Friday, 1 September 2017

தேங்காயின் அற்புத குணங்களும், அவற்றின் நன்மைகளும்!!

தென்னை மரம் தான் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான மரமாகும். கோக்கோ நியூசிஃபெரா என்பது இதன் அறிவியல் பெயர். இதிலிருந்து கிடைக்கும் தேங்காய் பல மில்லியன் மக்களின் உணவாக உலகெங்கும் பயன்படுகிறது.
சரியான காலநிலையை கொண்டு இருப்பதால் தேங்காய் உற்பத்தியில் நமது இந்தியா தான் 3 வது இடமாக இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ்க்கு அடுத்ததாக உள்ளது. தென்னிந்திய தான் இதற்கு மிகவும் தகுந்த இடமாக உள்ளது.
இந்த மரம் 30 மீட்டர் உயரமும் ஒரு நேரத்தில் 12 தேங்காய்களை கொடுக்கும் தன்மையும் வாய்ந்தது . இந்த தேங்காயின் வெளிப்புற பிரவுன் கலர் ஓட்டை உடைத்து பார்த்தால் உள்ளே வெள்ளை நிற சாப்பிடக் கூடிய தேங்காய் உணவு இருக்கும்.Coconut: Its Nutritional & Health Benefits
நல்ல உயரமான அல்லது குட்டையான என்று நிறைய மர வகைகள் இதில் இருக்கின்றன. இதன் விதைகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். தேங்காய் தண்ணீர், எண்ணெய், பால், க்ரீம், நட்ஸ் போன்ற நிறைய பயன்கள் இதில் கிடைக்கின்றன. இதன் பயன்கள் மருத்துவத்திலும் நீள்கின்றன.
இந்த தேங்காயை இந்தியாவில் கடவுளுக்கு படைத்து வழிபடுவது ஒரு சம்பிரதாயமாக வைத்துள்ளனர்.தேங்காயின் சத்துக்களின் பட்டியல்
100 கிராம் தேங்காயில் 354 கலோரிகள் இருக்கின்றன. கொழுப்புகள்-33.49 கிராம்
பொட்டாசியம் - 356 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 51 மில்லி கிராம்
சோடியம் - 20 மில்லி கிராம்
புரோட்டீன் - 3.33 கிராம்
சுகர்-6.23 கிராம்
இரும்புச் சத்து -2 மில்லி கிராம்
கொலஸ்ட்ரால்-0
விட்டமின் சி - 3.3 மில்லி கிராம்
கால்சியம் - 14 மில்லி கிராம்
ஜிங்க் - 1.10 மில்லி கிராம்
மக்னீசியம் - 32 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 113 மில்லி கிராம்
வைட்டமின்கள் :மேலும் இதி்ல் மைக்ரோ கிராம் அளவில் விட்டமின் பி3, பி6, பி1 மற்றும் போலிக் அமிலம் போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன.
கால்சியம்
இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளது.Coconut: Its Nutritional & Health Benefits தேங்காயின் உடல்நல நன்மைகள்
இதயத்தை பாதுகாத்தல்
இதுவரை தேங்காய் எண்ணெய் உங்களுக்கு இதய நோய்களை ஏற்படுத்தும் என்ற எண்ணம் தான் நம்முள் இருக்கிறது . ஆனால் இதில் மீடியம் சேச்சுரேட் அமிலம் நேரடியாக குடல் களால் உறிஞ்சப்பட்டு மெட்டா பாலிசத்திற்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுவதால் கொலஸ்ட்ரால் ஏற்படுவதே இல்லை. இதில் உள்ள புரோட்டீன் ஹைப்போலிமிடமிக் விளைவு எல்-அர்ஜினைன்யால் ஏற்படுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆர்த்ரோகிளோரஸிஸ் பொருள் கீழ்வாதம் ஏற்படுவதை தடுக்கிறது.
கிருமி எதிர்ப்புத் திறன் :
தேங்காய் எண்ணெய் நிறைய வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவது நீருபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கொழுப்பு அமில சங்கிலி வைரல்களை தாக்கி கொன்று விடுகின்றன. லிப்பிட்டால் ஆன வைரஸ்கள் இன்புலன்ஸா வைரஸ், நிமோனா வைரஸ், ஹெப்பாட்டிஸ் சி வைரஸ் போன்றவற்றை அழிக்கிறது.
