இரத்தசோகை இந்திய பெண்களுக்கு அதிகளவில் காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களில் ஏற்படும் குறைபாடு தான் இரத்தசோகை என அழைக்கப்படுகிறது. இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன.நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே இரத்தசோகை என்கிறோம்.
பெண்களுக்கு பாதிப்பு அதிகம்
பெண்களுக்கு இரத்தசோகை பாதிப்பு அதிகம், அதிலும் 18-45 வயதிற்குள் இருக்கும் பெண்கள் இரத்தசோகையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இரத்தசோகை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இரும்புசத்து குறைபாடு
இந்தியாவில் பெரும்பாலும் இந்த இரத்தசோகை, இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் இரத்தசோகை தாக்கும் என்றாலும், பெண்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இரத்தசோகை இருந்தால், குழந்தைக்கும் போதுமான அளவு இரும்புச்சத்து கிடைக்காமல் போய்விடும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சரிவிகித உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
இதனை எப்படி கண்டறிவது?
எப்போதும் சோர்வாக உணர்வது, பசி எடுக்காமல் இருப்பது, எந்த செயல்களிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது, தூக்கம் வருவது போல இருப்பது, கண்களின் கீழ்ப்பகுதி, நாக்கு, மேல்லண்ணம், விரல் நகங்கள் ஆகியவை சிவப்பு நிறத்தில் இல்லாமல் வெளுத்த நிறத்தில் இருப்பது போன்றவை இரத்தசோகையின் அறிகுறிகள் ஆகும்.
பரிசோதனை
இரத்தசோகையை சாதரணமாக நினைத்து விடக் கூடாது. தகுந்த பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியமாகும். நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானலும் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
என்ன சாப்பிடலாம்
இரத்தசோகை வரமால் இருக்க சரிவிகித உணவு, அதாவது நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக உணவில் முட்டை, பேரிச்சை, பால், இறைச்சி, கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.
No comments:
Post a Comment