ஏடிஸ் ஆஜிப்டி எனும் கொசு கடிப்பதால் மக்கள் மத்தியில் பரவும் நோய் தான் டெங்கு. டெங்கு காய்ச்சலால் உலக நாடுகளில் இரண்டிலிருந்து, மூன்று கோடி வரை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
டெங்கு காய்ச்சலுக்கு இப்போது வரை தனி சிறப்பு ஆன்டிவைரஸ் மருந்துகள் இல்லை. பிளேட்டுலெட்டுகள் வெகுவாக குறைவதாலேயே பல்வேறு ஆரோக்கிய கோளாறுகள் மற்றும் உயிரிழக்க காரணமாக இருக்கிறது.
எனவே, டெங்குவின் போது பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க செய்வது மிக அவசியம்.
பப்பாளி இலை!
பப்பாளி இலையில் சாறு உடலில் பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இது புற்றுநோய் எதிர்ப்பு மூலப்பொருள், அழற்சி மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்பு கொண்ட மூலப் பொருட்கள் இருக்கிறது என அறியப்பட்டுள்ளது.
இலங்கை ஆய்வு!
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் 12 டெங்கு நோயாளிகளை கொண்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் பப்பாளி இலை சாற்றின் பங்களிப்பு குறித்தும் கூறப்பட்டிருந்தது.
நேர இடைவேளை!
தற்போது கடைப்பிடிக்கப்படும் மருத்துவ முறையுடன் சேர்த்து எட்டு மணிநேர இடைவேளைக்கு இருமுறை பப்பாளி இலை சாறு அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இவர்களிடம் பிளேட்டுலெட்டுகள் மாற்றம் வெள்ளை அணுக்கள் 24 நேரத்தில் அதிகரிப்பதை மருத்துவர்கள் ஆய்வில் கண்டறிந்தனர்.
இந்தோனேசிய ஆய்வு!
இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பப்பாளி இலைசாறு டெங்கு காய்ச்சல் நோயாளிகள் மத்தியில் வேகமான முன்னேற்றம் காண உதவியது. இது, மருத்துவமனையில் இருக்கும் நாட்களை குறைக்க உதவுகிறது எனவும் கூறப்பட்டிருந்தது.
290 நோயாளிகள்!
மேலும், பப்பாளி இலை சாற்றின் திறனை கண்டறிய பிளேட்டுலெட்டுகள் குறைவாக இருந்த 290 பேர் மத்தியல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு டெங்கு சிகிச்சையுடன் காலை உணவுக்கு 15 நிமிடங்களுக்கு பிறகு 50 மில்லி பப்பாளி சாறு அளிக்கப்பட்டது.
இரு குழுக்கள்!
இவர்களில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவுக்கு வெறும் டெங்கு சிகிச்சையும். மற்றொரு குழுவிற்கு பப்பாளி இலைசாறு கூடுதலாகவும் அளிக்கப்பட்டது.
இதில் பப்பாளி சாறு அளிக்கப்பட்டவர்கள் மத்தியில் பிளேட்டுலெட்டுகள் எண்ணக்கை அதிகமாக உயர்வதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
எச்சரிக்கை!
பப்பாளி இலை என்பது மிக எளிதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும் பொருளாகும். எனினும். இது பிளேட்டுலெட்டுகள் மற்றும் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க தான் உதவுகிறது என அறியப்பட்டுள்ளது.
எனவே, ஒருவருக்கு டெங்கு இருப்பது ஊர்ஜிதம் ஆனால், மருத்துவரிடம் கூறி, டெங்கு சிகிச்சையுடன் பப்பாளி இலை சாறு எடுத்துக் கொள்ள முயலுங்கள். அதுவும் மருத்துவ அறிவுரைப்படி.
No comments:
Post a Comment