ஆண் பெண் இருபாலர்களுக்கும் உடல் அமைப்பில் மாற்றம், மரபணு வேறுபாடுகள், இனப்பெருக்க செயல்பாடுகள் போன்றவற்றால் ஊட்டச்சத்துக்கள்களின் தேவை இருவருக்கும் மாறுபடுகின்றன. இதன் காரணமாக ஒரு ஆணுக்கு சராசரியாக தினமும் 2500 கலோரிகளும், பெண்ணிற்கு 2000 கலோரிகளும் தேவைப்படுவதாக தெரிய வருகிறது.
பொதுவாக ஆண் பெண் இருபாலரின் உடல் மற்றும் தசைகளின் அடர்த்தியை கொண்டே கலோரிகள் தீர்மானிக்கப்படுகிறது. பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களின் தசை 30 - 40 % அதிகமாகும். அதன் அடிப்படையில் தான் ஆண் பெண் இருவருக்கும் தேவையான கலோரிகள் தீர்மானிக்கப்படுகின்றன.சரி இந்த ஊட்ட சத்துகள் எவ்வாறு பெறப்படுகின்றன? பொதுவாகவே கார்போ ஹைட்ரேட் மூலமாகவே அதிக கலோரிகள் நமக்கு கிடைக்கின்றன. அது நமது உணவில் 45% - 65% இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த கார்போ ஹைட்ரேட்கள் அரிசி சம்மந்தப்பட்ட உணவுகளில் அதிகம் நிறைந்திருக்கின்றன. அதைத் தவிர பாஸ்தா மற்றும் தானியங்களிலும் கலோரிகள் நிறைந்திருக்கின்றன.இருந்தாலும் இவைகளை அளவுக்கு அதிகம் உட்கொள்வதால் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு மன சோர்வு வருவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பாஸ்டா மற்றும் தானியங்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதாலேயே இது போன்ற மன சோர்வு வருவதாக ஒரு டாக்டர் குறிப்பிட்டார்.
மேலும் ஆண் பெண் இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பெண்களுக்கு ஏற்படும் மாததவிடாய், பிள்ளைப்பேறு ஆகியவற்றால் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களின் எலும்பு தன்மை முதலியவற்றால் கால்சியம் அதிகமாகவே தேவைப்படுகிறது. ஆண்களுக்கு தினமும் 700 மிகி கால்சியம் போதுமானது. ஆனால் அதுவே பெண்களுக்கு 1200 மிகி தேவைப்படுகிறது.
இந்த கால்சியம் சத்தானது பால் பொருட்களில், குறிப்பாக பாலடை கட்டியில் அதிகம் நிறைந்திருக்கிறது. அதை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் கால்சியம் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஆண் பெண் இருவரும் தினமும் கோகோ நிறைந்த சாக்லேட் எடுத்துக்கொள்வது மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்படுவதால் எதிர் காலத்தில் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயங்கள் குறைக்கப்படுகின்றன.மேலும் ஜிங்க் ஆண்களுக்கு தினமும் 9.5 மில்லி கிராமும் பெண்களுக்கு 7 தில்லி கிராமும் தேவைப்படுகிறது. மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களில் ஜிங்க் அதிகம் உள்ளது. பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளிலும் ஜிங்க் நிறைந்துள்ளது.
மதுவைப் பொறுத்தவரை பொதுவாக இருபாலருமே குறைவாக எடுத்துக்கொள்வது இதயத்திற்கு நல்லது. அதே சமயம் மது பழக்கத்தால் பெண்களுக்கு மார்பு புற்று வரும் வாய்ப்பு இருப்பதால் அதை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது அதைவிட மிக நல்லது. இறுதியாக முக்கியமான தாதுக்கள் வைட்டமின்கள் நிறைந்ததொரு சமநிலை உணவு இருபாலருக்குமே தேவை; அதைவிட முக்கியமானது நல்லதொரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை. எனவே, அதை நாம் தவறாமல் கடைப்பிடிப்போம்.
No comments:
Post a Comment