இறைவன் எல்லா மனிதர்களையும் ஒரே விதமாக படைத்தாலும், அவரவர் வளர்வதில் ஏற்படும் மாறுபாட்டால் அவர்கள் பழக்க வழக்கங்கள் மாற்றம் பெறுகின்றன.
நீண்ட நாள் ஒரு விஷயத்தை தொடந்து செய்து வரும் போது அது நம் பழக்கமாக மாறுகிறது. இந்த பழக்க வழக்கத்தால் நன்மை தீமை இரண்டுமே உண்டு. நல்ல பழக்கங்கள் நல்ல விளைவை தருகின்றன. தீய பழக்கங்கள் தீய விளைவை ஏற்படுத்துகின்றன.
சில பழக்கங்கள் நமக்கே தெரியாமல் நமது உடலுக்கு தீமை விளைவிக்கின்றன. அந்த வித பழக்கங்களிலிருந்து நம்மை மாற்றி கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லையேல் நமது உடலை நாமே கெடுத்துக் கொள்வது போலாகும்.இங்கு நாம் சில பழக்க வழக்கங்களை கொடுத்துள்ளோம் . இவற்றை நாம் தவறு என்று உணராமலே தினமும் செய்து கொண்டிருக்கிறோம். அதில் மறைந்திருக்கும் தீமையை உணர்ந்து இன்றே மாறுவோம்.
1.தரம் குறைவான கண்ணாடிகள்:
கண் பார்வை கோளாறுகளுக்கு சிலர் கண்ணாடி அணிகின்றனர். வெயிலின் தாக்கம் கண்ணில் படாமல் இருக்கவும் வாகனங்களில் செல்வோரும் சிலர் சன் கிளாஸ் அணிகிறார்கள்.
சன் கிளாஸ் அணிவதால் சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் கண்களை பாதிப்பதில்லை. இந்த சன் கிளாஸ் வாங்கும்போது தரத்தை அறிந்து வாங்குவது நல்லது. தர குறைவான சன் கிளாஸ்கள் அணிந்து வெயிலில் செல்லும்போது அவை நம் கண்களின் விழித்திரையை எரிச்சல் அடைய வைக்கிறது.
இந்த கண்ணாடியில் விழும் நிழலானது கண்மணிகளை வலு இழக்க செய்கிறது. புற ஊதா கதிர்கள் இத்தகைய கண்ணாடிகள் மூலம் அதிகம் உறிஞ்சப்படுகின்றன. இதனால் கண் புரை மற்றும் கண் புற்று நோய் வர வாய்ப்புகள் உண்டு.
2.வெந்நீர் சிகிச்சை:
சிலநேரங்களில் வயிற்றில் வலி ஏற்படும்போது நாம் வெந்நீர் அல்லது குளிர்ந்த நீரில் ஒரு துணியை நனைத்து வலி உள்ள இடத்தில ஒத்தடம்கொடுப்போம்.
இல்லையேல் சூடு நீர் பை கொண்டு வலி உள்ள இடத்தில் தடவி கொடுப்போம். இது ஒரு தவறான செயல். இதன் மூலம் நமது அடி வயிற்றில் இரத்தத்தை போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் சுளுக்கு அல்லது காயங்கள் ஏற்படலாம்.
3.உட்காரும் நிலை :
வேலை நேரத்தில்நாம் சரியான நிலையில் உட்கார வேண்டும். எல்லா உறுப்புகளும் சமச் சீரான நிலையில் இருக்க வேண்டும். முதுகு தண்டின் பாதுகாப்பிற்கு ஏற்றமாதிரி நாற்காலிகளை சரி செய்ய வேண்டும். கால்களை இட வலமாக மாற்றி உட்காராமல் நேராக வைக்க வேண்டும். இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகிறது.
4.குப்புறப் படுப்பது :
படுக்கும் நிலையில் அனைவரும் சௌகர்யமாக உணர்வது குப்புற படுக்கும்போது தான். இதனால் உடலுக்குப் பல கெடுதல்கள் ஏற்படுகிறது. உடலின் உதரவிதானம் (diaphragm) எளிதாக நகர்வதை தடுக்கிறது.
இப்படி படுப்பதால் முதுகு வலி மற்றும் நுரையீரல் நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு. காலப்போக்கில், நரம்புகள் சேதம் அடையலாம். இதய நோய்கள் கூட ஏற்படலாம்.
5. வேலை இடத்திலேயே உணவு உட்கொள்வது:
சிலர் வேலை பார்த்து கொண்டே உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருப்பர். உணவு உண்ணும் போது கண்டிப்பாக உணவு உண்ண ஒதுக்கப் பட்ட இடத்தில் மட்டுமே உண்ண வேண்டும். பணி இடங்களில் பாக்டீரியாக்கள் டன் கணக்கில் உற்பத்தியாகும் . இதனால் உணவு செரிமானம் பாதிக்கப்படும்.
6. அதிகமாக தண்ணீர் குடிப்பது:
நிச்சயமாக நிறைய தண்ணீர் அருந்துவது உடலுக்கு மிகுந்த நம்மை பயக்கும். எல்லோருக்கும் அல்ல....தண்ணீர் தேவை உடலுக்கு உடல் மாறுபடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .
ஒரு விளையாட்டு வீரருக்கோ, அல்லது அதிகமாக அலைந்து திரிந்து வேலை செய்பவருக்கோ தண்ணீரின் தேவை மிக அதிகம். சிறுநீரக பாதிப்பு உள்ளவரா அல்லது இதய கோளாறுகள் உள்ளவரா -நீங்கள் தண்ணீரை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் தாகம் எடுக்கும் போது அவசியம் தண்ணீர் பருகுங்கள்..மற்ற நேரத்தில் மல்லுக்கட்டி உள்ளே தள்ள வேண்டாம்.
No comments:
Post a Comment