நமது மனதில் நேர்மறையான சிந்தனைகள் இருந்தால், நமக்கு நல்லதே நடக்கும். ஆனால் சில சமயங்களில் தோன்றும் எதிர்மறையான சிந்தனைகளால் நமது மனம் குழப்பத்திற்கு ஆளாவதோடு, வாழ்க்கையே நிம்மதியில்லாமல் போய்விடும். இந்த எதிர்மறை சிந்தனைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
2. அமைதியான இடம்
ஒரு அமைதியான இடத்தில் உங்களது கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் அமருங்கள். இடையுறுகள் இல்லாத இடங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
2. மனதை ஒருமுகப்படுத்துதல்
உங்களது நினைவுகளை எல்லாம் உங்கள் மூச்சின் மீது மட்டும் வையுங்கள். வேறு எந்த விஷயத்தையும் பற்றி யோசிக்காதீர்கள். அவ்வாறு யோசிப்பது உங்களுக்கு சிரமத்தை உண்டாக்கும்.
3. இரசனை
உங்களது சிந்தனைகள் உங்களுக்கு எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை சிந்தியுங்கள். நீங்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது மற்றும் சுவைப்பது அனைத்தையும் இரசித்து செய்யுங்கள்.
4. எதிர்மறை எண்ணம்
உங்களது மனதில் இருந்து எந்த ஒரு செயல் எதிர்மறை எண்ணங்களை நீக்கும் என்பது குறித்து சிந்தியுங்கள்
5. எதை நீக்க வேண்டும்
அடுத்து நீங்கள் உங்களது மனதில் இருந்து எந்த எண்ணத்தை நீக்க வேண்டும் என்பது குறித்து சிந்தியுங்கள்.
6.நேர்மறை எண்ணம்
அந்த எதிர்மறை எண்ணத்தை போக்கும் ஒரு நேர்மறையான, மகிழ்ச்சியான விஷயத்தை பற்றி நினைத்து, உங்களது எதிர்மறை எண்ணங்களை வெல்லுங்கள்.
7. மகிழ்ச்சி
இப்போது மெதுவாக கண்களை திறந்து, ஆழமாக சுவாசியுங்கள். மகிழ்ச்சியாக ஒரு நடை போடுங்கள். அல்லது மன அமைதி தரும் இடங்களுக்கு சென்று வாருங்கள்.
No comments:
Post a Comment