உங்கள் குழந்தைக்கு டயாபர் ரேஸஸ் ஏற்பட்டால் முதலில் பரிந்துரைப்பது தேங்காய் எண்ணெய் தான். இது ஸ்போர் ஜெர்மினேசன் மற்றும் மைக்ரோபஸ்யை தடுக்கிறது.
இதில் உள்ள கொழுப்பு அமில சங்கிலி பாக்டீரியாவை எளிதில் கண்டுபிடித்து எதிர்த்து போரிடுகிறது. அல்சர், சைனஸ், டென்டல் கேவிட்டீஸ், புட் பாய்ஸ்ஷனிங், சிறுநீரக தொற்று போன்றவற்றை சரியாக்குகிறது. காலரா நோயாளிகளுக்கு இளநீர் மற்றவற்றை காட்டிலும் மிகவும் சிறந்தது.Coconut: Its Nutritional & Health Benefits பாதுகாப்பு செயல்கள்
இதில் உள்ள லாரிக் அமிலம் ஆன்டி மைக்ரோபியல் செயல்களை கொடுக்கிறது. தேங்காய் மாவு சில வாய்ப் பிரச்சினைகளான வாய்ப்புண்களை சரி செய்யும். இந்த மரத்தின் வேர்களை கொதிக்க வைத்து வந்த தண்ணீரை வாய் கொப்பளிக்க பயன்படுத்தினால் நல்லது. தேங்காயில் உள்ள ட்ரைகிளிசரைட்ஸ் சங்கிலி சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக வடிகுழாயில் ஏற்படும் கற்களை கரைக்கிறது.
தேங்காய் தண்ணீரில் உள்ள பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்றவை ஆஸ்மோட்டிக் அழுத்தத்தை சரியான அளவில் சவ்வுகளில் ஏற்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் இன்சுலின் சுரப்பதற்கு உதவுவதோடு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
தேங்காய் எண்ணெய்யில் உள்ள ஜிங்க் நமது உடலில் உள்ள Tc செல்கள் (cytotoxic T cells) மற்றும் Th செல்கள் (helper T cells) இவற்றை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இளநீர் கனிமங்களால் ஏற்படும் நச்சுக்களையும், அமிலிரோட் மாத்திரைகளால் ஏற்படும் நச்சுக்களையும் நீக்குகிறது. இதில் உள்ள அமினோ அமிலம் எல்-அர்ஜினைன் கேன்சரை தடுக்கிறது.
இளநீர் ஹெப்ட்டோ விளைவுகளை உண்டு பண்ணுவது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இரத்தம் கட்டுதலை தடுத்தல் தேங்காய் எண்ணெய்யில் உள்ள ஆன்டி த்ராம்போட்டிக் விளைவு இரத்தம் கட்டுதலை தடுக்கிறது.
தேங்காயை வைத்து செய்த ஆராய்ச்சியில் இதில் உள்ள கீட்டோன்ஸ் மற்றும் அமினோ அமிலங்கள் லிப்பிட் சுவருடைய பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி கேன்சரை தடுக்கிறது.
இதில் உள்ள மீடியம் சங்கிலி அமினோ அமிலங்கள் கொழுப்புகளை எரித்து மெட்டா பாலிசத்தை அதிகரித்து எடையை குறைக்கிறது.
எப்படி தேங்காயை பயன்படுத்தலாம் .Coconut: Its Nutritional & Health Benefits இளநீர் தாகத்தை தணிப்பதற்காக கோடைகாலத்தில் பயன்படுகிறது. இதை விற்பவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் சமையல் மற்றும் பியூட்டி பராமரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.
அழகு நன்மைகள் :
தேங்காய் எண்ணெய் இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முடியின் வளர்ச்சிக்கும், வறண்ட முடியை சரி செய்வதற்கும், தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. கொசு மற்றும் பூச்சிக் கடிக்கு மருந்தாக தேங்காய் எண்ணெய் செயல்படுகிறது
தேங்காயின் பக்க விளைவுகள் :
தேங்காயை சரியான அளவு எடுத்துக் கொண்டால் எந்த வித விளைவும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது வாயுப் பிரச்சினை, கலோரி அதிகமாகுதல், சுகர் மற்றும் கொழுப்பு மற்றும் அலர்ஜி போன்றவைகளும் ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு சரியான அளவில் தேங்காயை பயன்படுத்தி எல்லா விதமான நலன்களையும் பெறுங்கள்.

தாய்ப்பால் சுரக்க உதவும் தண்ணீர்விட்டான் கிழங்கின் மகத்துவம் பற்றி தெரியுமா?

ஆறடி வரை வளரக்கூடிய "சதாவரி" என்ற பெயர்கொண்ட கொடி இனத்தை ச்சார்ந்த அடர் பச்சையில் ஊசி போன்ற இலைகளும் முட்கள் நிறைந்த தண்டினையும் கொண்ட தாவரத்தின் அடிவேர்தான் தண்ணீர்விட்டான் கிழங்கு.
நீர்த்தன்மை நிறைந்த சாரம் கொண்ட இந்தக் கிழங்கில் இருந்து அதிகம் பெண்களுக்காகவே, பல வகை அரிய மூலிகை மற்றும் அலோபதி மருந்துகள் செய்யப்படுகின்றன.
பருவம் வந்த காலம் முதல் மாத சுழற்சி நீங்கும் "மெனோபாஸ்" காலம் வரை, பெண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து காத்து, உற்ற தெய்வமாக, தாயாக விளங்கும் வரப்பிரசாதி தான் தண்ணீர்விட்டான் கிழங்கு.Asparagus roots to stimulate breast feeding இனிப்புச்சுவையுடன் குளிர்ச்சிமிக்க தண்ணீர் விட்டான் கிழங்கு, வேர்க் கிழங்குகள் மூலம் விருத்தியாகின்றன.
பொதுவாக, உடலின் அனைத்து உள் உறுப்பு புண்கள் ஆற்றும், தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் உடல் நலிவை போக்கி, உடலை உரமாக்கும், ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.கிழங்கின் பயன்கள்:
பூப்பருவம் வந்த இளம் பெண்கள் சிலர், இரத்தச் சோகை நோயால் உடல் மெலிந்து காணப்படுவர். அதன் காரணமாக, வெள்ளைப் படுதல், உடலின் உட்சூடு, மார்பகங்கள் சரியான வளர்ச்சியின்மை மற்றும் தலைமுடி உதிர்தல் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். அவற்றுக்கெல்லாம் அரு மருந்துதான் தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்.
தண்ணீர்விட்டான் கிழங்கின் பானம்
தண்ணீர்விட்டான் கிழங்கின் சாறு எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து பானமாகப் பருகி வர, மகப்பேறானப் பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்,
இளைத்த உடலை பூரிக்க வைக்கும், பெண்களுக்கு வரும் நீர்க்கட்டு மற்றும் வயிற்றின் எரிச்சலைப் போக்கும் தன்மை உடையது.
திருமணமானப் பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் காரணமாக, சினைமுட்டைகள் பெருக்கம் சீர்கெட்டு, அதன் காரணமாக கருவுருதல் தடைபடுகிறது அந்தக்கோளாறுகள் எல்லாம் சரியாக சினைமுட்டைகள் பெருக்கம் சீராக, இந்த பானமே, சிறந்த தீர்வாக அமைகிறது.Asparagus roots to stimulate breast feeding கருவுற்ற பெண்களுக்கெல்லாம், இரத்த விருத்திக்கு உதவி செய்வதாக, உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாக, நோய்எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியதாக, மேலும் கருவில் இருக்கும் மகவின் மூளை உள்ளிட்ட முக்கிய பாகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாக, தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் இருக்கிறது.
