டயாபெட்டீஸ் என்றாலே வசதியானவர்களை பாதிக்கும் மாற்றத்திலிருந்து இப்பொழுது பரவலாக நகர்ப்புற ஏழை மக்களிடம் காணப்படுகிறது. எனவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்களுக்கு போதுமான டெஸ்ட் மற்றும் மருத்துவ சிகிச்சையை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதைப் பற்றி டயாபெட்டாஜிலிஸ்ட் டாக்டர் வி. மோகன் அவர்கள் 15 மாநிலங்களில் டயாபெட்டீஸ் நோயாளிகளை பற்றியும் அவர்களுக்கு போதுமான சிகச்சை வசதிகளை பற்றியும் இன்டியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் ஆன்ட் மினிஸ்ட்ரி ஆஃப் ஹெல்த் தகவலை பற்றி ஆராய்ந்துள்ளார். இதைப் பற்றிய தகவல் கடந்த மாதம் லேன்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சைனாவுக்கு (26 %) அடுத்த படியாக இந்தியாவில் தான் 16.7 % நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது.
டாக்டர் மோகன், 63, டயாபெட்டீஸ் ஸ்பெஷலிஸ்ட் சென்டர் இன் சென்னையின் தலைமை பொறுப்பாளராக உள்ளார். இவர் தனது பட்ட படிப்பை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்யில் முடித்தார். 4 ராயல் கலோஜ்க்கு பிஸிஸியனாக இருந்துள்ளார். அவையாவன கிளாஸ்கவ், எடின்பர்க், லண்டன் மற்றும் துபுலின், தே அமெரிக்கன் காலேஜ் ஆஃப் என்டோகிரைனோலாஜி ஆஃப் இந்தியா. 2012 ல் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
டாக்டர் மோகன், 63, டயாபெட்டீஸ் ஸ்பெஷலிஸ்ட் சென்டர் இன் சென்னையின் தலைமை பொறுப்பாளராக உள்ளார். இவர் தனது பட்ட படிப்பை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்யில் முடித்தார். 4 ராயல் கலோஜ்க்கு பிஸிஸியனாக இருந்துள்ளார். அவையாவன கிளாஸ்கவ், எடின்பர்க், லண்டன் மற்றும் துபுலின், தே அமெரிக்கன் காலேஜ் ஆஃப் என்டோகிரைனோலாஜி ஆஃப் இந்தியா. 2012 ல் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இன்டியா ஸ்பென்டில் இவருடைய உரையாடலானது டயாபெட்டீஸ் தாக்கம் பற்றியும் எப்படி நடுத்தர ஏழை மக்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பது பற்றியும் அதற்கான சிகிச்சை பற்றியும் பேசப்பட்டுள்ளது.
கேள்வி : கர்ப்ப கால நீரிழிவு நோய் பொதுவான டயாபெட்டீஸ் நோய் மாதிரியே இந்தியாவில் அதிகரித்துள்ளதா? இதைப் பற்றி உங்கள் கருத்து?
பதில் : இந்த ஆராய்ச்சியானது கர்ப்ப கால நிரிழிவு நோய் பற்றியது கிடையாது. இதற்கு முந்தைய ஆராய்ச்சி கருத்துப் படி பார்த்தால் கர்ப்ப கால நீரிழிவு நோயும் நம் நாட்டில் அதிகரித்துள்ளது
கேள்வி : மாநிலங்கள் படி பார்த்தால் 8 வட இந்திய பகுதிகளில் அதிகமாக (8.6%)ம் 6 தென்னிந்திய பகுதிகளிலே (5.6%) ம் பதிவாகியுள்ளது. இது எதனால் அதிகமான மக்கள் தொகையா இதைப் பற்றிய கருத்து?
பதில் : தென்னிந்திய பகுதிகளில் வாழும் மக்கள் அதிகமாக தானிய உணவுகளை சாப்பிடுவதாலும் பரம்பரை ஜீன்களாலும், வாழ்க்கை முறைகளாலும், உணவுப் பழக்க வழக்கத்தாலும் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது.
