Friday, 1 September 2017

இவ்வகை உணவுகள் எப்படி உங்கள் விந்தணு எண்ணிக்கையை குறைக்கின்றன என தெரியுமா?

நாம் உண்ணும் 95% உணவுகளில் கொழுப்பு இருக்கிறது. கொழுப்பு நம் உடலுக்கும் தேவையான ஒரு மூலப்பொருள். கொழுப்பில் எச்.டி.எல், எல்.டி.எல் என நல்ல, தீய கொழுப்பு வகைகள் இருப்பது போல. நிறைவுற்ற (Saturated), நிறைவுறாத (Un Saturated) கொழுப்புகளும் இருக்கின்றன.
நிறைவுற்ற கொழுப்புகள் பால் பொருட்கள் மற்றும் இறைச்சிகளில் இருக்கும் கொழுப்பு. பருப்பு உணவுகள், காய்கறி எண்ணெய்கள், விதைகள் போன்றவற்றில் இருப்பவை நிறைவுறாத கொழுப்பு ஆகும்.என்ன வித்தியாசம்?

என்ன வித்தியாசம்?

நிறைவுற்ற கொழுப்பில் கார்பன் அணுக்கள் இரட்டை பிணைப்புகளாக இருக்காது. நிறைவுறாத கொழுப்பில் இரட்டை பிணைப்பு இருக்கும்.
சாதாரண அல்லது வீட்டு வெப்ப நிலையில் நிறைவுற்ற கொழுப்பு திடமாகவும், நிறைவுறாத கொழுப்பு திரவ நிலையாகும் இருக்கும்.விந்தணு குறை?

விந்தணு குறை?

உங்கள் டயட்டில் அதிக நிறைவுற்ற கொழுப்புப் சேர்வதால் விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது. 2012ல் போஸ்டன் ஹார்வார்ட் சுகாதார பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்களின் உணவு பழக்கம் மற்றும் அது சார்ந்து விந்தணு எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள், தாக்கங்கள் குறித்து கண்டறியப்பட்டது.கொழுப்பு சதவீதம்!

கொழுப்பு சதவீதம்!

உங்கள் டயட்டில் கொழுப்பு சதவீதம் 5% அதிகரித்தால், விந்தணுக்கள் எண்ணிக்கை 18% குறையும் வாய்ப்புகள் உள்ளன.கார்போஹைட்ரேட்!

கார்போஹைட்ரேட்!

கார்போஹைட்ரேட் அளவை குறைத்து, நிறைவுற்ற கொழுப்பு 5% அதிகரித்தால் 38% விந்தணு எண்ணிக்கை குறையலாம்.டானிஷ் ஆய்வு!

டானிஷ் ஆய்வு!

2013-ல் டானிஷ் ஆண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், நிறைவுற்ற கொழுப்பு அதிகம் எடுத்துக் கொள்வதால் விந்தணு எண்ணிக்கை குறைபாடு மற்றும் திறன் குறைபாடு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், விந்தணு திறன் 38%, விந்தணு எண்ணிக்கை 41% குறைவதை அவர்கள் அறிந்தனர்.ஸ்பெயின் ஆய்வு!

ஸ்பெயின் ஆய்வு!

ஸ்பெயினில் நடந்த ஆய்வில், நிறைவுற்ற கொழுப்பு உணவான பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்வதால் விந்தணு திறன் குறைபாடு ஏற்படுவதாக அறியப்பட்டது.நகர்வுத்திறன்!

நகர்வுத்திறன்!

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் நன்மைகள் மூலம் விந்தணுக்கள் நகர்வுத்திறன் மேம்படுகிறது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஆண்களின் விந்தணு திறன் குறைபாட்டிற்கும், நாம் உட்கொள்ளும் கொழுப்பு உணவுகளுக்கும் தொடர்பு இருக்கின்றன.இதை ஆண்கள் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டும்.உணவை தெரிந்தெடுங்கள்!

உணவை தெரிந்தெடுங்கள்!

உங்களுக்கு ஏற்ற, உகந்த உணவு எது, எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எந்த உணவை தவிர்க்க வேண்டும். கொழுப்பு என்பது எத்தனை வகைகள் உள்ளன, எந்தெந்த உணவு, எந்தெந்த கொழுப்பு வகை சார்ந்தது என நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கடந்த சில ஆண்டுகளாக ஆண்கள் மத்தியில் விந்தணு குறைபாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...