தண்ணீர்விட்டான் கிழங்கை தோல் நீக்கி, சுண்டக் காய்ச்சி, நெய்ப்பதம் வந்ததும், இரவு வேளைகளில், கருவுற்ற பெண்கள் பருகி வர, கருப்பையின் பனிக்குடம் இயல்பான விகிதத்தில் நீர் நிரம்பிக் கத்தியின்றி, சுகப்பிரசவம் ஏற்படும்.
பெண்களின் மாதவிடாய் சுழற்சி நிறைவடையும் காலகட்டத்தில், ஹார்மோன், கால்சியம் குறைபாடுகளால் ஏற்படும் கடும் மனச்சோர்வு, உடல் எரிச்சல், உறுப்பில் வறட்சி போன்றவை ஏற்படும்.
தண்ணீர்விட்டான் கிழங்கு சார்ந்த உணவுகளையே மருந்தாக எடுத்துக்கொண்டால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, உடல்நலம் பெறலாம்.
பெண்களின் மாத விடாய் சமயத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கை சரிசெய்ய இரண்டு பங்கு தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு, ஒரு பங்கு நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து மூன்று வேளை என்ற விகிதத்தில் ஒரு வாரம் சாப்பிட, உதிரப்போக்கு நிலைமை சீராகும்.Asparagus roots to stimulate breast feeding மற்ற பொதுப் பலன்கள்
தண்ணீர்விட்டான் கிழங்கை வெயிலில் காயவைத்து, மாவாக்கி, அதன் பின்னர் கீழ்க்கண்ட முறைகளில் உட்கொண்டுவர, நோய்கள் அகலும், நோய் எதிர்ப்பு சக்தி மூலம் உடல் வலுவாகும்.
தண்ணீர் விட்டான் கிழங்கின் மாவை சிறிது வெல்லம் சேர்த்து பாலில் கலந்து அருந்திவர, உடல் உஷ்ணம், உட்சூடு சரியாகும்.
பால் சேர்த்து அரைத்த கிழங்கின் பொடியை வெயிலில் காயவைத்து இருவேளை சாப்பிட, நீரிழிவு குனமாமாகும்.
நாள்பட்ட அனைத்துக் காய்ச்சல்களுக்கு, கிழங்கு பொடியுடன் திரிகடுகு சேர்த்து [ சுக்கு மிளகு திப்பிலி சேர்ந்த கலவை, காய கற்ப மருந்து தேனில் குழைத்து அல்லது நீரில் சிறிது கலந்து சாப்பிட, காய்ச்சல் குணமாகும்.
ஆண்மைக்குறைபாடுகள் நரம்புத் தளர்ச்சி நீங்க, மாவுடன் அஸ்வகந்தா, நெருஞ்சில் சேர்த்து பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட குணமாகும், ஆண்மையைக் காக்கும்.
நலிந்த உடல் தேற, தண்ணீர் விட்டான் கிழங்கின் பொடியுடன் நெய்யை சேர்த்து இருவேளை சாப்பிட, உடல் பொலிவடைந்து வலுவாகும். கால் எரிச்சல் போக்க, தண்ணீர் விட்டான் கிழங்கின் சாறு எடுத்து இரவு படுக்கும் வேளைகளில், காலிலும், பாதத்திலும் பூசி வர, விரைவில் குணமாகும்.

