சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ டீ, காபி மட்டும் இருந்தா போதும்னு நினைக்கிறவர்களை நாம் சந்தித்திருப்போம், அந்த அளவுக்கு டீ, காபி நம் இந்தியாவில் மிக பிரபலமாக உள்ளது. நீங்கள் வட இந்தியாவில் பல இடங்களில் டீ, காபி போன்றவை மண் கப்களில் கொடுக்கப்படுவதை காணலாம்.
நம்ம ஊர் பகுதிகளில் இன்னமும் கூட மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி குடிப்பார்கள். மண் பானையில் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே போல தான் வட இந்தியாவில், மண் கப்களில் டீ குடிக்கிறார்கள்.
இந்த மண்கப்களில் டீ குடிக்கும் போது நீங்கள் டீயின் அலாதியான சுவை பெற முடியும். மண் வாசனையின் நறுமணமும் உடன் சேர்ந்து கொண்டு உங்களை கிராமப்புறத்திற்கே அழைத்து சென்றுவிடும்.
மற்ற மெட்டிரியல்களால் செய்யப்பட்ட பொருட்களில் டீ, காபி குடிப்பதை விட மண்பானையில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.
1. ஸ்டேரோபோர்ம்:
சில இடங்களில் டீ ஸ்டேரோபோர்ம் கப்களில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கப்கள் மிகவும் ஆபத்தனவை என்று எத்தனை பேருக்கு தெரியும்? இது பாலிஸ்டிரைன் மெட்டிரியலால் செய்யப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்க்கு கேடு விளைவிக்கும்.
2. ஸ்டேரோபோர்மால் என்னவாகும்?
ஸ்டைரீன் என்ற கெமிக்கல் சோர்வு, ஹார்மோன் பிரச்சினைகள், கவனம் இல்லாமை, சளி பிரச்சனைகள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் களிமண் கப் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
3. சுற்றுசூழல் பாதுகாப்பு
மண்கப்களை பயன்படுத்துவது நமது உடல்நலத்திற்கு மட்டுமின்றி, சுற்றுசூழலுக்கும் பாதுகாப்பானது. மண் கப்களை நீங்கள் தூக்கி வீசிவிட்டால், அது மிகக்குறுகிய காலத்தில், மண்ணுடன் கலந்து விடும்.
ஆனால் ஸ்டிரோபோர்ம் கப்கள் மண்ணுடன் கலக்க 500 வருடங்களுக்கு மேல் ஆகும். இவை சுற்றுசூழலுக்கும், மரம், செடி, கொடிகளுக்கு பாதுகாப்பானது அல்ல.
4. மற்ற பொருட்களால் என்ன பிரச்சனை?
நீங்கள் ரோட்டு கடைகளில் டீ குடிப்பவராக இருந்தால், அங்கு எவர்சில்வர் அல்லது கண்ணாடி கப்களில் டீ கொடுத்தாலும் உங்களுக்கு நோய் தொற்றுகள் உண்டாகும். அது எப்படி?
அங்கே வெறும் தண்ணீரில் மட்டும் டீ கப்களை கழுவுகிறார்கள், அதனை பல பேர் பயன்படுத்தியிருப்பார்கள். வெறுமனே தண்ணீரில் கழுவினால் மட்டும் பாக்டீரியாக்கள் போய்விடாது. இதனால் உங்களுக்கு நோய் தொற்றுகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்.
5. சுத்தமாக இல்லை என்றால்?
நீங்கள் குடிக்கும் கண்ணாடி கப் சுத்தமாக இல்லை என்றால், உங்களுக்கு வயிற்றுப்போக்கு, ஜீரண பிரச்சனை ஆகியவை வரும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் மண்கப்களில் இது போன்று நடக்க வாய்ப்பில்லை.
6. மண்கப்கள்
களிமண்கப்களில் நீங்கள் டீ குடிப்பதால் உங்களது உடலில் உள்ள அமிலத்தன்மை அப்படியே தக்க வைக்கப்படுகிறது.
7. பிளாஸ்டிக் கப் அபாயம்
நீங்கள் மண்கப்களில் லஸ்ஸி, டீ, காபி, தண்ணீர் என எதை வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் பிளாஸ்டிக் கப் அபாயகரமானது. அதில் அடங்கியுள்ள கெமிக்கல்களால் நிறைய ஆரோக்கிய கேடுகள் உருவாகின்றன.
No comments:
Post a Comment