இடுப்பில் ஏற்படும் தொற்று என்பது தான் இடுப்பு அழற்சி நோய் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் pelvic inflammatory disease (PID) என்பர். இந்த நோயின் அறிகுறி இடுப்புப் பகுதியில் பெண்களுக்கு அதிகமான வலி ஏற்படும். இந்த நிலையானது இடுப்பில் உள்ள உறுப்புகளான கருப்பை, ஓவரிஸ், கருமுட்டை குழாய் மற்றும் பெரிடோனியம் போன்றவற்றில் ஏற்படும் தொற்றின் வெளிப்படாகும்.
இந்த உறுப்புகள் தான் வயிற்றுப் பகுதியை சுற்றி அமைந்துள்ளன.
இந்த PID நோயில் ஒரு வகையான பாக்டீரியா, பெண்களின் வெஜினா அல்லது கருப்பை வாய் வழியாக பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சென்றடைகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணம் உடலுறுவின் மூலம் செல்லும்.
நோய்க் கிருமிகளான க்ளெமிடியா ட்ரோகோமடிஸ் மற்றும் கொனொரியா ஆகும்.
இந்த பாக்டீரியா உடலுறுவின் போது பெண்களின் வெஜினா வழியாக இனப்பெருக்க உறுப்புகளை சென்றடைந்து PID ஏற்பட வழி வகிக்கின்றன.
இந்த PID யை குணப்படுத்த ஒரு நல்ல வழி இயற்கை முறைகள் ஆகும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போறோம். இந்த PID நோயானது மேலும் பாலுறவு மூலம் (sexual intercourse) உருவாகும் வேறு நோய்க்கிருமிகளாலும் (SID pathogens) உருவாகுகிறது.
இந்த நோயானது ஆண்களை தாக்குவதில்லை. பெண்களின் இடுப்புப் பகுதியை தான் பாதிக்கிறது. சரி இப்பொழுது இதை எப்படி இயற்கை முறைகளை வைத்து சரி பண்ணலாம் என்று பார்ப்போம்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுதல்
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய்க் கிருமிகள் தாக்கத்தில் இருந்து உங்கள் உடலை பாதுகாக்கலாம். நிறைய கால்சியம் நிறைந்த உணவுகள், கீரைகள், காலே, பீன்ஸ், பிரக்கோலி, பால் பொருட்கள் மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளான ப்ளு பெரிஸ், செர்ரி, தக்காளி, ஸ்குவாஷ், குடை மிளகாய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
2.தினமும் மல்டி விட்டமின்கள்
தினமும் மல்டி விட்டமின்கள் அடங்கிய மாத்திரைகளை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி, ஈ போன்றவைகளும் மற்றும் தாதுக்களான மக்னீசியம், கால்சியம், ஜிங்க் மற்றும் செலீனியம் போன்றவைகளும் உள்ளன. இது PID யை சரிபண்ணுவதற்கான ஒரு நல்ல வழி முறையாகும்.
3 . ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சாப்பிட்டால் அழற்சியின் வீரியத்தை குறைக்கிறது. மீன் எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் 1-2 தினமும் சாப்பிடலாம் அல்லது ஒமேகா 3 அடங்கிய இயற்கை உணவுப் பொருட்களான ஆளி விதைகள், சியா விதைகள், சால்மன் மீன், வால்நட்ஸ், மாட்டிறைச்சி, டோஃபு, சர்டைன் மீன் போன்றவற்றை சாப்பிடலாம்
4.புரோபயாடிக் சப்ளிமென்ட்ஸ் :
தினமும் இதை எடுத்துக் கொண்டால் இதில் உள்ள 5-10 பில்லியன் (colon forming units) உங்களின் சீரண மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது PID யை துரத்தி விடும்
கிரேப் ஃப்ரூட்டின் எண்ணெய்
தினமும் 100 mg கிரேப் ஃப்ரூட் எண்ணெய்யால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அல்லது 5-10 துளிகளை நீங்கள் குடிக்கும் பானத்தில் கலந்து குடிக்கலாம். இதில உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து PID யை எதிர்த்து போராடுகிறது. இடுப்பு அழற்சி நோய்க்கு இது ஒரு நல்ல முறையாகும்.
6.கிரீன் டீ
கிரீன் டீ யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இதை 250-500 மில்லி கிராம் குடித்து வந்தால் இடுப்பு அழற்சி நோயிலிருந்து விடுபடலாம். மேலும் இதைப் பற்றிய ஒரு தகவல் மனிதன் T6 செல்லானது நுண்ணுயிரிகள், சமையல் தாவரங்கள் மற்றும் டீ போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கும் அல்கலமைன்யை அடையாளம் கண்டு கொள்கிறது. இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.
7.புலி தடுக்கி
இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி பூஞ்சை பொருட்கள் அழற்சிக்கு எதிராக செயல்படுகின்றன. இதை ஒரு நாளைக்கு 3 முறை 20 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. உங்களுக்கு லுகோமியா இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு இந்த முறையை மேற்கொள்ளவும்.
8.ப்ரோமெலைன்
இதை தினமும் ஒரு நாளைக்கு 3 முறை என்ற விதத்தில் 40 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் PID யால் ஏற்பட்ட வலி மற்றும் அழற்சியை போக்குகிறது. நீங்கள் ஆஸ்பிரின் சிகிச்சை மேற்கொண்டு கொண்டு இருந்தால் இந்த முறையை மருத்துவர் ஆலோசனை பெற்று செய்யவும்.
9 . ரிஷி காளான்
இந்த காளான் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மற்றும் அழற்சியிலிருந்து காக்கிறது. ஒரு நாளைக்கு 150-300 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல முறை உங்களை இடுப்பு அழற்சி நோயிலிருந்து பாதுகாக்கும்.
10.ஆலிவ் இலைகள்
இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு பொருட்கள் உள்ளது. இதை ஒரு நாளைக்கு 1-3 முறை 250-500 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் நல்லது. அல்லது இதில் தேநீர் தயாரித்து குடிக்கலாம். உங்களுக்கு குறைவான சர்க்கரை அளவு இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு இந்த முறையை மேற்கொள்ளவும்.
11.விளக்கெண்ணெய்
இடுப்பு அழற்சி நோயால் ஏற்படும் வலியை இது குறைக்கிறது. விளக்கெண்ணெய்யில் ஒரு சிறிய துணியை நனைத்து அதை வயிற்றின் மேல் வைக்க வேண்டும். இதன் மேல் உங்களால் தாங்கக் கூடிய அளவு சூட்டில் உள்ள ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். இதை 3 நாட்கள் தொடர்ந்து செய்தால் வலி குறைந்திடும்.
12. பூண்டு
இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் PID யை சரி பண்ணுகிறது. இது ஒரு சிறந்த வீட்டு முறையாகும். மேலும் வெள்ளைப்படுதல் போன்றவற்றையும் சரியாக்குகிறது. 1அல்லது 2 பூண்டை ஒரு டம்ளர் தண்ணீருடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது. இது PID யை குணப்படுத்துவதில் ஒரு மிகச் சிறந்த முறையாகும்.
என்னங்க இந்த இயற்கை முறைகளை பின்பற்றி இடுப்பு அழற்சி நோயை காணாமல் செய்யுங்கள்.
No comments:
Post a Comment