கேள்வி :டயாபெட்டீஸ் வசதியானவர்களுக்கு வருவதற்கு முக்கிய காரணம் வயது, உடல் பருமன், பரம்பரை இவைகள் காரணம் என்றால் நகர்ப்புற ஏழைகளுக்கும் வருவதற்கு இது தான் காரணமா?
பதில் : இதைப் பற்றிய ஆராய்ச்சி தற்போது போய் கொண்டு இருக்கிறது. எனவே இதற்கான பதில் கூடிய விரைவில் தெரிய வரும்.
கேள்வி : வசதியானவர்களிலிருந்து நகர்ப்புற ஏழைகள் வரை டயாபெட்டீஸ் ஆல் பாதிப்படைவதால் இதற்கு அரசாங்கம் எந்த மாதிரியான சிகச்சை வசதிகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
கேள்வி : வசதியானவர்களிலிருந்து நகர்ப்புற ஏழைகள் வரை டயாபெட்டீஸ் ஆல் பாதிப்படைவதால் இதற்கு அரசாங்கம் எந்த மாதிரியான சிகச்சை வசதிகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
பதில் : இதற்காக அவர்களுக்கு இலவசமான சிகச்சை முறையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பொதுமக்களும் அரசாங்கமும் உதவ வேண்டும்
கேள்வி : டயாபெட்டீஸ் சிகிச்சைக்காக ஆகும் செலவை அமெரிக்கா மாதிரி இந்தியாவும் வரி விலக்கு செய்யுமா?
பதில் : டயாபெட்டீஸ்க்கு வரி விலக்கு என்பது ஒரு தீர்வு தான். இதற்கு இன்சுரன்ஸ் மூலம் பணம் பெறும் வசதியை எல்லாருக்கும் கொண்டு வந்தால் நல்லது.
கேள்வி : இதே மாதிரி சட்ட பூர்வமான மற்ற நோய்களுக்கான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படுகிறதா?
பதில் : நிறைய ஆராய்ச்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னை அர்பன் ரூரல் டெமிலாஜி தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு தகவலான CARRS([Centre for Cardiometabolic Risk Reduction in South-Asia Surveillance] ஆராய்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது.
கேள்வி :டயாபெட்டீஸ் நோயால் 2.4 % வேறு பலவித நோய்களும் தாக்குகின்றன. பக்க வாதம், சீறுநீரகம் செயலிழப்பு, கண் பார்வை இழப்பு போன்றவைகளும் ஏற்படுகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த எதாவது நிகழ்ச்சி ஏற்படுத்தனுமா?
பதில் : இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பெரிய ஹெல்த் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். டயாபெட்டீஸ் பற்றிய விழிப்புணர்வு அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றிய தகவல் எல்லாவற்றையும் தெரியப்படுத்த வேண்டும்.
கேள்வி : நீங்கள் சொன்ன மாதிரி உணவுப் பழக்கத்தால் தான் வட இந்திய மக்களை விட தென் இந்திய மக்கள் டயாபெட்டீஸ் ஆல் பாதிக்கப்படுகின்றன என்றால் இது நடுத்தர ஏழை மக்களுக்கும் பொருந்துமா?
பதில் : வசதியான மக்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க அதிக நேரம் கிடைக்கின்றன. மேலும் ஆரோக்கியமான உணவுகளையும் அவர்கள் அதிகமாக சாப்பிட தயாராகி விட்டனர். காரணம் அவர்களுக்கு டயாபெட்டீஸ் பற்றிய விழிப்புணர்வு தெரிந்து உள்ளது மற்றும் சிகச்சைக்கு கான வசதிகளும் உள்ளன. ஆனால் தற்போது நடுத்தர ஏழை மக்கள் வறுமையால் ஆரோக்கியமற்ற உணவு முறைகளையும் டயாபெட்டீஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும் அவசரமான வாழ்க்கையில் உடல் நலத்திற்கு போதிய நேரம் செலவழிக்காததாலும் டயாபெட்டீஸ் நோயால் பாதிப்படைந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment