயன்கள் இதில் கிடைக்கின்றன. இதன் பயன்கள் மருத்துவத்திலும் நீள்கின்றன.
இந்த தேங்காயை இந்தியாவில் கடவுளுக்கு படைத்து வழிபடுவது ஒரு சம்பிரதாயமாக வைத்துள்ளனர்.தேங்காயின் சத்துக்களின் பட்டியல்
100 கிராம் தேங்காயில் 354 கலோரிகள் இருக்கின்றன. கொழுப்புகள்-33.49 கிராம்
பொட்டாசியம் - 356 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 51 மில்லி கிராம்
சோடியம் - 20 மில்லி கிராம்
புரோட்டீன் - 3.33 கிராம்
சுகர்-6.23 கிராம்
இரும்புச் சத்து -2 மில்லி கிராம்
கொலஸ்ட்ரால்-0
விட்டமின் சி - 3.3 மில்லி கிராம்
கால்சியம் - 14 மில்லி கிராம்
ஜிங்க் - 1.10 மில்லி கிராம்
மக்னீசியம் - 32 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 113 மில்லி கிராம்
வைட்டமின்கள் :மேலும் இதி்ல் மைக்ரோ கிராம் அளவில் விட்டமின் பி3, பி6, பி1 மற்றும் போலிக் அமிலம் போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன.
கால்சியம்
இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளது.தேங்காயின் உடல்நல நன்மைகள்
இதயத்தை பாதுகாத்தல்
இதுவரை தேங்காய் எண்ணெய் உங்களுக்கு இதய நோய்களை ஏற்படுத்தும் என்ற எண்ணம் தான் நம்முள் இருக்கிறது . ஆனால் இதில் மீடியம் சேச்சுரேட் அமிலம் நேரடியாக குடல் களால் உறிஞ்சப்பட்டு மெட்டா பாலிசத்திற்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுவதால் கொலஸ்ட்ரால் ஏற்படுவதே இல்லை. இதில் உள்ள புரோட்டீன் ஹைப்போலிமிடமிக் விளைவு எல்-அர்ஜினைன்யால் ஏற்படுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆர்த்ரோகிளோரஸிஸ் பொருள் கீழ்வாதம் ஏற்படுவதை தடுக்கிறது.
கிருமி எதிர்ப்புத் திறன் :
தேங்காய் எண்ணெய் நிறைய வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவது நீருபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கொழுப்பு அமில சங்கிலி வைரல்களை தாக்கி கொன்று விடுகின்றன. லிப்பிட்டால் ஆன வைரஸ்கள் இன்புலன்ஸா வைரஸ், நிமோனா வைரஸ், ஹெப்பாட்டிஸ் சி வைரஸ் போன்றவற்றை அழிக்கிறது.
உங்கள் குழந்தைக்கு டயாபர் ரேஸஸ் ஏற்பட்டால் முதலில் பரிந்துரைப்பது தேங்காய் எண்ணெய் தான். இது ஸ்போர் ஜெர்மினேசன் மற்றும் மைக்ரோபஸ்யை தடுக்கிறது.
இதில் உள்ள கொழுப்பு அமில சங்கிலி பாக்டீரியாவை எளிதில் கண்டுபிடித்து எதிர்த்து போரிடுகிறது. அல்சர், சைனஸ், டென்டல் கேவிட்டீஸ், புட் பாய்ஸ்ஷனிங், சிறுநீரக தொற்று போன்றவற்றை சரியாக்குகிறது. காலரா நோயாளிகளுக்கு இளநீர் மற்றவற்றை காட்டிலும் மிகவும் சிறந்தது.பாதுகாப்பு செயல்கள்
இதில் உள்ள லாரிக் அமிலம் ஆன்டி மைக்ரோபியல் செயல்களை கொடுக்கிறது. தேங்காய் மாவு சில வாய்ப் பிரச்சினைகளான வாய்ப்புண்களை சரி செய்யும். இந்த மரத்தின் வேர்களை கொதிக்க வைத்து வந்த தண்ணீரை வாய் கொப்பளிக்க பயன்படுத்தினால் நல்லது. தேங்காயில் உள்ள ட்ரைகிளிசரைட்ஸ் சங்கிலி சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக வடிகுழாயில் ஏற்படும் கற்களை கரைக்கிறது.
தேங்காய் தண்ணீரில் உள்ள பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்றவை ஆஸ்மோட்டிக் அழுத்தத்தை சரியான அளவில் சவ்வுகளில் ஏற்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் இன்சுலின் சுரப்பதற்கு உதவுவதோடு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
தேங்காய் எண்ணெய்யில் உள்ள ஜிங்க் நமது உடலில் உள்ள Tc செல்கள் (cytotoxic T cells) மற்றும் Th செல்கள் (helper T cells) இவற்றை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இளநீர் கனிமங்களால் ஏற்படும் நச்சுக்களையும், அமிலிரோட் மாத்திரைகளால் ஏற்படும் நச்சுக்களையும் நீக்குகிறது. இதில் உள்ள அமினோ அமிலம் எல்-அர்ஜினைன் கேன்சரை தடுக்கிறது.
இளநீர் ஹெப்ட்டோ விளைவுகளை உண்டு பண்ணுவது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இரத்தம் கட்டுதலை தடுத்தல் தேங்காய் எண்ணெய்யில் உள்ள ஆன்டி த்ராம்போட்டிக் விளைவு இரத்தம் கட்டுதலை தடுக்கிறது.
தேங்காயை வைத்து செய்த ஆராய்ச்சியில் இதில் உள்ள கீட்டோன்ஸ் மற்றும் அமினோ அமிலங்கள் லிப்பிட் சுவருடைய பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி கேன்சரை தடுக்கிறது.
இதில் உள்ள மீடியம் சங்கிலி அமினோ அமிலங்கள் கொழுப்புகளை எரித்து மெட்டா பாலிசத்தை அதிகரித்து எடையை குறைக்கிறது.
எப்படி தேங்காயை பயன்படுத்தலாம் .இளநீர் தாகத்தை தணிப்பதற்காக கோடைகாலத்தில் பயன்படுகிறது. இதை விற்பவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் சமையல் மற்றும் பியூட்டி பராமரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.
அழகு நன்மைகள் :
தேங்காய் எண்ணெய் இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முடியின் வளர்ச்சிக்கும், வறண்ட முடியை சரி செய்வதற்கும், தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. கொசு மற்றும் பூச்சிக் கடிக்கு மருந்தாக தேங்காய் எண்ணெய் செயல்படுகிறது
தேங்காயின் பக்க விளைவுகள் :
தேங்காயை சரியான அளவு எடுத்துக் கொண்டால் எந்த வித விளைவும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது வாயுப் பிரச்சினை, கலோரி அதிகமாகுதல், சுகர் மற்றும் கொழுப்பு மற்றும் அலர்ஜி போன்றவைகளும் ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு சரியான அளவில் தேங்காயை பயன்படுத்தி எல்லா விதமான நலன்களையும் பெறுங்கள்.
No comments:
Post a Comment