Saturday, 2 September 2017

எளிதாகவும், வேகமாகவும் உடல் எடை குறைக்க இந்த 7 நாள் டயட் ஃபாலோ பண்ணுங்க!

உடல் எடை குறித்த பயம் வயது வித்யாசமின்றி எல்லாருக்கும் இருக்கிறது. உடல் எடையை குறைக்க ஏகப்பட்ட பிரயத்தனங்கள் பட்டு ஒரு மில்லி கிராம் கூட குறைக்க முடியாமல்தவிக்கும் சூழலில் 7 நாட்களில் 7 கிலோ குறைக்கலாம் என்று புது டயட் ஒன்று வைரலாய் பரவி வருகிறது.

ஜெனரல் மோட்டார் டயட் பற்றி தெரியுமா? :
1985 ஆண்டுகளில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனப் பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஜி.எம் டயட்.அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டயட்டை கடைபிடித்தால் ஒருவாரத்தில் 6.8 கிலோ வரை குறைக்க முடியும் என்கிறார்கள்.GM diet for weight loss seekers
எடையை குறைப்பதோடு மட்டுமின்றி உடலிள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குவது ஜீரண சக்தியை அதிகப்படுத்துவது என சில இலவச இணைப்புகளையும் தருமாம்!முதல் நாள் :

முதல் நாள் :

பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தைத் தவிர மற்ற பழங்களை உட்கொள்ளலாம்.இரண்டாம் நாள் :

இரண்டாம் நாள் :

முழுவதும் காய்கறிகள். இதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம். உருளைக்கிழங்கை காலையில் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.மூன்றாம் நாள் :

மூன்றாம் நாள் :

காய்கள் மற்றும் பழங்களை கலந்து சாப்பிடலாம். ஆனால் வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கை தவிர்த்திட வேண்டும்.நான்காம் நாள்

நான்காம் நாள்

ஆறு முதல் எட்டு வாழைப்பழங்கள், மூன்று கிளாஸ் கொழுப்பு நீக்கப்பட்ட பால் எடுக்க வேண்டும்.ஐந்தாம் நாள் :

ஐந்தாம் நாள் :

250 கிராம் அசைவத்தை எடுத்துக் கொள்ளவேண்டும்.சைவம் உட்கொள்கிறவர்கள் கறிக்கு பதிலாக சீஸ் அல்லது பழுப்பு அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
இவற்றோடு ஆறு தக்காளி பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் கூடுதலாக இரண்டு கிளாஸ் தண்ணீரை அருந்த வேண்டும்.ஆறாம் நாள் :

ஆறாம் நாள் :

250 கிராம் அசைவத்துடன் உருளைக்கிழங்கை தவிர மற்ற காய்களை எடுக்க வேண்டும். சைவம் சாப்பிடுவர்கள் சீஸ் அல்லது பழுப்பு அரிசி சாதம் சாப்பிட வேண்டும். ஆறாம் நாளும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.ஏழாம் நாள் :

ஏழாம் நாள் :

பழுப்பு அரிசி சாதம்,பழம்,பழச்சாறு,காய்கறி என கலந்து சாப்பிடலாம்.
இந்த ஜி.எம் டயட் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் :
1.இனிப்பு சேர்க்காத காபி அல்லது க்ரீன் டீ மட்டுமே குடிக்க வேண்டும்.
2.குளிர்பானம்,சோடா போன்றவற்றை குடிக்ககூடாது.
3.போதை தரும் மது வகைகளையும் குடிக்க கூடாது.
4.ஒவ்வொரு நாளும் 8 -12 கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...