பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர்.
எதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்?
அதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும்.
பொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.என்ன செய்ய வேண்டும்?
காலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.
அற்புத மருந்து :
உடலின் வலிவிற்கும் மனதின் பொலிவிற்கும் சித்தர்கள் கூறும் காய கற்பங்கள், உறு துணையாகும், காய கற்பங்கள் மூலம் நோய் நீங்கி மனமும் செம்மையாகி, நரை திரை மூப்பு இன்றி, பெரு வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் நல் வாக்கு.
அத்தகைய பெருமையும் உயரிய குணங்களும் கொண்ட காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலாய்க் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். கடுக்காய் உண்டால், மிடுக்காய் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு. மிக உயர்ந்த நலம் பயக்கும் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டு விளங்குவதால் தான் சித்தர்கள், கடுக்காயை தாயினும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர்.
பெற்ற தாய் குழந்தையின் மேல் உள்ள பற்றால், பல விதமான தின் பண்டங்களைச் செய்து அவர்கள் உடல் நலன் கெடுத்து விடுவர், ஆயினும், கடுக்காயோ அத்தகைய உடல் நலனைச் சரி செய்து அவர்களின் வயிற்றை சுத்தம் செய்துக் காத்து, அவர்களின் நல்வாழ்வை நீட்டிக்கிறது என்பர்.
தேவர்களின் அமிர்தத்துக்கு ஒப்பானது என சித்தர்களால் போற்றப்படும் கடுக்காய் மனிதனின் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கிறது, ஒருவன் தன் உடல் நலனுக்காக மருந்து உண்ண முயற்சிக்கும் வேளையில், முதலில் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி உடல் தூய்மை பெற வேண்டும். தினமும் இரவில் கடுக்காய்ப் பொடி உண்டுவர, மாசுக்கள் நீங்கி உடல் வலுவாக, கடுக்காய் அருந் துணை புரியும்.
இத்தகைய ஆற்றல் மிக்க தேவ மூலிகை கடுக்காய் மூலம் இளம் பெண்டிரின் மாத விடாய்க் கோளாறுகளை சரி செய்வது எவ்வாறு, எனப் பார்க்கலாமா?
கடுக்காயின் ரகசியம் :
கடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும், இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும் என்பதே, சித்தர்கள் கூறும் இரகசியம்.
பயன்படுத்தும் முறை :
கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.
நன்மைகள் :
அது மட்டுமா, ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதா மாதம் மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம்.
கடுக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக காரம் மற்றும் கொழுப்புகள் சேர்ந்த உணவுகளால், உடலின் செரிமானத் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் வயிற்றில் சேரும் நச்சுத் தன்மைகளே உடலின் பல்வேறு உபாதைகளுக்கும் மூல காரணம், இத்தகைய நச்சுக்களால் தான், மாதாந்திர வலிகளும் கடுமையாக ஏற்பட்டன.
நோய் எதிர்ப்பு சக்தி :
கடுக்காய் தோல் தீநீர் உடல் நச்சு போக்கி, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்,
உடலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த அற்புத குணப்படுத்தும் நிலைகளால்தான், இயற்கையாக அதிகரிக்கும் உடலின் ஆரோக்கிய செயல் பாடுகளால், பெண்கள் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி, தேறி வரும்.
அற்புத கற்ப மூலிகை கடுக்காய்ப் பொடி, தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வர, நம் உடலை நோய்களில் இருந்து காக்கும், உடலுக்கும் மனதிற்கும் எப்போதும், நல்லதை மட்டுமே செய்யும்.
1xbet korean betting site, review - Legalbet
ReplyDelete1xbet korean betting site, 1xbet korean review, betting site, registration details. ➤ Sports betting, online septcasino slots & casino games ⚽ Live 바카라 사이트 casino, sports betting.