காஃபி குடிப்பதால் நீண்ட காலம் வாழலாம் என்ற புதிய தகவல் ஒன்று அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் செளதர்ன் கலிபோர்னியா(USC) நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியின் போது 180,000 பேர்கள் கலந்து கொண்டனர். அதில் வழக்கமாக காஃபி குடிப்பவர்களை ஆராய்ச்சி செய்ததில் அவர்களின் ஆயுட்காலம் நீள்கிறது என்பது தெரிய வந்துள்ளது.இந்த ஆராய்ச்சி ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்றால் காஃபி குடிக்கும் மக்களின் இறப்பு காஃபி குடிக்காத நபர்களை காட்டிலும் 12% இறப்பு முன்னாடியே ஏற்படுவது குறைப்படுகிறது என்று ஜேர்னல் அனல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசனில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆராய்ச்சியை தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை காஃபி பருகும் நபர்களின் இறப்பிற்கான வாய்ப்பு 18 %குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இதிலிருந்து தெரிவது காஃபி விரும்பிகள் தாராளமாக காஃபி குடிக்கலாம் என்றும் அல்லது காஃபின் நீக்கப்பட்ட காஃபி யை பருகலாம் என்றும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் காஃபி குடிப்பதால் இதய நோய்கள், கேன்சர், பக்க வாதம், டயாபெட்டீஸ்,மூச்சுப் பிரச்சினை மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்ற விளைவுகள் வருவது குறைக்கப்படுகிறது என்று சராசரி 16 வயதான நபர்களிடம் ஆராய்ச்சியை மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சி செய்ய வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த ஆப்பிரிக்கன் - அமெரிக்கர்கள், ஜாப்பனீயர்கள் - அமெரிக்கர்கள், லாட்டின்ஸ் - ஒயிட்ஸ் என்று இரு பிரிவுகளாக பிரித்து ஆராய்ச்சி செய்தனர். ஏனெனில் அவர்களின் உணவுப் பழக்கங்கள், இன வேறுபாடு இவற்றின் அடிப்படையில் நோய்களின் விளைவுகளை ஆராய்ச்சி செய்தனர்.இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் இன வேறுபாடு உள்ள காஃபி பழக்கமுள்ள குரூப்கள் மற்ற குரூப்களை காட்டிலும் நோய்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுள்ளது என்று ஒயிட்ஸ், ஆப்பிரிக்கன், லாட்டின்ஸ் அல்லது ஆசியன் போன்றவர்களிடமிருந்து வெற்றிகரமாக தெரிய வந்துள்ளது.
ஆனால் இதன் ஆராய்ச்சியாளர் காஃபி யில் உள்ள கெமிக்கல்கள் இந்த பயனை எந்த அளவு பாதிக்கிறது என்பதை கண்டுபிடிக்கவில்லை. எனவே உங்கள் காஃபி பழக்கத்துடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் மேற்கொண்டால் நீடூழி வாழலாம்
No comments:
Post a Comment