உடனடியாக வயிற்று வலியை குணப்படுத்தும் மேஜிக் ஜூஸ் எது தெரியுமா?

நீங்கள் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அங்கு வித விதமாக அடுக்கி வைத்திருக்கும் உணவு வகைகளை பார்த்தால் உங்கள் மனமும் நாக்கும் அலைபாயும் அல்லவா. ஆனால் அடுத்த நாள் காலையில் வாயுவால் உங்கள் வயிற்றில் கடுமையான தாங்க முடியாத வலி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்.
இந்த விஷயங்களை நாம் நினைத்து பார்த்தால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து நாம் சாப்பிட்டு இருக்கலாம் என்று தோன்றும்.Magical Mixture That Can Reduce Gas And Stomach Ache Within Hours!
சரி இனி இந்த மாதிரி உணவுகளை நாம் சாப்பிட்டு கடுமையான வலியால் கஷ்டப்பட கூடாது என்று நமக்கு நாமே வரையறை செய்து கொள்வோம் அல்லவா. ஆனால் இது மிகவும் கஷ்டமானது. மறுபடியும் ஆசையை அடக்க முடியாமல் கஷ்டப்படுவோம்.
ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்பயிற்சியின்மை, அல்சர், உணவை தவிர்த்தல், நேரம் தவறி சாப்பிடுதல் போன்ற பிரச்சினையால் வயிற்றில் அதிகப்படியான ஆசிட் உருவாகி வாயுப் பிரச்சினை, வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படுகின்றன.
இந்த வாயு பிரச்சினையால் வயிற்றில் வலி, நெஞ்செரிச்சல்,தொடர்ந்து வாயு வெளியேற்றம், எதுக்களித்தல், தொண்டை புண், குமட்டல், வாந்தி மற்றும் வயிறு வீக்கம் போன்றவையும் இதன் அறிகுறிகளாகும்.
மன அழுத்தமும் இந்த கேஸ்ட்ரிஸ் பிரச்சினைக்கு முக்கிய காரணம். ஏனெனில் மன அழுத்தத்தால் உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து வயிற்றில் அதிகப்படியான ஆசிட் உருவாக காரணமாகி விடுகிறதாம்.
ஆரோக்கியமான உணவு முறைகள் இதற்கு ஒரு நல்ல பலனை தரும். இந்த வாயுப் பிரச்சினையை நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அதுவே குடல் சுவர்களை அரித்து குடல் கேன்சர் போன்றவை ஏற்பட வழிவகை செய்து விடும். எனவே இதை முதலிலேயே சரி செய்து விடுவது நல்லது.
பல நேரங்களில் இதற்கு ஆன்டாசிட் மாத்திரைகள் அல்லது வலி நிவாரண (pain killers) மாத்திரைகளை எடுப்பதால் உங்களுக்கு நிறைய பக்க விளைவுகள் ஏற்படலாம்.
எனவே தான் உங்களுக்காக இயற்கை பொருட்களை கொண்டே இந்த வாயு பிரச்சினையை சரி செய்யும் ஒரு முறையை பற்றி இப்பொழுது பார்க்க போறோம்.Magical Mixture That Can Reduce Gas And Stomach Ache Within Hours!தேவையான பொருட்கள் :
பூசணிக்காய் ஜூஸ் - 1/2 டம்ளர்
ஆப்பிள் சிடார் வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சரியான அளவில் கலந்து ஜூஸ் தயாரித்து கொள்ளவும். இந்த ஜூஸை நீங்கள் எப்பொழுது எல்லாம் வாயுப் பிரச்சினையால் அவதிப்படுறீங்களோ அப்பொழுது எல்லாம் குடிக்கவும். கண்டிப்பாக நல்ல பலனை காணலாம் .Magical Mixture That Can Reduce Gas And Stomach Ache Within Hours!இந்த முறை கண்டிப்பாக உங்கள் வாயுப் பிரச்சினை மற்றும் வயிற்று வலியை குணமாக்கும். இதனுடன் ஆரோக்கியமான உணவுகள், வாயுவை உருவாக்கும் உணவை தவிர்த்தல் மற்றும் நல்ல உடற்பயிற்சி இவற்றை மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.
இந்த முறை உங்கள் வயிற்று பிரச்சினையை சரி செய்தாலும் மருத்துவரை அணுகி செக் அப் செய்து கொள்வது நல்லது.Magical Mixture That Can Reduce Gas And Stomach Ache Within Hours!பூசணிக்காய் ஒரு இயற்கை அல்கலைன் ஆகும். எனவே இது உங்கள் வயிற்றில் உள்ள ஆசிட் அளவை குறைத்து உடனே வயிற்று வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
ஆப்பிள் சிடர் வினிகர் வயிற்றில் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி வயிற்றெரிச்சல், வயிற்று வலி மற்றும் வாயுப் பிரச்சினையை சரி செய்கிறது.

ஏலக்காய் கொண்டு ஆண்மை அதிகரிக்க செய்வது எப்படி?

விறைப்புத்தன்மை கோளாறு என்பது இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. இது ஏற்படுவதற்கான முக்கிய காரணம், உடலில் இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பது. இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஊட்டச்சத்து குறைவான உணவுகள், சரியான உடல் வேலையின்மை, சோம்பேறித்தனம், உட்கார்ந்தே வேலை செய்வது என பலவன இரத்த ஓட்டம் சீர்கெட காரணமாக இருக்கிறது. சரியான உடற்பயிற்சி மட்டுமின்றி, நீங்கள் சில சரியான உணவுகளை தேர்வு செய்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண முடியும்.
இதற்கு ஏலக்காய் எப்படி ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கிறது என இங்கு காணலாம்...ஏலக்காய்!

ஏலக்காய்!

பாலுணர்வை அதிகரிக்கும் உணவுகள் என சிலவன உள்ளன. அதில் அத்திப்பழம், மாதுளை போன்றவற்றுடன் ஏலக்காய் முதல் இடத்தில் இருக்கிறது. இதில் இருக்கும் ஒரு மூலப்பொருள் தான் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.சினியோல்!

சினியோல்!

ஏலக்காயில் இருக்கும் சினியோல் எனும் மூலப்பொருள் இரத்த ஓட்டம் அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது. இது ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்க தூண்டுகிறது.சத்துக்கள்!

சத்துக்கள்!

ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் எ, பி, மற்றும் சி என நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.பயன்பாடு!

