சில பேர் கோபத்தில் யாரையாவது திட்டும்போது, அவன் கிடக்கிறான், சுண்டைக்காய் பயல், என்று திட்டு வாங்குபவர்களை ஏளனப்படுத்தும் வார்த்தை எனக் கருதி கத்துவார்கள். உண்மையில், அவர்கள் அந்த சுண்டைக்காய் பயல்களை கோபத்தில் ஏளனப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்களை மிக மிக உயர்வாக வாழ்த்தி இருக்கிறார்கள், என்பதுதான் உண்மை.
சுண்டைக்காய் தானே வளரும் ஒரு செடியினம், காடுகளிலும் சில வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும், வீடுகளில் நட்டு வைத்தாலும், விரைவில் வளரும் தன்மையுடையது. இவற்றின் மலர்களும் காய்களும் கொத்துக் கொத்தாக வளர்வதைக் காணவே, அற்புதமாக இருக்கும். உண்மையில், அந்த சுண்டைக்காயில் நிறைய நன்மைகள் நிறைவாக இருக்கிறது, ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் வாருங்கள்.
சுண்டைக்காய் தானே வளரும் ஒரு செடியினம், காடுகளிலும் சில வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும், வீடுகளில் நட்டு வைத்தாலும், விரைவில் வளரும் தன்மையுடையது. இவற்றின் மலர்களும் காய்களும் கொத்துக் கொத்தாக வளர்வதைக் காணவே, அற்புதமாக இருக்கும். உண்மையில், அந்த சுண்டைக்காயில் நிறைய நன்மைகள் நிறைவாக இருக்கிறது, ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் வாருங்கள்.
ரத்த சோகை குணப்படுத்தும் :
இயல்பான இரும்புச்சத்து காரணமாக சுண்டைக்காய், உடலின் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச்செய்து, நோய் அதிர்ப்பு சக்தியை உடலில் கூடுதலாக்கி அதோடு இரத்த சோகை நோயையும் போக்கும் ஆற்றல் மிக்கது.
கொழுப்பை கரைக்கும் :
இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புகளைக் கரைத்து, செயற்கை வகை உணவுகளால் உடலில் சேர்ந்த நச்சுக்களை, வெளியேற்றும் தன்மை கொண்டது.
இரத்தத்தை சுத்திகரித்து, உடல் நடுக்கம், மயக்கம் மற்றும் உடற்சோர்வு நீக்கும். மூச்சுக் கோளாறு பிரச்னைகள் உள்ளவர்கள் சாப்பிட்டுவர, வளங்கள் தெரியும்.
இரசாயன வகை உணவுகளால் வயிற்றில் தங்கும் அசுத்தக் கிருமிகளை அழித்து வெளியேற்றும், வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும்.
எலும்பு வளர்ச்சி :
குழந்தைகளின் உடல், எலும்பு வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு முக்கிய காரணியாகும் .உடல் வலி, உடல் சோர்வு, வயிற்றில் பூச்சிகளால் உண்டான வலிகள் மற்றும் மலச்சிக்கல் போக்கும். வயிற்றுப் புண்களை போக்கும். இரத்த சுகர் அளவை கட்டுப்படுத்தி சீராக்கும்.
சுண்டைக் காய் வற்றல்.
கொஞ்சம் பெரிதான சுண்டைக்காய்களை சற்றே கீறி, நன்கு அலசி, அவற்றை சில நாட்கள் மோரில் ஊற வைத்து, பிறகு அந்த காய்களை மோரிலிருந்து எடுத்து, அவற்றை மீண்டும் சில நாட்கள் தினமும் வெயிலில் காய வைத்து வர, சுண்டைக் காய்கள் எல்லாம் சுருங்கிப் போகும்.
நன்றாக சுருங்கியபின், அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு பத்திரப் படுத்தி, தேவைப்படும் சமயத்தில் எடுத்து சுண்டைக்காய் வற்றல் குழம்பாகவோ அல்லது எண்ணையில் வறுத்தோ சாப்பிடலாம்.
சுண்டைக்காய் வற்றல் குழம்பை சாதத்தில் பிசைந்தோ அல்லது சுண்டைக்காய் வற்றலை சாதத்திற்கு தொட்டோ சாப்பிடலாம். இவற்றால், ஆஸ்துமா குணமாகும் மற்றும் வயிற்று அசுத்தங்கள் நீங்கி வயிறு தூய்மையாகும் மற்றும் செரிமான, வாயுக் கோளாறுகளை சரிசெய்யும்.
சுண்டைக்காய் பத்திய சாப்பாடு.
குழந்தை பெற்ற பெண்களுக்கு, முன்பெல்லாம் பத்திய சாப்பாட்டில், சுண்டைக்காயும் சேர்ந்திருக்கும். சுண்டைக்காயின் தாய்ப்பால் சுரக்கவைக்கும் திறன் மற்றும் செரிமானக் கோளாறுகள் நீக்கி, உடல் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றும் தன்மைகளால் தான் முன்னரெல்லாம், குழந்தை பெற்ற பெண்களுக்கு பத்திய சாப்பாட்டில் சுண்டைக்காயை சேர்த்து வந்தனர்.
இப்போது பத்தியமும் இல்லை! சுண்டைக்காயும் இல்லை!
முன்னோர் சொல்லியதெல்லாம், நம் நன்மைக்கே என்றெண்ணி, அதன்படி நடந்து வந்தால், நோய்களின்றி நலமுடன் வாழலாம்.
No comments:
Post a Comment