Saturday, 2 September 2017

உங்கள் ரத்தத்தில் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் சிறந்த உணவுகள்!!

இரத்தத்தில் இருக்கும் கூறுகளான இரத்த தட்டுக்கள், காயங்களின் போது உங்கள் உடலில் குறையும் இரத்தத்திலிருந்து காப்பாற்ற பெரிதும் உதவுகிறது.
இருப்பினும், எப்படி உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கை குறைகிறது? என்பதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தட்டுக்கள் என்பது இரத்த செல்களாகும். இது நம் உடலில் இரத்த கட்டிகளை உருவாக்க உதவுகிறது. மேலும், இந்த தட்டுக்களிற்கு, செல்களில் உண்டாகும் குறைகளை சரி செய்யும் குணமும் இருக்கிறது.
தட்டுக்களின் எண்ணிக்கையானது, தட்டுகளின் செறிவில் இருக்கும் இரத்தம் கொண்டே கணக்கிடப்படுகிறது. சாதாரணமாக, இரத்த எண்ணிக்கை என்பது 150,000 முதல் 400,000 தட்டுக்கள் வரை இரத்த நுண்ணுணர்வை காட்டிலும் இருக்கிறது.Best Foods To Increase The Blood Platelet Countகுறைவான தட்டுக்களின் எண்ணிக்கைகான சில பொது அறிகுறிகளாக, அதிகமான சிராய்ப்பு, மூக்கு அல்லது ஈறுகளில் ஏற்படும் தன்னலமற்ற இரத்தப்போக்கு, வெட்டுகளினால் ஏற்படும் தொடர் இரத்தம் வடிதல், மலத்தில் இரத்தம், தோல் வடுக்கள் ஆகியவை காரணங்களாக இருக்கிறது.
மேலும், பெண்கள்...அதிக மாதவிடாய் ஓட்டத்தின்போதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இத்தகைய சிரமத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு பலவீனம் மற்றும் சோர்வும் உண்டாகிறது.
இவ்வாறு இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை ஒரு நபருக்கு குறைவதற்கோ அல்லது ஏற்றம் அடைவதற்கோ முக்கிய காரணமாக...புற்றுநோய், கடுமையான கல்லீரல் நோய், ரத்தப் புற்று நோய் (லுகேமியா), இரத்த சோகை, தீங்குவிளைவிக்க கூடிய இரசாயணங்களின் வெளிப்பாடு, கர்ப்பமடைதல், கீமோதெரபி மருந்துகள், அதிகம் மது அருந்தும் பழக்கம், வைட்டமின் B12 குறைபாடு என இன்னும் நிறையவே இருக்கிறது.
இந்த ஆர்டிக்கலின் மூலமாக, சில சிறந்த உணவுகளை கொண்டு உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிக்க செய்வது என்பதை நாங்கள் விவரித்திருக்கிறோம். மேலும் தொடர்ந்து இதனை நீங்கள் படிப்பதன் மூலம், எத்தகைய உணவெல்லாம், உங்கள் இரத்த தட்டுக்களை அதிகரிக்க செய்யும் சிறந்த உணவுகள் என்பதை நாம் பார்க்கலாம்.வைட்டமின் C அடங்கிய உணவுகள்:

வைட்டமின் C அடங்கிய உணவுகள்:

உங்கள் உடம்பில் இருக்கும் தட்டுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஒன்றாக வைட்டமின் C அடங்கிய உணவுகள் இருக்கிறது. மேலும் இந்த வைட்டமின் Cயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் இருக்கிறது. அதனால், நம் தினசரி வாழ்க்கையில்...இந்த வைட்டமின் C அடங்கிய உணவுகளை 400 முதல் 2000 மில்லி கிராம் வரை நாம் எடுத்துகொள்ளலாம். ஆம், ஆரஞ்சு, கீரை, பூக்கோசு, பந்து மிளகுத்தூள் என இன்னும் நிறைய பொருட்களில் இந்த வைட்டமின் C இருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்:

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்:

ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள், மீன், மற்றும் கீரையில் இந்த கொழுப்பு அமிலமிருக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருவதோடு, இரத்த தட்டுக்களின் அளவையும் அதிகரிக்க நமக்கு இவை உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலம் அடங்கிய உணவுகளை நாம் அதிகம் எடுத்துகொள்வதால்...இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைபாட்டினை இது போக்க பெரிதும் துணை புரிகிறது.ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்பும் அடங்கிய உணவுகள்:

ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்பும் அடங்கிய உணவுகள்:

நாம் அதிகளவில் காய்கறிகளையும், முழு தானியங்களையும், அர்கானிக் பீன்ஸ் என பலவற்றை நாம் எடுத்துகொள்வது நல்லது.
ஆண்டிஆக்ஸிடண்ட் பண்பு அடங்கிய உணவுகள், தீங்குவிளைவிக்க கூடிய தன்மை கொண்ட பொருட்களை நடுநிலைப்படுத்த, தட்டுக்களின் எண்ணிக்கை குறைபாட்டை தவிர்க்கவும் பெரிதும் இது உதவுகிறது. ஃபோலேட் நிறைந்த உணவுகள்:

ஃபோலேட் நிறைந்த உணவுகள்:

