நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பது சருமம் தான். என்ன தான் வெளியில் சருமத்தை பராமரித்தாலும் உள்ளுறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது நம் சருமத்தை பாதிக்கும்.
சருமம் தொடர்பான பிரச்சனைகளில் முதன்மையானதாக பலருக்கும் இருப்பது பருக்கள், என்ன சிகிச்சைமுறைகள் எடுத்தாலும் பருக்கள் வந்து கொண்டேயிருக்கும், வெளியில் பருக்கள் தோன்றும் இடங்களை வைத்து உள்ளே என்ன மாதிரியான பிரச்சனை ஏற்பட்டிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.
நெற்றி :
முன்நெற்றியில் பருக்கள் இருந்தால், உடலில் அதிகப்படியான நச்சுக்கள் ஜீரணக் கோளாறு இருக்கிறதென்று அர்த்தம். நிம்மதியான தூக்கம், சீரான உணவுப் பழக்கம், நிறையத் தண்ணீர் குடிப்பது போன்ற ஆரோக்கியமான பழக்கத்தை கடைபிடித்தாலே இதனை தவிர்த்துவிடலாம்.
கன்னம் :
மேல் கன்னத்தில் பருக்கள் இருப்பவர்களுக்கு, சுவாசப்பிரச்சனைகள் இருக்கும். கன்னத்தின் கீழ்ப்புறமாக பருக்கள் வந்தால் பல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும்.
டீ-ஜோன் :
இரண்டு புருவங்களுக்கு மத்தியில் பருக்கள் வந்தால் உங்களுக்கு ஃபுட் அலர்ஜி அல்லது வாயுத்தொல்லை இருக்கும். துரித உணவுகள், அசைவ உணவுகள், சாக்லேட் போன்ற பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மூக்கு :
மூக்கில் பருக்கள் வந்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் இருக்கும். உயர் ரத்த அழுத்தம் இருந்தாலும் மூக்கில் பருக்கள் உண்டாகும்.
முதுகு :
சிலருக்கு ஜெனிடிக்காக கூட இப்பருக்கள் வரும் . ஹார்மோனில் சமநிலை இல்லாத போது முதுகில் பருக்கள் வரும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, சுத்தமான உடைகளை அணிவது, அதிகப்படியான வியர்வை வராமல் பார்த்துக் கொள்வது, அதிக கெமிக்கல்கள் உள்ள சோப்பை பயன்படுத்தாமல் தவிர்ப்பது, துணியை சுத்தமாக பராமரிப்பது போன்றவற்றால் இதனை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment