உங்கள் குழந்தைகளின் குடலில் இருக்கும் பன்முகத்தன்மைவாய்ந்த வைரஸ்களால் டைப் 1டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
டைப் 1 டயாபெட்டீஸ் என்பது க்ரோனிக் ஆட்டோ இம்னியூ டிஷூஸ்(Chronic auto immune disease). இதில் நமது நோயெதிர்ப்பு சக்தி செல்கள் அழிந்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் இன்சுலின் ஊசி மற்றும் தொடர்ந்து கண்காணிப்பு தேவைப்படுகிறது.இந்த ஆய்வின் தகவல் படி குழந்தைகளின் குடலில் இருக்கும் வைரஸ்கள் அவர்களின் நோய் எதிர்ப்பு செல்களை அழித்து டைப் 1 டயாபெட்டீஸ்யை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் குழந்தைகளின் குடலில் " சர்க்கோரிடி பேமிலி" வகுப்பைச் சார்ந்த வைரஸ்கள் மற்ற வகையான வைரஸ்களை காட்டிலும் குறைந்த அளவு டயாபெட்டீஸ் விளைவை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வின் கருத்தாகும்.
அதே நேரத்தில் குழந்தைகளின் குடலில் பாக்டீரியோபேஜஸ் இருந்தால் குடலில் உள்ள பாப்டீரியோட்ஸ் நுண்ணுயிரிகளை அழித்து டயாபெட்டீஸ் 1 க்கு வழிவகை செய்கின்றது.இதிலிருந்து தெரிவது என்னவென்றால் சில வைரஸ்கள் நோயின் தீவிரத்தை குறைக்கிறது மற்ற வைரஸ்கள் உடலின் நோய் எதிர்ப்பு செல்களுக்கு எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது என்று ஹெர்பர்ட் ஸ்கிப் வெர்ஜின் IV புரபொசர் வாசிங்டனிலிருந்து கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் நேஷனல் அகாடமி ஆஃப் சைன்ஸ்யில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ள 22 குழந்தைகளை ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இது டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்பை தடுக்கும் முதற்படியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த காலத்தில் நிறைய ஆட்டோ இம்னியூ நோய்கள் வருகின்றன. இதற்கு காரணம் நாம் பல வகையான வைரஸ்களால் நம் நோய் எதிர்ப்பு செல்களை இழந்து கொண்டு இருப்பது தான்.
எனவே உங்கள் உடலை தொடர்ந்து கண்காணித்து வைரஸின் தாக்கத்தை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment