நமது ஊர்களில் பொதுவாக ஒரு கருத்து இருக்கும். ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள் என்பது தான் அது. ஒவ்வொரு முறை பொது தேர்விலும், பெண்களே அதிக மதிப்பெண் வாங்குவதும், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதும் ஒரு மிகப்பெரிய சான்று. அப்படியென்றால் நிஜமாகவே பெண்களின் மூளை செயலாற்றல் அதிகமா? ஆம் என்பது தான் சரியான விடை. அதற்கு விளக்கம் தான் இந்த தொகுப்பு.
பிரைன் இமேஜிங் ஸ்டடி என்ற ஒரு ஆய்வு பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையில் குறிப்பிட்ட மூளை வேறுபாடுகளை அடையாளம் காட்டுகிறது, இந்த ஆராய்ச்சிக்கு ஏதுவாக ஒன்பது கிளினிக்குகளால் வழங்கப்பட்ட 46,034 மூளை SPECT இமேஜிங் ஆய்வுகள் ஒப்பிடப்பட்டன. இதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்களின் மூளைக்கு இடையிலான வேறுபாடுகளை அளவிடுகின்றனர்.SPECT ஸ்கேன் என்பது ஒரு வகை அணுக்கரு இமேஜிங் டெஸ்டாகும், இது காமா கதிர்கள் மற்றும் சிறப்பு கேமராவை பயன்படுத்தி 3 டி படங்களை உருவாக்குகிறது. எக்ஸ்-ரே போன்ற இமேஜிங் சோதனைகள் உங்கள் உடலின் உள்ளே இருக்கும் கட்டமைப்புகள் என்ன என்பதைக் காட்டலாம், SPECT ஸ்கேன் உங்கள் உறுப்புகளை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
இந்த ஆய்வை பற்றிய முடிவுகள் ஜர்னல் ஆப் அல்சைமர் டிசீஸ் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
இந்த பாலினம் சார்ந்த மூளை வேறுப்பாடுகளை புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கியமான ஆய்வு இது . இதன் மூலம் அல்சைமர் போன்ற வியாதிகளுக்கு பாலினம் சார்ந்த ஆபத்துகள் நேருவதை தடுக்க இயலும் என்று மனநல மருத்துவர் டேனியல் ஜி ஆமென், எம்.டி., ஆமென் மருத்துவமனைகள், நிறுவனர்,கருத்து தெரிவித்தார். SPECT போன்ற செயல்பாட்டு நரம்பியல் கருவிகள், எதிர்காலத்தில் துல்லியமான மருத்துவ மூளை சிகிச்சைகள் வளரத் தேவையான ஒன்று என்றும் கூறுகிறார்.
இந்த ஆய்வில்128 மூளை பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரோக்கியமானவர்கள் 119 பேரும், பல தரப்பட்ட மூளை நோய்கள்,பைபோலார் டிசார்டர் , மனநலக்கோளாறு ,மூளைக் கோளாறு / உளவியல் நோய்களுக்கான மற்றும் கவனிப்பு பற்றாக்குறை போன்ற நோயால் பாதிக்கப்பட்ட 26,683 நோயாளிகள் இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டனர்.ஆய்வில் பெண்கள் மூளை ஆண்களை மூளையை விட பல பகுதிகளில் கணிசமாக அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகிறது. கவனம் மற்றும் உத்தேசக் கட்டுப்பாடு, கவலை மற்றும் பதற்றம் தொடர்புடைய மூளையின் லிம்பிக் அல்லது உணர்ச்சி பகுதிகள் போன்றவைகள் சிறப்பாக செயலாற்றப்படுகிறது என்று குறிப்பிட படுகிறது .
மூளையின் காட்சி மற்றும் ஒருங்கிணைப்பு மையங்களில் ஆண்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தனர். SPECT மூளையில் இரத்த உறிஞ்சுதலை அளவிட உதவுகிறது .
மூளையின் சில இடங்களில் பல்வேறு அறிவாற்றல் பணிகளைச் செய்யும் போது மற்றும் எந்த வேலையும் இல்லாத போது வெவ்வேறு இரத்த ஓட்டங்கள் இருப்பதையும் இந்த ஆய்வின் முடிவுகள் வெளிக்காட்டின.மூளை கோளாறுகள் ஆண் பெண் இருவரையும் வெல்வேறு விதமாக பாதிக்கின்றன. அல்சைமர் நோய்க்கு மன அழுத்தம் ஒரு மிக பெரிய காரணம். பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்க படுகின்றனர். நடத்தை தொடர்பான நோய்களில் ஆண்கள் அதிகம் பாதிக்கின்றனர்.
கட்டமைப்பு மற்றும் உளவியல் ரீதியில் பாலின வேறுபாடுகளை புரிந்து கொள்வதன் மூலம் மன நல கோளாறுகள் தடுக்க படுகின்றன மற்றும் தமது துணையின் செயல் பாடுகளை இருபாலரும் உணர முடிகின்றது.
புறணியின் முன் பகுதியில் அதிக இரத்த ஓட்டத்தின் காரணம் தான் பெண்களுக்கு உள்ளுணர்வு, ஒத்துழைப்பு, சுய கட்டுப்பாடு, மற்றும் அக்கறை ஆகியவற்றில் அதிக பலத்தை வெளிப்படுத்துவதற்கான காரணம். பெண்களின் மூளையின் உட்பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படுவதால் பெண்களுக்கு கவலை, மனத் தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் உணவு கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
No comments:
Post a Comment