உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களும் பெண்களும் உடலில் ஆற்றல் இல்லாமல் சோர்ந்த நிலையில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் இன்றைய வாழ்க்கை முறை. நடமாட்டம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் பல்ப், மொபைல் போன், கேட்ஜெட்டுகள் போன்றவை இல்லாததால் சரியான நேரத்திற்கு தூங்கி எழுந்து வேலை பார்த்து வந்தனர். அதனாலேயே நன்கு ஆரோக்கியமாகவும் இருந்தனர்.
ஆனால், இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மொபைல் போன் மற்றும் கேட்ஜெட்டுகளை உபயோகிப்பது பழகி விட்டது. அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்னும் நிலை ஏற்பட்டுவிட்டு விட்டதால் தூக்கம் இல்லாமல் உடல் நிலை பாதித்து சோர்ந்து காணப்படுகின்றனர்.
ஒரு மனிதனுக்கு முறையாக 7 மணி நேரம் சரியான தூக்கம் இருந்தாலேயே நல்ல ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி 7 முதல் 9 ணி நேரம் தூங்கி எழுந்தாலும் சிலர் சோர்வாக தான் காணப்படுகிறார்கள். இவ்வாறு ஏற்படுவதற்கு அந்த 7 மணி நேரத் தூக்கம் முறையான தூக்கமாக இல்லாதது காரணமாக இருக்கலாம். அப்படி சோர்வாக உணர்வதற்கான 4 முக்கிய காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாருங்கள்...உடல் உழைப்பின்றி இருப்பது
ஆனால், இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மொபைல் போன் மற்றும் கேட்ஜெட்டுகளை உபயோகிப்பது பழகி விட்டது. அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்னும் நிலை ஏற்பட்டுவிட்டு விட்டதால் தூக்கம் இல்லாமல் உடல் நிலை பாதித்து சோர்ந்து காணப்படுகின்றனர்.
ஒரு மனிதனுக்கு முறையாக 7 மணி நேரம் சரியான தூக்கம் இருந்தாலேயே நல்ல ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி 7 முதல் 9 ணி நேரம் தூங்கி எழுந்தாலும் சிலர் சோர்வாக தான் காணப்படுகிறார்கள். இவ்வாறு ஏற்படுவதற்கு அந்த 7 மணி நேரத் தூக்கம் முறையான தூக்கமாக இல்லாதது காரணமாக இருக்கலாம். அப்படி சோர்வாக உணர்வதற்கான 4 முக்கிய காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாருங்கள்...உடல் உழைப்பின்றி இருப்பது
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் கணினி சம்மந்தப்பட்ட வேலைகளை பார்ப்பதால் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலை இருக்கிறது. இதற்காக தினமும் 1000 படிகள் ஏறி இறங்குவது, நிறைய தூரம் நடப்பது என்றெல்லாமல் தேவை இல்லை. நிறைய நேரம் உட்கார்ந்திருப்பது உடலில் சோர்வினையும், மூட்டு எலும்புகளில் வலியையும், இடுப்பு வலியையும், நாள்ப்பட்ட தலைவலியையும் ஏற்படுத்தக்கூடும். இது ஆரோக்கியமான வாழ்நாளை குறைத்துவிடும். இவற்றிற்கு வழி என்னவென்றால், நிறைய நேரம்உட்கார்ந்திருக்கும் தருணத்தில் சிறிது நேரம் எழுந்து நடப்பது, அதாவது, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து 10 நிமிடம் நடக்கலாம், மாடிப்படி ஏறி இறங்கலாம், அருகில் இருப்பவருடன் நடந்து கொண்டே சிறிது பேசலாம். இவை எல்லாம் நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யக்கூடும்.
முறையற்ற உணவு பழக்கம்
சர்க்கரை அதிகமுள்ள உணவுகள், சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால் அதை முதலில் விடுங்கள். இதுவே உடலுக்கு முறையான தூக்கத்தை தரக்கூடியது. ஒரு வேலை நீங்கள் அனைத்து உணவு வகைகளையும் முறையாகவும் சரியாகவும் எடுத்துக்கொண்டாலும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று அர்த்தம். அந்த தருணங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.தரமற்ற தூக்கம்
பெரும்பாலோர் 7 முதல் 9 மணி நேரங்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள். இருப்பினும் அவர்கள் காலையில் எழும்போது சோர்வாகவும், மந்தமாகவும் உணர்கிறார்கள். இதற்குக் காரணம் தூக்க சுழற்சி சரியாக இல்லாதது. ஒரு வழக்கமான தூக்க சுழற்சியை 75 முதல் 90 நிமிடங்கள் வரை REM மற்றும் REM இல்லாத தூக்கம் மற்றும் பிற நிலைகள் இடையே அமையும். இந்த நிலைகளில் ஒவ்வொன்றும் உங்கள் உடலை புதுப்பித்துக்கொள்வதற்கு மற்றும் நச்சுத்தன்மையை நீக்க உதவுவதற்காகவும் செயல்படக்கூடியது. தரமற்ற தூக்கத்திற்கு முக்கிய காரணங்கள் மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவு பழக்கம், நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது, ஆல்கஹால் குடிப்பது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரவில் அதிக நேரம் வெளிச்சத்தில் இருப்பது போன்றவை.
இவற்றில் இருப்பது தப்பிக்க அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் பட செய்வது, மதிய வேலையில் காஃபின் அளவு சேர்ப்பதை குறைப்பது, எலெக்ட்ரிக் உபகரணங்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது, புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.மன அழுத்தம்
வேலையிலும், தொழிலும், எதிர் காலத்திலும் அதிக அக்கறை செலுத்தி உடலை கவனித்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் பலரை பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களை பார்க்கும போது நீங்களே தெரிந்துக்கொள்ளலாம் அவர்களின் தூக்கம் கெட்டு உடல் சற்று சோர்வாகவே காணப்படும். தூக்கத்தை கெடுத்துக்கொண்டு தொழிலை கவனிப்பதால் கிடைக்கும் பலன் மனஅழுத்ததின்ல் உருவான உடல் சோர்வு. இந்த காலத்து ஆண்களும பெண்களும் பெரும்பாலும் மருத்துவரை அணுகுவது மப அழுத்தத்தை சரி செய்வதற்காக மட்டுமே. இவற்றை போக்கும் வழியாக அமைவது தியானம், யோகா, மசாஜ் மற்றும் இயற்கை காற்றில் நடமாடுவது போன்வறை. மேலும், மொபைல் போனை சற்று தொலைவில் வைத்துவிடுங்கள்.
No comments:
Post a Comment