Saturday 2 September 2017

உடல் எடையை குறைக்க நினைக்கும்போது நாம் செய்யும் தவறுகள்

இப்போதைய இளம் வயதினருக்கு தலையாய பிரச்சனையாக இருப்பது அதிகரித்த உடல் எடையை எப்படி குறைப்பது என்று தான். ஆனால், அதற்கென முறையான முயற்சிகளை எடுக்காமல், உண்ணும் உணவின் அளவை குறைத்துவிட்டு, தினமும் நீண்டநேரம் தூங்கினால் எடையை குறைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அதிகமாக நிலவுகிறது.
 
போதுமானா கலோரிகள் அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் நன்கு தூங்கி எழுந்தால் உடல் எடை குறைத்து விடலாம் என தூக்க மாத்திரை போட்டுக்கொண்டும் தூங்கி எழுந்து மரப்பாச்சி பொம்மை போல திரிகின்றனர். இந்தப்போக்கை நிபுர்ணர்கள் எச்சரித்து கொண்டு தான் இருக்கின்றனர்.Easiest ways to lose your weight
ஒரு உணவின் இடத்தை இன்னொரு உணவுதான் நிரப்ப முடியுமே தவிர தூக்க மாத்திரைகளோ மயக்க மாத்திரைகளோ அல்ல. பெண்கள் உணவுக்கு பதில் பசிக்காமல் இருக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தங்களையே வருத்திக்கொள்கிறார்கள். மேலும் சிலர் உண்ண வேண்டிய கலோரி அளவு உணவை உட்கொள்ளாமல் மிக குறைவாக உண்டு தூக்க மாத்திரைகளின் உதவியால் 20 மணிநேரம் வரை தூங்கி எடை குறைப்புக்கு முயல்கின்றனர். இந்த மோசமான போக்கு நார்கோரெக்ஸ்யா (narcorexia) என்றழைக்கப்படுகிறது.Easiest ways to lose your weight உடல் எடை குறைப்புக்கு டாக்டர்கள் வைக்கும் தீர்வு மிக எளிமையானது. அதாவது நல்ல ஆரோக்கிய உணவு, சிறந்த உடற்பயிற்சி, இரவில் நல்ல தூக்கம். இதுதான் டாக்டர்கள் நம் முன் வைக்கும் எடை குறைப்பு திட்டம். டயட் டாக்டர் மைக்கேல் ப்ரீஸால் "தினமும் நான்குமணிநேர எளிய உடற்பயிற்சி ஏழு மணிநேர தூக்கம் இதுவே நல்ல பலனை தரும்" என்கிறார்.
ஆனாலும் இளையதலைமுறையினர் உணவை தவிர்த்து எடையை குறைக்கவே முயல்கின்றனர். இதுபற்றி சன் ஊட்டச்சத்து நிபுணர் அமண்டா உர்செல் இந்த போக்கு அதிர்ச்சிக்குரியது மற்றும் இதை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாததும் கூட என்றார்.
மேலும் அவர் கூறுகையில் “நீங்கள் உங்கள் மனநிலையை கவனமாக கையாண்டாலே போதுமானது. உணவை ஒதுக்கத் தேவையில்லை. நம் உடலின் சக்தியை தக்கவைத்துக்கொள்ள மூன்றுவேளை உணவு அவசியமாகிறது. ஏதாவது ஒருவேளை உணவை நாம் தவிர்த்தாலும் உடலின் சமநிலை தவறுகிறது. அதனால் மனநிலையும் பாதிப்படைகிறது.Easiest ways to lose your weight இப்போக்கு தொடரும்போது உடல் நிலையும் பாதிப்படைய தொடங்குகிறது, சீரான உணவுப் பழக்கம் இல்லாததால் பலர் குறிப்பாக, பெண்கள் தங்களுக்கு இயற்கையாக கிடைக்கவேண்டிய இரும்பு சத்து,சுண்ணாம்பு சத்து மற்றும் புரத சத்துகளை இழந்து நோயாளியாகின்றனர்”என்றார்
பொதுவாக ஒருநாளைக்கு ஐந்து முறை காய்கறி பழங்களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும், அரிசி, மீன், பருப்பு போன்ற புரதங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும், நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். உணவு உட்கொள்ளாமல் நீண்ட நேரம் உறங்குவதால் எடை குறையும் என்ற பிற்போக்கு தனத்தை கைவிடவேண்டும். இதனால் மனநிலையும் உடல்நிலையும் சீர்குலையும் என்பதை முதலில் உணரவேண்டும்.
இறுதியாக ஒன்றை சொல்லவேண்டுமென்றால் உங்களின் எடை அதிகரிப்புக்கு உணவு பழக்க வழக்கங்கள் மட்டுமே காரணமாக இருக்காது. அது போலவே எடையை குறைப்பதற்கும் உணவு உண்ணாமல் இருந்தாலே போதுமானது என்பதும் தவறான அணுகு முறையாகும்.
எனவே, உடல் எடை அதிகரிப்பதாக கருதினால், அதற்கு தகுந்த டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறுவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதை விடுத்து நீங்களாகவே பட்டினி கிடந்தது உடம்பை குறைக்க நினைப்பது பல்வேறு பக்க விளைவுகளைத்தான் கொண்டுவந்து சேர்க்கும்.
சுருக்கமாக சொல்வதென்றால் ஓணான் சைஸ் பிரச்னையை டயனோசர் சைசுக்கு பெரிதாக்கி விடாதீர்கள். உடல்நலம் சம்பந்தப்பட்ட தீர்வு டாக்டர்களிடம் தான் இருக்கிறது. அவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதுதான் உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...