பயன்பாடு!

ஆண்மை அதிகரிக்க ஏலக்காய் எப்படி பயன்படுத்தலாம்? ஏலக்காய் எப்போதும் சிறிதளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிகளவில் அளவில் உணவில் சேர்ப்பது, அளவிற்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பது போல ஆகிவிடும். இதை நீங்கள் டீ அல்லது தேன், சுடுநீரில் கலந்து உட்கொண்டு வரலாம்.நரம்பு தளர்ச்சி!

நரம்பு தளர்ச்சி!

நீங்கள் தினமும் ஏலக்காயை டீயில் அல்லது தேனில் சேர்த்து குடித்து வந்தால், ஏலக்காயில் இருக்கும் நற்குணங்களால் நரம்பு தளர்ச்சி சரியாகும், நரம்புகள் வலுபெறும். தினமும் காலை, மாலை இருவேளை குடித்து வர நீங்கள் நல்ல பலன் பெறலாம்.

சர்க்கரை வியாதி இருக்குதா? உங்க ஈறுகளை பத்திரமா பாத்துக்கோங்க!!

சர்க்கரை நோயானது வாயில் மைக்ரோபியம் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதால் ஈறு நோய் ( பீரியோடோன்டிஸ்ட்) என்ற நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோயானது பற்களை சுற்றி வீக்கத்தையும் எலும்பு இழப்புகளையும் உருவாக்குகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆராய்ச்சியை எலிகளுக்கிடையே நடத்தினர். ஹைபர்கிளைசெமிக் டயாபெட்டீஸ் அதாவது இரத்த சர்க்கரை அளவு அதிகம் கொண்ட எலிக்கும் மற்ற சாதாரண எலிக்களிக்கிடையே செய்த ஆராய்ச்சியின் முடிவானது டயாபெட்டீஸ் எலியில் பாக்டீரியாக்களின் தாக்கம் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த டயாபெட்டிக் எலி பெரியோடென்டிஸ்ட் மற்றும் பற்களில் எலும்பு இழப்பு போன்றவற்றை கொண்டுள்ளது . மேலும் IL-17அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த டயாபெட்டிக் எலி மனிதரை போன்றே பெரியோடென்டல் எலும்பு இழப்பு மற்றும் IL-17 அதிகரிப்பு போன்றவற்றை ஜெனிடிக் ரீதியாகவே கொண்டுள்ளது என்று தனா கிரேவ்ஸ் பெனிஸ்சுலவேனியா யுனிவர்சிட்டியிலிருந்து சொல்கிறார்.
இந்த தகவலானது நாளிதழ் செல் ஹோஸ்ட் ஆன்ட் மைக்ரோப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி அப்படியே நகர்ந்து டயாபெட்டிக் எலியின் மைக்ரோ ஆர்கானிஸத்திற்கும் சாதாரண எலி மற்றும் விலங்குகளுக்கிடையே நடத்தப்பட்டது.How Diabetes Fosters Gum Disease?CT ஸ்கேன் ரிப்போர்ட் படி 42 % எலும்பு இழப்பு மற்றும் மைக்ரோபியம் மற்ற எலிகளைக்காட்டிலும் டயாபெட்டீக் எலியில் அதிகமாக உள்ளது என்பதை தெரிவித்தது.
மேலும் டயாபெட்டீக் எலிகளிடமிருந்து மற்ற எலிகளுக்கு பரவிய பற்களின் எலும்பு இழப்பு பிரச்சினை ஆன்டி IL17 மூலம் தீவிரமாகுவது குறைக்கப்பட்டது.
இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிவது என்னவென்றால் டயாபெட்டீஸ் வாயில் மைக்ரோபியம் மூலம் பல் வீக்கம் மற்றும் எலும்பு இழப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறதாம்.
ஆன்டி பாடி IL17 இந்த பற்கள் வீக்கம் மற்றும் எலும்பு பிரச்சினையை எலிகளில் குறைப்பதால் மனிதருக்கும் இந்த பிரச்சினையை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.How Diabetes Fosters Gum Disease?இந்த ஆராய்ச்சி ரிப்போர்ட் டயாபெட்டிக் நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து பல் ஈறுகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள பரந்துரைக்கப்படுகிறது.
டயாபெட்டீஸ் நோயானது பீரியோடென்டல் நோயுடன் தொடர்புடையதாக இருப்பதால் நோயாளிகள் தங்கள் பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் ஈறு நோய் பிரச்சினை வருவதை குறைக்கலாம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

குடலில் பெருகும் வைரஸ் கிருமியால் சர்க்கரை நோய் வரும் அபாயம்!!

