ஒரு ராஜாவைப் போன்ற காலை உணவை சாப்பிட வேண்டும் என்று எல்லாரும் கேள்விப்பட்டிருக்கிறோம் . காலை உணவு குளுக்கோஸ் அளவை மீட்டமைக்க உதவுகிறது, இது நமது மூளை செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய கார்போஹைட்ரேட் ஆகும்.
அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு விரைந்திடவும் மற்ற வேலைகளுக்கு பறந்திடவும் நினைத்து காலை உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறோம். காலை உண்ணும் உணவுதான் ஒரு நாளின் மொத்த ஆற்றல் உருவாவதற்கு முக்கியமான திறவுகோல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
காலை உணவு வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இதன் தொடர்ச்சியாக உணவு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து சேமிப்பு தொடர்பான உயிரியல் செயல்பாடுகள் உடலில் ஏற்படும்.
சிலருக்கு காலையில் அதிகமான உணவை எடுத்துக் கொள்வதில் சிரமங்கள் இருக்கலாம். சிலருக்கு அதிகமான காலை உணவு எடுத்து கொள்ளும்போது வாய்வு தொந்தரவுகள் ஏற்படலாம்.
நாம் எந்த நேரத்தில் அதிகமான அளவு உணவை எடுத்து கொள்ளலாம் எனபது ஒரு பெரிய கேள்வி.அதற்கு விடையை இப்போது பார்ப்போம்.
செரிமான சக்தி :
நமது செரிமான சக்தி ஆயுர்வேதத்தில் அக்னி என்று அழைக்கப்படுகிறது. இந்த அக்னி ,ஒருவர் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முக்கியமானது. அக்னி என்பது நெருப்பை குறிக்கும்.
அக்னி (தீ) உடலில் உள்ள அனைத்து செரிமான மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மையமாகக் கொண்ட ஆற்றல் வெப்பத்தை குறிக்கிறது, மேலும் உடலின் மென்மையான வேலைக்கு பொறுப்பாகவும் உள்ளது. ஒருமுறை அது அணைக்கப்படுவதால் மரணம் விரைவில் தொடரும் என நம்பப்படுகிறது.
ஒவ்வொருவருக்கும் வெல்வேறு இயல்பு இருப்பதை போல ஒவ்வொரு உடலும் வெல்வேறு தன்மையில் இயங்கும். ஆனால் நீங்கள் கூர்மையாக கவனித்தால் ஒன்று தெளிவாக தெரியும்.
அது என்னவென்றால் உடல் அதன் தேவைகளுக்கு ஏற்றது போல் சில சிக்னல்களை கொடுக்கிறது. பசி, தாகம் முதலியன அவை கொடுக்கும் சிக்னல்கள் தான். பசிக்கும்போது ஒரு மாதிரியும் பசி அடங்கியபின் வேறு மாதிரியும் அதன் சிக்னல்கள் இருக்கும்.
இந்த நெருப்பை சரியான விகிதத்தில் சமன் செய்வது, தகுந்த அளவு உண்பதால் மட்டுமே சாத்தியம். நாம் உண்ணும் உணவு செரிமானத்திற்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் ஏற்ற அளவினதாய் இருக்க வேண்டும்.
காலை :
காலை நேரம் உடல் புத்துயிர்ப்பு அடைவதற்கான நேரம். கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி புதிய ஆற்றலை உருவாக்க உடலை தயார் செய்யும் நேரம் என்றும் கூறலாம். தியானம் மற்றும் உடற்பயிற்சிக்கான சிறந்த நேரமும் இது தான்.
ஆகவே இந்த காலை நேரத்தில் எளிய உணவுகளை எடுத்து கொள்வதின் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை நீங்கள் தூண்டுகிறீர்கள். காலை வேளையில் அதிக உணவு உட்கொள்ளும் போது அக்னி ஏற்றத்தாழ்வான ஒரு நிலையில் மாறிவிடுகிறது.
விளைவு :
இதன்மூலம் அசிடிட்டி , சோம்பல் தன்மை போன்ற இடையூறுகள் ஏற்படலாம். மதிய உணவின் போது நீங்கள் மன நிறைவோடு எந்த தொந்தரவுமில்லாமல் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சாப்பிடும் போது உங்கள் கவனம் உணவில் மட்டுமே இருப்பது கூடுதல் நன்மைகளை கொடுக்கும். வேகவேகமாக உண்ணுதல் தவிர்க்கப்படலாம்.
மதியம் :
சூரியன் உச்சிக்கு வரும் வேளையில் தான் அக்னியும் உச்சத்தில் இருக்கும். ஆம்! நமது செரிமான சக்திக்கும் சூரியனுக்கும் ஒரு நெருங்கிய சம்மந்தம் உண்டு. அதனால் தான் மழைக்காலங்களில் நமக்கு பசி எடுக்காத உணர்வு மேலோங்கி இருக்கும்.
நம் வயிறுக்கென்று ஒரு கடிகாரம் உண்டு. அந்த நேரத்தின் அட்டவணையை நாம் பின் தொடர்ந்தால் அது திறமையாக வேலை செய்யும். அதன் சுழற்சி தடைபடும் தான் தீய விளைவுகள் ஆரம்பமாகின்றன.
நல்ல நேரம் :
மதிய வேளையில் செரிமான சக்தி அதிகமாக இருக்கும்.அதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். பல ஆய்வுகள், மதிய வேளையில் தான் செரிமான மண்டலம் அதிக அளவிலான செரிமான சாறுகளையும் என்ஸைம்களையும் சுரப்பதாக கூறுகின்றன,ஆகையால் இதுவே நாம் அதிகமான உணவை அருந்த கூடிய நல்ல நேரம்.
ஆகவே அடுத்த முறை விருந்துகளுக்கு பயண படும் போது அது மதிய உணவாக இருக்கட்டும். காலை வேளை உணவுகள் சிறிது பழங்கள், பால், ஓட்ஸ் போன்ற எளிய உணவாக இருப்பது உடலுக்கு நலன் விளைவிக்கும்.
No comments:
Post a Comment