பருவ மழைக்காலம் வரப் போகுது என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பர். தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் குழந்தைகள் விளையாடி ஆனந்தம் கொள்வர். பெரியவர்களும் தங்களது நிறைய தேவைகளுக்கு மழையை நம்பி வாழ்கின்றனர்.
இப்படி எல்லாரும் மழைக்காலத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருப்போம். ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இந்த மழைக்காலத்தில் வளங்களோடு வியாதிகளும் நோய்களும் சேர்ந்து வருவது தான்.
சரிங்க வருகின்ற இந்த நோய்களை சரி பண்ற முறையை தெரிந்து கொண்டால் நிஜமாகவே நாம் எல்லாரும் மழைக்காலத்தில் சந்தோஷத்தில் நனையலாம் அல்லவா.
எனவே இந்த இக்கட்டான கால கட்டத்தை சமாளிக்கவே ஆயுர்வேதம் நமக்கு நிறைய மருத்துவ பொருட்களை கூறுகிறது. இந்த ஆயுர்வேத முறையையும் அதன் பயன்களை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போறோம்.
டிப்ஸ் #1
இந்த மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஆயுர்வேத முறைப்படி இந்த காலத்தில் காரமான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
காரணம்
காரமான உணவுகள் உங்களது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சரும அழற்சிகள் மற்றும் பயோடெர்மா போன்ற நோய்களை ஏற்படுத்தி விடும். எனவே நீங்கள் அடுத்த தடவை காரசாரமான பக்ரோஸ் சாப்பிட நினைத்தால் தயவு செய்து அதை கைவிட்டு விடுங்கள்.
டிப்ஸ் #2
நீங்கள் இக்காலத்தில் வேப்பிலையை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
காரணம்
வேப்பிலையில் உள்ள கசப்புத் தன்மை எந்த வகை கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் பெற்றது. எனவே இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த நோயும் உங்களை அண்டாது. மேலும் இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தில் ஏற்படும் எல்லா வகையான பாக்டீரியல் மற்றும் பூஞ்சை தொற்றை தடுக்கிறது.
டிப்ஸ் #3
துளசியுடன் சுடு தண்ணீர் கலந்து குடிப்பது இக்காலத்திற்கு அருமையான மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
காரணம்
துளசி தான் மூலிகையின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் இறப்பை ஏற்படுத்தும் காய்ச்சலான டெங்கு, மலேரியா போன்றவற்றிலிருந்து காக்கிறது . இந்த இரண்டும் மழைக்காலத்தில் அதிகமாக பரவும் நோயாகும்.
டிப்ஸ் #4
அடுத்ததாக நாம் பார்க்க போவது மெத்தி என்று அமைக்கப்படும் வெந்தயம் ஆகும். இந்த வெந்தயம் எல்லா நேய்களுக்கும் ஒரு தடுப்புப் பொருளாக செயல்படுகிறது.
காரணம்
இது நமது உடலின் ஆற்றலை அதிகரிக்கும் பொருளாகும். இதில் உள்ள நிறைய தாதுக்கள் உங்களை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. நீங்கள் காய்ச்சலில் இருக்கும் போது கூட இதை எடுத்து கொள்ளலாம். மேலும் நிறைய வகையான சீரண பிரச்சினையை சரி பண்ணுகிறது.
டிப்ஸ் #5
மஞ்சள் மற்றும் சூடான பால் தொண்டை கட்டு, தொண்டையில் ஏற்படும் தொற்றுகள், மார்புச்சளி மற்றும் சளித் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
காரணம்
இதில் குர்குமின் என்ற சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மழைக்காலத்தில் ஏற்படும் சளித் தொல்லைகளிலிருந்து நம்மை காக்கிறது.
டிப்ஸ் #6
பாகற்காய் ஆயுர்வேதத்தில் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்.
காரணம்
இதில் விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது உடலில் ஏற்படும் நோய்களை நம்மை அண்ட விடாமல் துரத்தி விடும். மேலும் இதை சாப்பிட்டால் ஆரோக்கியமான கட்டுக்கோப்பான உடம்பு கிடைக்கும்.
டிப்ஸ் #7
எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகள் வாய்க்கு ருசியாக இருக்கும். ஆனால் இந்த மழைக்காலத்தில் உடலுக்கு இது மிகவும் கேடு.
காரணம்
இந்த பொருட்களில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உங்கள் சீரண சக்தியை கஷ்டமாக்கி விடும். இதனால் இந்த எண்ணெய் கொழுப்புகள் நம் உடலிலே தங்கி இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது எனவே மழைக்காலத்தில் இதை தவிர்ப்பது தான் சிறந்தது.
என்னங்க இந்த ஆயுர்வேத பொருட்களை கொண்டு மழைக்காலத்தில் நோயிலிருந்து விடுபடுங்கள். மழைக்காலத்தை சந்தோஷமாக அனுபவித்து ரசியுங்க
No comments:
Post a Comment