Saturday 2 September 2017

மூச்சு விடுவதில் சிரமமா? இதுவும் காரணமாக இருக்கலாம்!!

கடினமான எந்த வேலையும் செய்யாதிருக்கும் போதும் பலமான மூச்சு வாங்குகிறதா? காரணத்தை அறிய தொடர்ந்து வாசியுங்கள்.11 Reasons for heavy breathing

இதற்கு காரணமாக பெரும்பாலும் நம்மால் தவிர்க்க முடிந்த காரணங்களே இருப்பதால் பயப்பட தேவையில்லை. 1.காய்ச்சல் அல்லது அதிகப்படியான உடற்சூடு :

1.காய்ச்சல் அல்லது அதிகப்படியான உடற்சூடு :

நம் உடலில் அதிகப்படியான சூடு ஏற்படும் போது நமக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படும். அதற்காகவே மூச்சு வேகவேகமாக மூச்சை வாங்குவர்.
இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளத்தேவையில்லை.
நான்கு நாட்கள் கடந்தும் அதிகரித்தால் மருத்துவரை அணுகலாம்.2.இன்பெக்‌ஷன் :

2.இன்பெக்‌ஷன் :

நம் உடலில் இன்பெக்‌ஷன் எதாவது ஏற்ப்பட்டால் கூட மூச்சு வாங்கும்.
விரைவில் அதற்கான காரணத்தை கண்டறிந்து தவிர்க்கலாம்.3.இருதயம் தொடர்பான நோய்கள் :

3.இருதயம் தொடர்பான நோய்கள் :

இருதயம் தொடர்பான நோய்களுக்கான அறிகுறியே பலமான மூச்சு வாங்குதல் தான். இதயத்தால் சரியான
அளவில் ஆக்ஸிஜனை பம்ப் செய்து மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியாத போது நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை வாங்க
இப்படி மூச்சு வாங்கும்.4.நுரையிரல் தொடர்பான பிரச்சனைகள்:

4.நுரையிரல் தொடர்பான பிரச்சனைகள்:

நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்குவதில் இதயமும் நுரையிரலும் சரிசமமான பங்கு வகிக்கின்றன. அதனால் நுரையிரலில்
ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால் கூட பலமாக மூச்சு வாங்கும்.5.உடல் வறட்சி :

5.உடல் வறட்சி :

நம் உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் வறட்சி ஏற்படும் போது, தங்களுக்கு தேவையான சத்துக்களை பெற உடலிலுள்ள செல்கள்
போராடுவதால் பலமான மூச்சு வாங்கும். உச்சி வெயிலின் போது வெளியில் செல்வதை தவிர்ப்பது, தேவையான அளவு தண்ணீரை குடிப்பது போன்றவற்றால் இதனை தவிர்க்கலாம். 6.பதட்டம் :

6.பதட்டம் :

பதட்டமான சூழலின் போதும், நம்மால் சமாளிக்கு முடியாதோ என்கிற பயம் வருகிற போதும் மூச்சு தொடர்பான சிக்கல்கள் ஏற்படும். உடனடியாக அமைதியான சூழலுக்கு மாறி
சிறிது நேரம் முழு மூச்சையும் எடுத்து விட முயற்சி செய்ய வேண்டும் தொடர்ந்து எதுவும் பயனளிக்கவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம்.
இதற்கு சைக்கோதெரபிஸ்ட் அல்லது ஸ்ட்ரஸ் மேனேஜ்மெண்ட் மருத்துவர்களை அணுகலாம்.7.அலர்ஜி :

7.அலர்ஜி :

மாசு தொடர்பான அலர்ஜியின் போது மூச்சு வாங்கும் அதோடு கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்றவையும் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வேறு இடத்திற்கு சென்றுவிடுங்கள்.8.ஆஸ்துமா :

8.ஆஸ்துமா :

சிறுவயதில் வரும் ஆஸ்துமா எந்த வயதிலும் அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
மன அழுத்தம், அதிகப்படியான வாசனை திரவியங்களை பயன்படுத்துவது,
அதிக காற்று மாசடைந்த பகுதிகளுக்கு செல்வது போன்றவற்றை தவிர்க்கலாம். 9.உடற்பயிற்சி :

9.உடற்பயிற்சி :

உடற்பயிற்சியின் போது உடலுறுப்புகளுக்கு அதிகப்படியான வேலை உண்டாவதால் அவற்றிற்கு ஆக்ஸிஜன் தேவை. ஆக்ஸிஜனின் தேவை அதிகரிக்க அதிகரிக்க இதயம் வேகமாக துடிப்பது,பலமாக மூச்சு வாங்குவது போன்றவை ஏற்படும்.
சிறிது நேரம் ஓய்வுக்குப் பிற்கு உடற்பயிற்சிகளை தொடரலாம். ஓய்வுக்குப் பின்னும் மூச்சு தொடர்ந்தால் தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறலாம்.10.ஒபிசிட்டி :

10.ஒபிசிட்டி :

உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க நம் உடலின் ரத்த ஓட்டத்திற்கும்,உடலெங்கும் ஆக்ஸிஜன் சென்று வரவும் சிரமம் ஏற்படும். இவர்கள் உடல் எடையை குறைப்பது மிக அவசியம்.11.நீண்ட நேர தூக்கம் :

11.நீண்ட நேர தூக்கம் :

நீண்ட நேரம் ஆழ்ந்து தூங்கும் போது, மூச்சின் இடைவேளி வேறுபடும். இதனால் ஏற்படும் தடுமாற்றத்தினால்
மூச்சு வாங்கும் அதோடு,குறட்டையும் ஏற்படும். நீண்ட நேரம் தூங்குவதை த்விர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...