உங்கள் குழந்தைகளின் குடலில் இருக்கும் பன்முகத்தன்மைவாய்ந்த வைரஸ்களால் டைப் 1டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
டைப் 1 டயாபெட்டீஸ் என்பது க்ரோனிக் ஆட்டோ இம்னியூ டிஷூஸ்(Chronic auto immune disease). இதில் நமது நோயெதிர்ப்பு சக்தி செல்கள் அழிந்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் இன்சுலின் ஊசி மற்றும் தொடர்ந்து கண்காணிப்பு தேவைப்படுகிறது.Less Diverse Gut Viruses Raise Diabetes Riskஇந்த ஆய்வின் தகவல் படி குழந்தைகளின் குடலில் இருக்கும் வைரஸ்கள் அவர்களின் நோய் எதிர்ப்பு செல்களை அழித்து டைப் 1 டயாபெட்டீஸ்யை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் குழந்தைகளின் குடலில் " சர்க்கோரிடி பேமிலி" வகுப்பைச் சார்ந்த வைரஸ்கள் மற்ற வகையான வைரஸ்களை காட்டிலும் குறைந்த அளவு டயாபெட்டீஸ் விளைவை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வின் கருத்தாகும்.
அதே நேரத்தில் குழந்தைகளின் குடலில் பாக்டீரியோபேஜஸ் இருந்தால் குடலில் உள்ள பாப்டீரியோட்ஸ் நுண்ணுயிரிகளை அழித்து டயாபெட்டீஸ் 1 க்கு வழிவகை செய்கின்றது.Less Diverse Gut Viruses Raise Diabetes Riskஇதிலிருந்து தெரிவது என்னவென்றால் சில வைரஸ்கள் நோயின் தீவிரத்தை குறைக்கிறது மற்ற வைரஸ்கள் உடலின் நோய் எதிர்ப்பு செல்களுக்கு எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது என்று ஹெர்பர்ட் ஸ்கிப் வெர்ஜின் IV புரபொசர் வாசிங்டனிலிருந்து கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் நேஷனல் அகாடமி ஆஃப் சைன்ஸ்யில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ள 22 குழந்தைகளை ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இது டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்பை தடுக்கும் முதற்படியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த காலத்தில் நிறைய ஆட்டோ இம்னியூ நோய்கள் வருகின்றன. இதற்கு காரணம் நாம் பல வகையான வைரஸ்களால் நம் நோய் எதிர்ப்பு செல்களை இழந்து கொண்டு இருப்பது தான்.
எனவே உங்கள் உடலை தொடர்ந்து கண்காணித்து வைரஸின் தாக்கத்தை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உடல் வலியைப் போக்கும் ஈஸி வைத்தியங்கள்!!

மனிதனை உயிரோடு இருப்பதை உணர்த்துவது வலி தான் என்றாலும் அன்றாட வேலைப்பளுக்கிடையே அந்த வலியை அனுபவிப்பது என்பது மன உளைச்சலையே தரும். உடலில் ஏற்படும் வலிகளை இயற்கையான முறையில் குறிப்பாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எப்படி தீர்க்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.Natural Remedies For pain reliefபெரும்பாலானோருக்கு இதிலேயே தீர்வு கிடைத்திடும் அதிக வலி இருந்தாலோ அல்லது நோயினால் ஏற்பட்ட வலியாய் இருந்தாலோ அல்லது எலும்புமுறிவாக இருந்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும்.பட்டை :

பட்டை :

பட்டையில் இருக்கும் சாலிசிலின் என்னும் மூலப்பொருள் ஆஸ்ப்ரின் போல செயல்படுகிறது. சிறிது பட்டையை வாயில் எடுத்து மென்றாலே பல் வலி குறையும்.
ஒரு டம்பளர் நீரில் பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.
பெரியவர்களுக்கு மட்டுமே இதனை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்துக் கூடாது. இதில் ஆஸ்ப்ரின் இருப்பதால் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பூண்டு :

பூண்டு :

