கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் கூட, 1980களில் நாடு எங்கும் நிறைந்திருந்தவை, சீதாப்பழ மரமும், கொடுக்காபுளி மரமும். காசு கொடுக்காமல் இலவசமாகவே, சாலையோர மரங்களில் கிடைக்கும் அந்த சுவை மிகுந்த பழங்களை, சிறுவர்கள் எல்லாம் தேடித்தேடி, சாப்பிடுவார்கள். சிறுவர்கள் செல்லும் வழிகளில், பார்க்குமிடங்கள் எல்லாம், அந்த மரங்களின் கனிகளை, காய்களைக் கவர்ந்து ஒளிந்து நின்று, ருசித்து ரசித்து சாப்பிடும் அவையெல்லாம், உடல் நலத்திற்கு மிகவும் நன்மை செய்பவை, என்பதை இன்று அறிய முடிகிறது.
அன்று? அதன் சுவைக்காக மட்டும் சிறுவர்களால், அதிகம் விரும்பிச் சாப்பிடப்பட்டது. மேலும் வசதியுள்ள சிறுவர்கள், வசதி இல்லாத சிறுவர்கள் என்ற பாகுபாடுகள் இல்லாமல், எல்லாச்சிறுவரும் விரும்பி உண்ட அவையெல்லாம், இன்று கடைகளில் அரிதாகக் கிடைக்கிறது.
பாக்கெட்களில் அடைத்து அதற்கு ஒரு விலையையும் இட்டு வைத்திருப்பது, பள்ளிப்பருவத்தில் ஓசியில் பறித்துத் தின்றவர்களுக்கு, புதிதாக இருந்தாலும் அவற்றை வாங்கி, வீட்டிற்கு வந்து தங்கள் பிள்ளைகளிடம் கொடுக்க, அவர்கள் மிக அலட்சியமாக அவற்றை மறுத்துவிட தலைமுறைகள் மாறிவிட்டது.
இன்றைய சிறுவர்கள் அந்த அனுபவங்களைப் பெற முடியாமல் நவீன வாழ்க்கை நம்மை மாற்றிவிட்டது. நீங்கள் பள்ளிப்பருவ நாட்களை நினைத்துகொண்டு அந்தச்சுவை இப்போது இல்ல என நினைக்கும் போது நமக்கும் வயதாகிக்கொண்டிருக்கும் உண்மை, சுள்ளென உரைக்கிறது... நிற்க, இப்படியே போனால், இது தத்துவக்கட்டுரையாகிவிடும், நாம் இனி இந்த சீதாப்பழத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சீதாப்பழம்:
ஊளைச் சதை இருக்கிறதா, நடக்கவே கஷ்டமா இருக்கா, சீதாப்பழம் சாப்பிடுங்க, அப்புறம் நடக்க மாட்டீங்க,! ஓடிடுட்டே, இருப்பீங்க..!!
சீதாப் பழம் சிறிய வகை மரமாக வளரும் தன்மையுடையது. தண்டுகள் மூலமும், விதைகள் மூலமும், எங்கும் எளிதில் வளரும் தன்மையுடையது. வைட்டமின், புரதம், மற்றும் இரும்புச் சத்து அதிகம் கொண்ட சீதாப்பழம் மிக உயர்வான மருத்துவப் பலன்கள் கொண்டது. அதனால்தான் நாம் அதிகம் உபயோகிப்பதில்லை.
இதன் பலன்களை நன்கு அறிந்த மேலைநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் நம்மிடமிருந்து இறக்குமதி செய்து மருந்துப்பொருட்கள் தயாரிக்கின்றன. தாம் உபயோகித்து இதன் பலன்களை அனுபவிக்காவிட்டாலும் சீதாப்பழங்களை அதிகஅளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, சிலர் பொருளாதாரத்தில் வளமான பலன்களை, அடைகின்றனர்.
கஸ்டர்ட் ஆப்பிள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் என்னவென்று பார்ப்போமா?
இதயம் காக்கும்
சீதாப்பழங்களின் தோல்நீக்கி விதைகளை எடுத்துவிட்டு சதைப்பகுதியை அப்படியே அல்லது ஜூஸாக அருந்தி வர, இதய நோய்கள் யாவும் அணுகாது வாழலாம்.
காச நோயை குணப்படுத்த :
நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும். ஆரம்ப நிலை காசநோயை உடலிலிருந்து நீக்கும். மற்ற வகை காசநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது.
உடல் ஊளைச்சதை குறைக்கும்.
உடல் எடை குறைய :
ஊளைச்சதையை குறைத்து, உடல் மெலிதாகி வனப்புடன் திகழ, சீதாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், விரும்பிய பலன்கள் கிட்டும். கோடைத்தாகம் நீக்கும். நாவறட்சி போக்கும்.
கோடைக்காலங்களில் ஏற்படும், அதீத தாகம், நாக்குவறட்சி இவற்றைப் போக்கி, உடலுக்கு குளிர்ச்சிதரும் தன்மைமிக்கது சீதாப்பழம். பெரிய ஆபரேசன்கள் ஆகி, அதிக வீரியம் கொண்ட மருந்துகள் உட்கொள்வதால் உடல் உள்உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றும். மேலும், ஊறவைத்த வெந்தயத்துடன் சீதாப்பழத்தை சாப்பிட, குடற் புண்களையும் ஆற்றும்.
மலச்சிக்கல் நீங்க:
சீதாப்பழம் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கும்.
ரத்த சோகை :
சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துப்பொருட்களால், உடலின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தச்சோகை நோயை போக்கும், மேலும் உடல் சோர்வை போக்கி, உடலுக்கு புத்துணர்வு தரும்.
மன நோய் குணமாக
சீதாப்பழத்தை இஞ்சிச்சாறு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, அல்லது தனியே சாப்பிட்டுவர, பித்தம் தெளிந்து, மனநோய் குணமாகும். உடல் வலுப்பெற, சீதாப்பழத்தை, திராட்சைப்பழச்சாறு கலந்து ஜூசாகக் குடித்துவரலாம். இரவில் சாப்பிட, நல்ல உறக்கம் வரும். சீதாப்பழத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து பருகிவர, சிறுநீர் கடுப்பு நீங்கி, சிறுநீர் சீராக வெளியேறும்.
சீதாப்பழத்தின் மற்ற பலன்கள்:
தலையில் அதிகம் தொல்லைக் கொடுக்கும் பேன்களை ஒழிக்க, சீதாப்பழத்திலிருந்து கூந்தல் தைலம் தயாரிக்கின்றனர். சீதாப்பழத்தை பூண்டு சேர்த்து அரைத்து, தேமல்கள் மீது பூசிவர, தேமல் மறையும்.