புகை பிடித்தல், விளையாட்டாக வாலிபப் பருவத்தில் வந்து, வினையாக வாழ்வை அழிக்கக் கூடியது. இளைய வயதில் ஸ்டைலுக்காக, நண்பர்களின் வற்புறுத்தலால், வரும் இந்தப் பழக்கம் பின் எந்தக் காரணமும் இன்றி புகைக்க வைத்து அடிமையாக்கும்.
சிலரோ நடுத்தர வயதில் வரும் குடும்பச் சுமைகளின் காரணமாக வரும் மனச் சோர்வுக்கு புகைத்தலே, ஆறுதல் என்று இருப்பர்.
காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும்வரை, புகைப் பழக்கமே, துணையாக வாழும் எண்ணற்றோர் இங்கே, உண்டு.
அரசு ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் எந்தப் பொருட்களின் விலையை உயர்த்துகிறதோ இல்லையோ, நிச்சயம் புகையிலை சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்தி விடும். ஆயினும், எந்த விலையானாலும் என்ன என்று வாங்கிப் புகைக்கும் புகைஞர்கள் இருக்கையில், அரசுக்கும் அதிக வரி வருவாய் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களும் கொள்ளை லாபங்களில் கொழிக்கின்றன.
மீண்டு வர :
புகை பிடித்தலை, நிறுத்துவது என்பதும் புகை பிடித்தலை விலக்குவது என்பதும் வேறு வேறு. நண்பர்களிடம் பழகிக் கொண்டிருக்கிறீர்கள் அவர்களில் ஒருவர் நடவடிக்கை உங்களுக்குப் பிடிக்கவில்லை, விலகி விடுகிறீர்கள், மீண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வமோ அல்லது அவர்களிடம் மீண்டும் உரையாட வேண்டும் என்ற எண்ணமோ தேவையோ உங்கள் மனதில் துளி அளவும் இல்லை, இத்தனைக்கும் அவர் உங்களுடன் நல்ல நட்பில் இருந்தவர்தான், ஆயினும் என்ன, அவரின் இன்றைய செயல்கள் யாவும் தீதென உங்களுக்குத் தோன்றி, நீங்கள் விலகி விட்டீர்கள்.
மனதில் உறுதியோடு இருக்கிறீர்கள், அவ்வளவுதான், இனி அவரை எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நேரலாம், ஆயினும் என்ன, உங்கள் மன உறுதியினால், நீங்கள் அவரை சந்தித்தாலும், முகமன் கூறிவிட்டு விலகி விடுவீர்கள், இதுதானே, நடக்கும், நல்லது. அவ்வளவுதான், இதற்கு மிக்க மன உறுதி மட்டும் தேவை, இப்போது, புகை அரக்கனை முதலில், விலக்க ஒரு புறக் காரணியை துணை கொள்வோம்.
சூரிய காந்தி விதைகள்:
சூரிய காந்தி மலர்கள், சூரியனை நோக்கி மலரும் பூக்கள், நல்ல மருத்துவ பலன்கள் கொண்ட இந்த மலர்களின் விதைகளே நமக்கு, மிகப்பெரும் அளவில் நன்மை பயக்க வல்லது.
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சூரிய காந்தி விதைகளே, நெடுநாளாக இருந்த புகைப் பழக்கத்தை வெல்ல உறுதுணையாகும். சூரியகாந்தி விதைகளை வாயில் போட்டு மென்று வர, சிறிது சிறிதாக, புகை மேல் உள்ள நாட்டம் குறையும்.
உலர் திராட்சை :
பிறகு, உலர் திராட்சை அதே போல வாயில்; இட்டு மென்று வர, புகை மெல்ல விலகும்.
குப்பை மேனி :
இந்தப் புகையிலிருந்து முற்றிலும் விலகி வருவதற்கு. குப்பைமேனி மிளகு கலவை காலையில் சாப்பிட்டு வரலாம், மஞ்சள் மற்றும் வேப்பிலை சில நாட்கள் சாப்பிட்டு வர, உடலில் புத்துணர்வு தோன்றும்.
மன உறுதியைத் தளரவிடாமல் எண்ணிய எண்ணத்தில் உறுதியாக இருக்க குப்பைமேனி போன்ற மகா மூலிகைகள் எல்லாம் நல்ல உதவிகள் செய்யும்.
அட்டையாய் ஒட்டிக்கொண்டு, உங்கள் உடல் நலம் மற்றும் பொருளாதார நலம் பாதித்து, மேலும் உறவுகளில், சமூகத்தில் இருந்து உங்களைத் தனிமைப்படுத்திய அந்த புகை அரக்கனிடமிருந்து மனதின் ஆற்றலால் உறுதியால் முழுமையாக விலகி, புது வாழ்வு வாழலாம்.
No comments:
Post a Comment