ஸ்லீப்பிங் ஜோசியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரும்பாலானோருக்கு இருக்கும் உடல்நலப்பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை.நேரத்திற்கு தூங்கச் சென்றாலும் இரவுகளில் திடீரென முழிப்பு வருவது, இரவில் எவ்வளவு தாமதமாக தூங்கினாலும் சரியாக நடு இரவில் விழித்துக் கொள்வது என நிம்மதியான ஆழ்ந்த தூக்கமின்றி சிரமப்படுவர்.
இரவில் முழிப்பு வரும் நேரத்தை வைத்து பாதிக்கப்பட்ட நபரைப் பற்றி அறியலாம்.
9 மணி முதல் 11 மணி வரை :
பொதுவாக,பெரும்பாலானோர் இந்நேரத்தில் தான் தூங்குவர். இந்நேரத்தில் உங்களால் தூங்க முடியவில்லை என்றால் உங்களுக்கு மனரீதியான பிரச்சனைகள், ஏக்கம்,கவலை போன்றவை இருக்கும்.
11 மணி முதல் 1 மணி வரை :
இவர்களுக்கு உணர்வு ரீதியாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஏமாற்றம், தீர்க்க முடியாத சங்கடங்கள் இருந்தால் இந்நேரத்தில் முழிப்பு வரும்.
1மணி முதல் 3 மணி வரை :
இந்நேரத்தில் முழித்துக் கொள்கிறவர்களுக்கு அதீத கோபம் வரும். தூங்குவதற்கு முன்னால் அமைதியான சூழலை ஏற்படுத்தி நிம்மதியாக தூங்கச் செல்லவும்.
3 மணி முதல் 5 மணி வரை :
அவசரம், வேகமாக முடிக்க வேண்டும் என்கிற பதட்டம், எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள், திட்டமிட்டுக் கொண்டேயிருப்பவர்களின் மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். அவர்கள் இந்நேரத்தில் முழிப்பர்.
No comments:
Post a Comment