Saturday 2 September 2017

தூக்கமின்மை காரணங்களும் தீர்வுகளும்

உற்சாகமான ஒரு நாளின் துவக்கம் என்பது முந்தைய நாளின் தூக்கத்தை பொறுத்து தான் அமையும். அதிகப்படியான கொழுப்பு,ரசாயனம் கலந்த சாஃப்ட் டிரிங்க்ஸ், பூச்சி மருந்து தெளித்த காய்கள் போன்றவற்றை சாப்பிட்டால் உடலுக்கு கேடு என்பது எவ்வளவு உண்மையோ அதே போன்றதொரு கேடு தூக்கமின்மையாலும் ஏற்படும். இதன் மோசமான பாதிப்புகள் உடனடியாக தெரியாது என்பதால் பலரும் இப்பிரச்சனை கண்டுகொள்வதேயில்லை.இதில் நீங்கள் எந்த வகை? :

இதில் நீங்கள் எந்த வகை? :

மருத்துவ காரணங்களை விடுத்து சிலருக்கு காரணமேயில்லாமல் தூக்கம் வரவில்லையென்றால் அதை தொடர்ந்து கண்காணித்து பிரச்சனையை உடனே தீர்ப்பது மிக மிக அவசியம்.தற்காலிக தூக்கமின்மை :

தற்காலிக தூக்கமின்மை :

நீண்ட பயணம், புது இடம், பழகாத சூழல் போன்றவற்றால் தூக்கம் வராது.இவ்வகையான பிரச்சனை சில நாட்களில் சரியாகிவிடும்.குறுகிய கால தூக்கமின்மை :

குறுகிய கால தூக்கமின்மை :

அலுவல் பிரச்சனைகள்,நண்பர்கள் மற்றும் உறவுகளிடத்தில் ஏற்படும் சங்கடங்கள் போன்றவற்றால் ஏற்படும் தூக்கமின்மை. இதுவும் பிரச்சனைகள் தீர்ந்தவுடன் அல்லது அதற்கான தீர்வை நீங்கள் கண்டடைந்தவுடன் சரியாகும்.நீண்ட கால தூக்கமின்மை :

நீண்ட கால தூக்கமின்மை :

இது ஒரு குறைபாடு என்றே சொல்லலாம். எதிர்காலம் குறித்த பயம், அதையொட்டிய சிந்தனை என ஒரு கற்பனை உலகில் மிதந்து கொண்டேயிருப்பர். எதிர்காலத்திற்கு ஒரு முடிவு ஏற்படாமல் அல்லது தீர்வு கிடைக்காம்ல் இவர்களின் மனமும் அலைபாய்ந்து கொண்டேயிருப்பதால் தூக்கமின்மையும் நீண்டு கொண்டேயிருக்கும்.பகல் தூக்கம் :

பகல் தூக்கம் :

சிலருக்கு பகலில் கட்டுப்படுத்த முடியாதபடி நன்றாக தூக்கம் வரும். ஆனால் இரவு படுக்கைக்கு சென்றவுடன் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து கொள்வர்.தவிர்க்க வேண்டியவை :

தவிர்க்க வேண்டியவை :

இரவில் தூக்கம் வரவில்லை என்று மொபைல் போன் நோண்டுவது, டிவி பார்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. அவற்றிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சத்தால் தொடர்ந்து
நமக்கு தூக்கம் வராது.படுக்கையறை :

படுக்கையறை :

காற்றோட்டமுள்ள வெளிச்சம் குறைவான அறையாக இருக்கட்டும். படுக்கையறையில் டிவி பார்ப்பது, அலுவல் வேலைகளை செய்வது, வீட்டுப் பிரச்சனைகளை விவாதிப்பது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். படுக்கறையறையில் அமைதியான சூழலை உருவாக்குங்கள். மெல்லிய இசையை இசைக்கச் செய்யலாம்.டின்னர்:

டின்னர்:

அதே போல,உடலில் அதிகமான இன்ஸுலின் சுரந்தாலும் தூக்கம் வரும் என்பதால் ரொட்டி,ஓட்ஸ்,அரிசி சாதம் போன்ற கார்போஹைட்ரெட் அதிமுள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அதிக உணவை எடுத்துக் கொண்டாலும் தூக்கம் வராது என்பதால் இரவு எளிமையான உணவை குறைந்த அளவே எடுத்துக்கொள்ளுங்கள்.பழம் :

பழம் :

தூங்குவதற்கு முன்னால் இரவு உணவாக மெலடோனின் வேதிப்பொருள் சுரக்கும் உணவுகளை
எடுத்துக்கொள்ள வேண்டும். செர்ரி,வாழைப்பழம் போன்றவற்றில் அதிக மெலடோனின் ள்ளதுபால்:

பால்:

பாலில் இருக்கும் ட்ரிப்டோபன் என்ற அமிலமும் கால்சியமும் தூக்கத்தை தூண்டும் என்பதால்
இரவு உணவுக்குப்பிறகு பால் குடிக்கலாம். உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

நல்ல உடற்பயிற்சி ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். ஆனால் மிக அதே உடற்பயிற்சியை அதிக நேரம் எடுத்துக்க்கொண்டால் அதுவே தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும். உடற்பயிற்சிகளை மாலைக்குள் முடித்துவிடுவது நன்று.தண்ணீர் :

தண்ணீர் :

உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து இல்லையென்றாலும் தூக்கம் வராது என்பதால் தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.டயட் :

டயட் :

ரெடிமேட் உணவுகளை தவிர்த்திடுங்கள். குளிர்பானம்,காபி அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை குறைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் அதிக மசால ணவுகள்,எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்திடுங்கள். தூக்கமின்மையால் அவதிப்படும் முதியவர்கள் உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...