நாம் பிளாஸ்டிக் அரிசி பற்றியான கடந்த கட்டுரையில் இந்தியாவில் அவற்றின் ஊடுருவல் இருக்கிறதா என்று பார்த்தோம்.
அந்த கட்டுரையில் கூறியபடி தற்போது வரை இந்தியாவில் எங்கும் பிளாஸ்டிக் அரிசி பிடிக்கப் படவில்லை என்பதை பல மாநில உணவு பாதுகாப்புத் துறையும், காவல் துறையும் அறிவுறுத்தி இருப்பதை பார்த்தோம்.மேலும் நாம் உபயோகிக்கும் அரிசியை விட பிளாஸ்டிக் அரிசியின் அதிகப் படியான உற்பத்தி செலவுகள் மற்றும் இந்தியாவின் போதுமான அரிசி கை இருப்பு போன்றவற்றால் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்வது என்பது அரிதான விஷயம் என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.
இருப்பினும் தற்போது ஒரு தற்காப்பு முயற்சியாக, பிளாஸ்டிக் அரிசி ஒரு வேலை நமக்கு வந்து விட்டது என நம் மனதில் ஒரு சலனம் வந்து விட்டால். அவற்றை எப்படி சரியான அரிசியா அல்லது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டு கொள்ளலாம் என இங்கே பார்ப்போம்.
1. தீ சோதனை:
இது ஒரு எளிமையான மற்றும் உடனடியான முடிவுகளை கொடுக்கும் ஒரு சோதனை. நாம் பிளாஸ்டிக் அரிசி என நாம் சந்தேகப்படும் அரிசியை எடுத்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தீக்குச்சியை பற்றவைத்து அதன் மேல் வைக்க வேண்டும். இப்போது அந்த அரிசி உருகி, ஒரு வித பிளாஸ்டிக் நாற்றத்தை வெளியிட்டால் அது பிளாஸ்டிக் அரிசி என கண்டு கொள்ளலாம்.
2. நீர் சோதனை:
இதுவும் ஒரு இலகுவான சோதனை தான். இதற்கு நாம் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் நீர் ஊற்ற வேண்டும். இப்போது நாம் நல்ல அரிசியையும், பிளாஸ்டிக் அரிசி என சந்தேகப்படும் அரிசியையும் ஒரு கப்பில் கலந்து பின் அந்த கலந்த அரிசியை நான் எடுத்து வைத்திருந்த நீர் நிரம்பிய கிண்ணத்தில் போட வேண்டும்.
பிளாஸ்டிக் அரிசி அடர்த்தி குறைவு என்பதால் அது மேலே மிதக்க ஆரபிக்கும்.நல்ல அரிசி அடியில் தங்கி விடும்.
சில சமயங்களில் நல்ல அரிசியுடன், பிளாஸ்டிக் அரிசியும் கலந்து விற்கப்பட்டால் இந்த சோதனை அவற்றை கண்டறிய மிகவும் பயன்படும்.
3. பூஞ்சை சோதனை:
இந்த சோதனைக்கு, நாம் அரிசியை நன்கு கொதிக்க வைத்து 2 அல்லது 3 நாட்கள் அந்த அரிசியை, கொதிக்க வைத்த நீருடன் ஓரிடத்தில் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மீண்டும் 2 அல்லது 3 நாட்கள் கழித்து பார்த்தால், அவை கொதிக்கவைக்கப் பட்ட சூடு நீரில் வெந்த நல்ல அரிசியாக இருந்தால் அவற்றில் பூஞ்சை பிடித்திருக்கும் ஏனெனில் நீரில் வேக வைக்கப் பட்ட நல்ல அரிசி சாதம் திறந்த நிலையில் இருக்கையில் அது வெளி மண்டலத்தில் வினை புரிந்து பூஞ்சையாக மாறும்.
பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் எதுவும் நடந்திருக்காது, ஏனெனில் அவை வெளி மண்டலத்தில் வினை புரிவதில்லை.
4. கொதிநிலை சோதனை:
அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நீர் ஊற்றி அந்த பாத்திரத்தை கொதிக்க செய்யவும். அப்போது கொதிக்கும் நேரத்தில் அரிசியை மட்டும் கவனியுங்கள். ஏனெனில் அது பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால், அது சட்டியின் மேல் ஒரு தடித்த அடுக்கை (லேயர்) உருவாக்கும்.
5. எண்ணெய் சோதனை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணையை ஊற்றி, அடுப்பை பற்ற வைத்து அந்த வாணலியை அதில் வைக்கவும். பிறகு, அந்த எண்ணெய் சுமாராக 200 டிகிரி கொத்தி நிலை வந்தவுடன். நம்மிடம் இருக்கும் அரிசியை அதில் போடவும் . நம்மிடம் இருக்கு அரிசி பிளாஸ்டிக் அரிசியாக இருக்கும் பட்சத்தில் அவை அந்த சூட்டில் உருகி வாணலியில் அடிப்பாகத்தில் ஒரு அடுக்காக ஒட்டிக் கொள்ளும்.
சோதனை மேல் சோதனை போதுமடா சாமீ !
No comments:
Post a Comment