நம் உணவுப்பொருட்களில் எப்போதும் பாலுக்கு மிக முக்கிய இடமுண்டு. உணவு சாப்பிடுவதை விட பால் குடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அதிகம். பாலில் சத்துக்கள் அதிகம் அது ஒரு சர்வரோக நிவாரணி என்கிற ரீதியில் தான் பால் நமக்கெல்லாம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
பால் குறித்து நிலவும் தவறான கருத்துக்களும் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சில உண்மைகளும் இங்கே.
பால் முழுமையான உணவு :
பாலில் ப்ரோட்டீன், கால்சியம், விட்டமின்,பொட்டாசியம்,மக்னீசியம் போன்ற சத்துக்கள் எல்லாம் நிறைந்திருக்கிறது.உணவு சாப்பிடாவிட்டாலும் பால் குடித்தால் போதும் போன்ற சமாதனங்களை பல முறை கேட்டிருப்போம்.தொடர்ந்து இப்படி செய்வதால் உடலில் இரும்பச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்றவை ஏற்படும்.
உணவின் ஒரு பகுதி:
சாப்பிடும் உணவாகவே பால் இருப்பது தவறு. காலையில் சரிவிகித உணவு அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பால் குடித்தால் எல்லாச் சத்துக்களும் கிடைத்துவிடும் என்று காலையில் ஒரு டம்பளர் பால் குடித்துச் செல்பவர்கள் பின்னாட்களில் பல்வேறு உடல் உபாதைகளை சந்திப்பர்.
காலை உணவு :
காலை உணவில் கார்போஹைட்ரேட், ப்ரோட்டீன்ஸ் போன்றவை நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். நீண்ட நேரம் இடைவேளி இருப்பதால் மூளைக்கு குளோக்கோஸ் தேவைப்படும். அதனால் வெறும் பாலை காலை உணவாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கால்சியம் :
பால் குடித்தால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். பாலை விட ராகி,ராஜ்மா, சோயாபீன்ஸ் போன்றவற்றில் பன்மடங்கு அதிகமான கால்சியம் சத்துக்கள் இருக்கின்றன. கால்சியம் சத்து கிடைப்பதற்கான ஒரே வழி பால் மட்டும் தான் என்கிற தவறான புரிதலை கைவிட விட வேண்டும்.
கால்சியம் நண்பன் :
என்ன தான் கால்சியம் வேண்டுமென சத்து நிறைந்துள்ள உணவுப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதனை ஈர்த்து உடலில் கால்சியம் சத்தை சேர்க்கும் விட்டமின் டி அவசியம். விட்டமின் டி சத்து இருந்தால் தான் நாம் எடுக்கும் கால்சியம் சரியாக உடலில் சத்தாக சென்று சேரும்.
எலும்பு இரும்பாகும் :
பால் குடித்தால் எலும்புக்கு வலு சேர்க்கும் என்பதில்லை. எலும்பு முறிவு ஏற்ப்பட்டால் கூட சேர்க்கும் தனித்துவமான சத்துக்கள் எல்லாம் எதுவும் பாலில் இல்லை.
தூக்கம் தரும் பால் :
பாலில் இருக்கும் அமினோ ஆசிட், தூக்கத்திற்கு உதவும் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்கிறது. அதனால் இரவு நேரத்தில் பால் குடித்தால் தான் தூங்க முடியும் என்பது போல பால் திணிப்பது தவறு, என்னதான் லிட்டர் கணக்காக பால் குடித்தாலும் சஞ்சலத்துடன் இருக்கும் மனதிற்கு தூக்கம் வராது. நிம்மதியான தூக்கத்திற்கு அமைதியான அலைபாயத மனம் இருந்தாலே போதும்.
No comments:
Post a Comment