வாழ்க்கை முறை,பணிச்சூழல் காரணமாக பலருக்கும் பல விதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதில் மிகவும் முக்கியமானது இரத்த அழுத்தம்.
ரத்த அழுத்தம் ஏற்ப்பட்டால் அடுத்தடுத்து பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.இதய நோய் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ரத்த அழுத்தம் தான்.
இதற்கு மாத்திரை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எடுக்க வேண்டும். இதனை தவிர்க்க ரத்த அழுத்தம் வருவதற்கு முன்னதாகவே ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.
ஜாக்கிங் :
ஜாக்கிங் செய்வதால் ஆக்ஸிஜன் உடலில் அதிகளவு சேரும். இது ரத்த அழுத்தத்தை குறைத்து, இதயத்தை பலப்படுத்துவதால் இதயத்தால் குறைந்த முயற்சியிலேயே அதிக ரத்தத்தை உந்தித்தள்ள முடிகிறது. இதனால் இதய வால்வுகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் குறையும்.
தயிர் :
ஒரு நாளைக்கு ஒரு கப் தயிரை குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். இயற்கையாகவே கிடைத்திடும் கால்சியம், ரத்த நாளங்களை நெகிழச் செய்வதால் அவை விரிவடைகின்றன. இதனால் ரத்த அழுத்தம் குறைந்திடும்.
வாழை :
பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதாலும் மற்றும் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பின் அளவைக் குறைப்பதாலும் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.
குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளான பிஸ்கட்டுகள், தானியங்கள்,துரித உணவுகள் மற்றும் இன்ஸ்டண்ட் மிக்ஸ் போன்றவற்றில் அதிகமான உப்பு இருக்கும்.
எடை குறைவு :
நமது உடல் எடையில் சில கிலோக்களை குறைப்பதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இதயம் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
புகைப்பழக்கம் :
சிகரெட்டில் உள்ள நிக்கோடின் உடலிலுள்ள அட்ரீனலினை தூண்டுவதால் இதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாக துடிக்கும். இதனால் எப்போதும் வேகமாக துடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இதயம் தள்ளப்பட்டு ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
காபி :
ஒரு நாளில் மூன்று கப் காபி குடிப்பதால் ரத்த அழுத்தமும் மூன்று புள்ளிகள் உயருமாம். காபியில் உள்ள காஃபைன் மூலப்பொருள் ரத்த நாளங்களை இறுக்கி விடுவதால் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சதவீதங்கள் அதிகரிக்கின்றன.
பீட்ரூட் :
பீட்ரூட்டில் இயற்கையாகவே இருக்கும் நைட்ரேட்டினால் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். ஒரு நாளில் 250 மில்லி பீட்ரூட் சாறு குடிப்பதனால் ரத்த அழுத்தத்தை 7 சதவீதம் அளவிற்கு குறைத்திட முடியும்.
No comments:
Post a Comment