நீங்கள் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அங்கு வித விதமாக அடுக்கி வைத்திருக்கும் உணவு வகைகளை பார்த்தால் உங்கள் மனமும் நாக்கும் அலைபாயும் அல்லவா. ஆனால் அடுத்த நாள் காலையில் வாயுவால் உங்கள் வயிற்றில் கடுமையான தாங்க முடியாத வலி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்.
இந்த விஷயங்களை நாம் நினைத்து பார்த்தால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து நாம் சாப்பிட்டு இருக்கலாம் என்று தோன்றும்.
சரி இனி இந்த மாதிரி உணவுகளை நாம் சாப்பிட்டு கடுமையான வலியால் கஷ்டப்பட கூடாது என்று நமக்கு நாமே வரையறை செய்து கொள்வோம் அல்லவா. ஆனால் இது மிகவும் கஷ்டமானது. மறுபடியும் ஆசையை அடக்க முடியாமல் கஷ்டப்படுவோம்.
ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்பயிற்சியின்மை, அல்சர், உணவை தவிர்த்தல், நேரம் தவறி சாப்பிடுதல் போன்ற பிரச்சினையால் வயிற்றில் அதிகப்படியான ஆசிட் உருவாகி வாயுப் பிரச்சினை, வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படுகின்றன.
இந்த வாயு பிரச்சினையால் வயிற்றில் வலி, நெஞ்செரிச்சல்,தொடர்ந்து வாயு வெளியேற்றம், எதுக்களித்தல், தொண்டை புண், குமட்டல், வாந்தி மற்றும் வயிறு வீக்கம் போன்றவையும் இதன் அறிகுறிகளாகும்.
மன அழுத்தமும் இந்த கேஸ்ட்ரிஸ் பிரச்சினைக்கு முக்கிய காரணம். ஏனெனில் மன அழுத்தத்தால் உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து வயிற்றில் அதிகப்படியான ஆசிட் உருவாக காரணமாகி விடுகிறதாம்.
ஆரோக்கியமான உணவு முறைகள் இதற்கு ஒரு நல்ல பலனை தரும். இந்த வாயுப் பிரச்சினையை நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அதுவே குடல் சுவர்களை அரித்து குடல் கேன்சர் போன்றவை ஏற்பட வழிவகை செய்து விடும். எனவே இதை முதலிலேயே சரி செய்து விடுவது நல்லது.
பல நேரங்களில் இதற்கு ஆன்டாசிட் மாத்திரைகள் அல்லது வலி நிவாரண (pain killers) மாத்திரைகளை எடுப்பதால் உங்களுக்கு நிறைய பக்க விளைவுகள் ஏற்படலாம்.
எனவே தான் உங்களுக்காக இயற்கை பொருட்களை கொண்டே இந்த வாயு பிரச்சினையை சரி செய்யும் ஒரு முறையை பற்றி இப்பொழுது பார்க்க போறோம்.தேவையான பொருட்கள் :
பூசணிக்காய் ஜூஸ் - 1/2 டம்ளர்
ஆப்பிள் சிடார் வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சரியான அளவில் கலந்து ஜூஸ் தயாரித்து கொள்ளவும். இந்த ஜூஸை நீங்கள் எப்பொழுது எல்லாம் வாயுப் பிரச்சினையால் அவதிப்படுறீங்களோ அப்பொழுது எல்லாம் குடிக்கவும். கண்டிப்பாக நல்ல பலனை காணலாம் .இந்த முறை கண்டிப்பாக உங்கள் வாயுப் பிரச்சினை மற்றும் வயிற்று வலியை குணமாக்கும். இதனுடன் ஆரோக்கியமான உணவுகள், வாயுவை உருவாக்கும் உணவை தவிர்த்தல் மற்றும் நல்ல உடற்பயிற்சி இவற்றை மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.
இந்த முறை உங்கள் வயிற்று பிரச்சினையை சரி செய்தாலும் மருத்துவரை அணுகி செக் அப் செய்து கொள்வது நல்லது.பூசணிக்காய் ஒரு இயற்கை அல்கலைன் ஆகும். எனவே இது உங்கள் வயிற்றில் உள்ள ஆசிட் அளவை குறைத்து உடனே வயிற்று வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
ஆப்பிள் சிடர் வினிகர் வயிற்றில் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி வயிற்றெரிச்சல், வயிற்று வலி மற்றும் வாயுப் பிரச்சினையை சரி செய்கிறது.
No comments:
Post a Comment