இந்த ஃபோலேட் குறைபாட்டால், இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது குறைகிறது. அதனால், ஃபோலேட் அடங்கிய உணவுகளை நாம் அதிகம் உணவுடன் சேர்த்துகொள்வதன் மூலம், அதில் இருக்கும் அத்தியாவசிய சத்துக்கள், உங்கள் உடலின் ஆரோக்கியமான செல் பிரிவுகளுக்கு வழிவகை செய்கிறது.
இந்த ஃபோலேட் நிறைந்த உணவுகளான... அஸ்பாரகஸ், தானியங்கள், ஆரஞ்சு மற்றும் கீரைகள்., உங்களுடைய இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவி செய்கிறது. வைட்டமின் A அடங்கிய உணவுகள்:

வைட்டமின் A அடங்கிய உணவுகள்:

உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வைட்டமின் A உதவுகிறது. நம் உடம்பில் புரதம் உருவாவதற்கு இந்த வைட்டமின்கள் நமக்கு தேவைப்படுகிறது. ஆரோக்கியமான புரத கட்டுப்பாட்டின் மூலம் செல்கள் பிரிவும், செல்களின் வளர்ச்சியும் இருக்க...பூசணிக்காய், கேரட், இனிப்பு உருளைகிழங்கு என பலவற்றில் இந்த வைட்டமின் A நிறைந்து காணப்படுகிறதுவைட்டமின் B12:

வைட்டமின் B12:

உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது குறைவதற்கு ஓர் காரணமாக வைட்டமின் B12 குறைபாடு இருக்கிறது. அதனால், நம் உணவு முறையில் வைட்டமின் B12ஐ நாம் சேர்த்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதனால், இயற்கையிலே உங்கள் உடலில் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கிறது. சில சிறந்த உணவுகளான சல்மான் மீன்கள், மாட்டிறைச்சி, சிக்கன், சூரை மீன், வான்கோழி என பலவற்றுள் இந்த வைட்டமின் B12 நிறைந்திருக்க, அது உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை பெருக்கவும் பெரும் துணை புரிகிறது.அமினோ அமிலம் நிறைந்த உணவுகள்:

அமினோ அமிலம் நிறைந்த உணவுகள்:

இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும், அமினோ அமிலம் நிறைந்த உணவுகள் இரத்த உற்பத்தி முறைக்கு (haematopoiesis) பெரிதும் உதவுகிறது.
மேலும், இந்த அமிலம் நிறைந்த உணவானது, உடம்பில் புதிய இரத்த செல்களை உருவாக்கவும் வழிவகை செய்கிறது.ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்

இயற்கை காட்டும் வழியில், உடம்பில் இரத்த தட்டுக்களை அதிகரிக்க செய்யும் இந்த ஆரஞ்ச் நிற பழத்தை நாம் உண்பதால்...இதில் அதிகளவில் இருக்கும் இரும்பு சத்து, உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்த வழிவகை செய்ய, ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை நாம் சாப்பிட்டு பயனடையலாம்.
அத்துடன், இந்த பழத்தில் இருக்கும் சத்துக்கள், நம் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்களை வேகமாக அதிகரிக்கவும் உதவி புரிகிறது.பேரிட்சை

பேரிட்சை

இது ஓர் சிறந்த உணவாக, உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் பெரும் பங்கினை வகிக்கிறது. பேரிட்சையில் இருக்கும் இரும்பு சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள், தட்டுக்களின் எண்ணிக்கையை இயற்கையிலே உயர்த்த பெரும் துணையாய் நிற்கிறது.சிப்பிகள் (ஓய்ஸ்டர்ஸ்):

சிப்பிகள் (ஓய்ஸ்டர்ஸ்):

இதில் இருக்கும் துத்தநாகம், உங்கள் உடலில் இருக்கும் இரத்த செல்களையும், இரத்த தட்டுக்களையும் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், எதிர்ப்பு சக்தியை நமக்கு தரும் இந்த துத்தநாகம், உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த செல்லை வலுப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது. அதனால், இயற்கையிலே இரத்த தட்டுக்களை அதிகரிக்க செய்யும் சிறந்த உணவாக, இந்த சிப்பிகள் அடங்கிய உணவுகள் விளங்குகிறது.முழு தானிய உணவுகள்:

முழு தானிய உணவுகள்:

வைட்டமின் மற்றும் கனிம ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த முழு தானிய உணவுகள், இயற்கையிலே நம்முடைய இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்த பெரிதும் உதவ முன்வருகிறது.வைட்டமின் K அடங்கிய உணவுகள்:

வைட்டமின் K அடங்கிய உணவுகள்:

இந்த வைட்டமின் கொண்ட உணவுகளின் மூலம், நம் உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சியானது அதிகரிக்கிறது. இந்த தட்டுக்கள், பத்து நாள்களுக்கு மட்டுமே நம் உடம்பில் நீடிக்க, உடலில் அழியும் தட்டுக்களின் இடத்தை நிரப்ப, ஆரோக்கியமான தட்டுக்கள் நமக்கு தேவைப்படுகிறது.
அதனால், வைட்டமின் K அடங்கிய உணவுகளான கல்லீரல், காலே, முட்டை ஆகியவை நமக்கு இந்த முறையை மேம்படுத்த பெரிதும் துணையாக நிற்கிறது.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...