ஆரம்ப காலங்களில் இருந்தே இதனை வலி போக்கும் மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். முதலில் தலைவலி, வயிற்று வலி போன்றவற்றிருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் சமீப காலங்களாக மைக்ரேன் தலைவலிக்கும் பயன்படுகிறது.
இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் உதடு மற்றும் நாக்கில் எரிச்சல் ஏற்படும். கர்ப்பிணிப்பெண்கள் இதனை பயன்படுத்தக்கூடாது.மஞ்சள்:

மஞ்சள்:

சமையலுக்கு, அழகுக்கு என்று பல வகையாக பயன்படுத்தப்படும் மஞ்சளை வலி போக்கும் நிவாரணியாகவும் பயன்படுத்தலாம்.
மஞ்சளில் இருக்கும் கர்குமின் ஓர் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் போல செயல்பட்டு நம் உடலில் உள்ள திசுக்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்ப்பட்டிருந்தால் அதை சரி செய்யும்.
ஜீரணக்கோளாறு,அல்சர்,வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு மஞ்சளை பயன்படுத்தலாம்.கிராம்பு :

கிராம்பு :

மசாலாப் பொருட்களில் ஒன்றான கிராம்பு, திடீர் மயக்கம், மற்றும் சளிக்கு நல்ல தீர்வை வழங்கும். அத்துடன் தலைவலி,ஆர்த்தரைட்டீஸ்,பல் வலி உட்பட பல வலிகளுக்கு தீர்வாகிறது.
இதிலிருக்கும் யுக்ஜினல் என்னும் மூலப்பொருள் பெயின் ரீலிவர் க்ரீம்களில் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது.
பற்களில் வலியிருந்தால் லேசாக ஒரு சொட்டு கிராம்பு எண்ணெயை ஊற்றுங்கள். அங்கு ரத்தக்கசிவு இருந்தால் இதனை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் கிராம்பு சில நேரங்களில் ரத்தக்கசிவை அதிகப்படுத்திவிடும்.கேப்சிகம் :

கேப்சிகம் :

வலியை உணரச் செய்திடும் திரவங்களை நீக்குவதில் கேப்சிகமில் உள்ள சத்துக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் இவை தாமதமாகத்தான் முடிவைத்தரும் குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும் என்பது குறிபிடத்தகக்து.இஞ்சி :

இஞ்சி :

மூட்டு மற்றும் தசை வலிகளுக்கு இஞ்சி சாறை பயன்படுத்தலாம். வீக்கம் இருந்தாலும் இஞ்சிச்சாற்றை தடவினால் சிறிது நேரத்தில் வீக்கம் குறைந்திடும்.
குறைந்த அளவு எடுத்தாலே போதுமானது. அதிகமாக எடுத்தால் வேறு சைட் எஃப்க்ட் வரும் என்பதால் கவனம் தேவை.நீர் :

நீர் :

தசை வலிகளுக்கும் ஆர்த்ரைட்டீஸின் சில வகைகளுக்கும் வெதுவெதுப்பான நீரே நல்ல பலன் கொடுக்கும். வேண்டுமானால் அதில் சில சொட்டு எசன்ஷியல் ஆயில் கலக்கலாம். பாத் டப்பில் குளிப்பதாக இருந்தால் அரை மணி நேரம் அதிலேயே உட்கார்ந்திருக்கலாம்.ஸ்ட்ரச்சிங் :

ஸ்ட்ரச்சிங் :

மருந்துகள் எதுவும் தேவையில்லை லேசான மசாஜ் மற்றும் கை கால்களை அசைப்பதாலேயே ஒரு ரிலீஃப் கிடைக்கும் வலிக்கும் போது அப்படியே வைத்திருக்காமல் உங்களால் முடிந்த அளவு கை கால்களை அசையுங்கள். அதிகப்படியான வலியிருந்தால் மருத்துவரை சந்திக்கலாம்.வெளியே செல்லுங்கள் :

வெளியே செல்லுங்கள் :

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் உடல் வலி ஏற்படும். காற்றோட்டமான இடங்களுக்கு சிறிது நேரம் சென்று விட்டு வாருங்கள்.
மனதளவிலும் நல்ல மாற்றத்தை உணரலாம். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பதாய் உணர்ந்தால் உடனடியாக சிறிய நடைப்பயிற்சி ஒன்றை செய்திடுங்கள்.
எப்போதும் உங்கள் உடலை ஆக்டிவாக வைத்திருந்தால் பாதி வலிகளை வரும் முன்னரே, தவிர்த்திடலாம்.

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...