திராட்சை பழம் பல நிறங்களில் காண்பவரின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பழக் கிண்ணங்களில் திராட்சைக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இனிப்புகளிலும் ஐஸ்க்ரீம்களிலும் திராட்சையின் பங்கு முக்கியமானது. ஆகையால் இந்த பழத்தை "பழங்களின் ராணி" என்று அழைப்பர்.
இது பெர்ரி குடும்பத்தை சார்ந்தது. பச்சை, சிவப்பு, நீலம்,ஊதா மற்றும் கருப்பு நிறங்களில் இந்த பழங்கள் காணப்படும். திராட்சை உற்பத்தியில் பெரும்பான்மையானவை மது தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன மற்றவை முழு பழங்களாகவும் உலர் பழங்களாகவும் உட்கொள்ள படுகின்றன.அதன் தொடக்கத்தை அறிய முற்பட்டபோது , மத்திய கிழக்கில் திராட்சைத் தோட்டம் முதன்முதலில் பயிரிடப்பட்டது என்று கூறப்படுகிறது, அங்கு ஷிரேச் நகரம் திராட்சை இரசம் தயாரிக்க ஆரம்பித்தபோது திராட்சை பிரபலமானது. இறுதியில், மற்ற நாடுகளும் அதை வளர்த்து, மது தயாரிக்கும் செயல்பாட்டில் பயன்படுத்தின.
ஆண்டு முழுவதும் சந்தைகளில் திராட்சை எளிதாக கிடைக்கிறது. இவை அழகாகவும் சுவையாகவும் இருப்பதோடு உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் கொண்டிருக்குகின்றன.
ஒருவர் திராட்சையை உட்கொள்ளும்போது அவர் உடலில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன . அவற்றுள் சிலவற்றை இப்போது காண்போம்.
1.சிறந்த ஆக்ஸிஜனேற்றி:
திராட்சை ஆக்ஸிஜனேற்றியின் அதிகார மையமாக இருக்கின்றன. காரடெனோய்ட் ,பாலிபினோல் போன்ற பல ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது மற்றும் இதய நலனை மேம்படுத்த உதவுகிறது. ரெஸ்வெரடால் என்ற பாலிபினோல் புற்று நோய் உருவாக்கும் கூறுகளின் வளர்ச்சியை தடுக்கிறது.
ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து அதன் ஓட்டத்தை எளிதாக்குகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது . ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் முக்கியமாக விதைகள் மற்றும் தோலில் அதிகமாக உள்ளது . எனவே, அவற்றையும் பயன்படுத்துவது நல்லது.
2. தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது:
ரெஸ்வெரடால் என்ற பாலிபினோல் வயது முதிர்வை தடுக்கிறது.மேலும் பல தோல் பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது . ரெஸ்வெரடாலுடன் பென்சாயில் பெராக்ஸைடு இணையும்போது அது பருக்கள் உண்டாக்கும் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது என்று யுனிவர்சிட்டி ஆப் காலிஃபோர்னியாவில் ஒரு ஆய்வு கூறுகிறது
3.அதிக அளவு பொட்டாசியம் :
100கிராம் திராட்சை பழத்தில் 191மி.கி அளவு பொட்டாசியம் உள்ளதாக ஊட்டச்சத்து அட்டவணை தெரிவிக்கிறது. அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் எடுத்து கொள்வது உடலுக்கு நல்ல நலனை விளைவிக்கும்.
பொட்டாசியம் அதிகமாக சோடியத்தை எதிர்க்கிறது. உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் இதய ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு ஒரு குறைந்த சோடியம்-உயர்-பொட்டாசியம் உணவு பரிந்துரைக்கப்படுகிறது.
4.கண்களுக்கு நல்லது:
நமது தினசரி உணவில் திராட்சைகளை சேர்ப்பதன் மூலம் அதிக அளவிலான பாதுகாப்பு புரதங்கள் கண்களின் ரெடினாவிற்கு கிடைக்கிறது. செல்லுலார் அளவில் ஏற்படும் சிக்னல் மாற்றங்களினால் கண்களுக்கு அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது என்று புளோரிடாவின் மியாமி பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி கூறப்படுகிறது.
5.மூளை சக்தியை அதிகரிக்கிறது :
ரெஸ்வெரடால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது . இதன்மூலம் அது மனரீதியான பதில்களை வேகமாக அதிகரிக்க உதவுகிறது மற்றும் அல்சைமர் போன்ற மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்மை பயக்க உதவுகிறது.
சுவிட்சர்லாந்தின் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, ரெஸ்வெராட்ரால் மூளையை பாதிக்கும் அடிப்படை கூறுகளை அகற்ற உதவ முடியும் என்று கண்டறிந்துள்ளது.
6. மூட்டுகளுக்கு நல்லது :
டெக்சாஸ் வுமன் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், திராட்சையின் தினசரி உட்கொள்ளல் முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது, முக்கியமாக கீல்வாதத்தை குறைக்கிறது என்று குறிப்பிட படுகிறது. திராட்சை ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி என்பதால், இது மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையையும் இயல்பையும் மேம்படுத்த உதவுகிறது.
7. வீக்கத்தை குறைகிறது:
வீக்கத்தை குறைப்பதற்கான சில என்சைம்கள் திராட்சை பழத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமணிகளுக்கு நிவாரணம் அளித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் எல்லா பாகங்களையும் சீராக்க உதவுகிறது.
வைட்டமின்கள் ஏ, பி -6, பி -12, சி மற்றும் டி, கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கனிமங்களாலும் திராட்சை நிரப்பப்பட்டிருக்கிறது. சர்க்கரை அதிகமாக இருப்பதால் இதனை அதிக அளவு உண்ண கூடாது.
உங்கள் உணவு அட்டவணையில் வாரத்திற்கு 3-4 நாட்கள் திராட்சை பழங்களை சேர்த்து கொள்ளலாம். பழங்களின் கலவையாக உண்ணும் போது மற்ற ஊட்டச்சத்துகளும் சேர்ந்து உடலுக்கு கிடைக்கிறது. தனியாக திராட்சை மட்டும் உண்ணும் போது ஒரு நாளுக்கு 15-20 திராட்சைகள் கொண்ட 2-3 கப் உண்ணலாம்.
No comments:
Post a Comment