நன்கு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதை அனைவரும் வழக்கமாக வைத்திருப்போம். அப்போது தான் சாப்பிட்டு முடித்த ஒரு உணர்வு கிடைக்கும். ஆனால் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது. மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக் கூட வழி வகுக்கும் என்பது தான் உண்மை.
தெரியாதவர்கள் இப்போது தெரிந்துக் கொள்ளுங்கள். செரிமான கோளாறுகளை தூண்டக்கூடிய ஒரே செயல் என்றால் அது சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் தான். இது மிக மோசமான பழக்கமாகும்.
நம் வயிற்றுக்கு நாம் எப்போது உணவு உண்ணுகிறோம் என்று நன்கு தெரியும். அதற்கு ஏற்றவாறு உணவை செரிக்க வைப்பதற்கான அமிலத்தை அது தானாக சுரக்கச் செய்யும். அதுவே தண்ணீர் குடித்தால் உணைவை செரிக்க செய்யும் அமிலத்தின் தன்மை மறைந்துவிடும். பின்பு உணவு செரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.
ஆயுர்வேத முறையின் படி வயிற்றில் ஏற்படும் எரிச்சல் செரிமானத் தன்மையை குறிப்பது என்று கூறப்படுகிறது. அதாவது பசி எடுத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சல் சாப்பிட்டினை செரிப்பதற்கு தயார் ஆவதை குறிப்பது என்று தெரியவருகிறது. இந்த தருணத்தில் தண்ணீர் குடிப்பது என்று வயிற்று செயல்களை பாதித்துவிடும்.
இந்தக் கட்டுரையில் சாப்பிட்ட பின் எதற்காக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் இப்போது அவற்றை பற்றி பார்ப்போம்...
வயிற்று உப்புசம்
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் வயிற்று செரிமான அமிலங்கள் பாதிக்கப்படுவதோடு, உணவு செரிக்காமல் அப்படியே வயிற்றில் இருந்துவிடும். இந்த செரிக்காத உணவு வாயு தொல்லையை அதிகரித்து, வயிற்று உப்புவத்தை ஏற்படுத்திவிடும்.செரிமானக் கோளாறு
வயிற்றில் செரிக்காமல் தேங்கி இருக்கும் உணவு ஒரு அசாதாரண உணர்வை ஏற்படுத்தும். மேலும், உடல் செயல்பாடுகளை தெரிதும் பாதித்துவிடும். இந்த செரிக்காத உணவு உடலில் மலச்சிக்கல், வாயுப் பிரச்சனை, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை அதிகப்படுத்திவிடும். மேலும், பெரிய பிரச்சனைகளை கூட ஏற்படுத்தும் வாய்ப்பு இதில் உள்ளது.
அசிடிட்டி
சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் அது வயிற்றில் உள்ள அதிலத்தன்மையை நீர்த்து போக செய்துவிடும். இதனால் செரிக்காமல் இருக்காமல் வயிற்றில் இருக்கும் உணவு அதிக நேரம் இருப்பதால், அது வயிற்றில் அதிலத்தை அதிகரித்துவிடும். இது அசிடிட்டியை ஏற்படுத்தி விடும்.
இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்
செரிக்காத உணவு உடலில் சேரும் போது அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். செரிக்காக உணவு உடலில் அதிக நேரம் தங்குவதால் ஏற்படக்கூடிய விளைவு இது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களே சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூற போதுமானது என்று கருதுகிறோம். சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பது என்பதை விட சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே சிறிது தண்ணீர் குடித்தால் ஆரோக்கியமானதாக அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment