கொஞ்சம் யோசித்து பாருங்கள் அழகான கடற்கரையில் நேரம் கழித்து விட்டு அப்படியே மெதுவாக எழும் போது உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக தோன்றும் அல்லவா. ஆனால் அதே நேரம் உங்களுக்கு பசி எடுத்தால் என்னவாகும். உங்கள் மனநிலையே மாறிவிடும் அல்லவா.
நீங்கள் பசி எடுத்ததும் கண்மூடித்தனமாக எல்லா உணவுகளையும் சாப்பிடக் கூடாது. இதனால் உங்கள் வயிற்றுப் பகுதியில் தொப்பை ஏற்பட வாய்ப்புள்ளது. சில வகையான உணவுகள் மட்டும் சாப்பிட்டால் அது உங்கள் வயிற்றை எந்த விதத்திலும் பாதிக்காது.
இந்த வகை உணவுகள் நீங்கள் பீச்சில் குளிக்கும் நேரத்தில் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு நிறைய பலனை தருகின்றன. இந்த வகை உணவுகள் உங்கள் வயிறு மந்தமாக இருப்பதை நீக்குதல் மற்றும் , உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. மேலும் நீங்கள் பீச்சில் இருக்கும் நாள் முழுவதும் உங்களை நீர் சத்துடன் வைத்துக் கொள்கிறது.
பீச்சில் இருக்கும் நிறைய கடைகள் ஆரோக்கியமற்ற உணவுகளையே விற்கின்றனர். நிறைய நேரத்தில் அங்கு விற்கப்படும் உணவுகள் உங்கள் வயிறு மற்றும் உடல் நலத்தை பாதிக்கிறது. இந்த வகையான உணவுகள் அதிகமாக செயல்படுத்தப்பட்டு அதிகமான கலோரிகள், அதிகமான கொழுப்பு மற்றும் சர்க்கரை போன்றவைகள் இதில் உள்ளன.
அதோடு இதை கடற்கரைக்கு போகும்போது மட்டுமல்ல தினமும் நீங்கள் பின்பற்றி வந்தால் நல்ல பலன்களை காண்பீர்கள். தொப்பை குறைந்து தட்டையான வயிறு பெறுவது உறுதி
1.வாழைப்பழம்
இதை எளிதாக நாம் பேக் பண்ணி எடுத்துச் செல்ல முடியும். இதில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிறு வீக்கத்தை குறைத்திடும். இது புரோ பயாடிக் ஃபைபர் ஆல் ஆனது. இவை நமது வயிறு வீக்கத்திற்கு காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போரிடுகிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் வாயு மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு எதிராகவும் செயல்படுகிறது.
2.செர்ரீஸ்
செர்ரி பழத்தில் ரெஸ்வெராட்ரால் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உங்கள் கலோரியை சமநிலை செய்கிறது. இதை நீங்கள் பீச்சில் சூரிய ஒளியில் காயும் போது சாப்பிட வேண்டும்.
3.ஹம்மஸ் மற்றும் காய்கறிகள்
ஹம்மஸ் ஒரு நல்ல பீச் ஸ்நாக்ஸ் ஆகும். இதில் அதிகமான புரோட்டீன்ஸ் உள்ளது. இதனுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிட்டால் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன்கள் கிடைக்கும். மேலும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது.
4. கடற்பாசிகள்
இது ஒரு சூப்பர் பீச் ஸ்நாக்ஸ் ஆகும். இதில் உள்ள ஃபூக்கோடான் உங்கள் குடல் எரிச்சலை சரி பண்ணுகிறது.
5 . பச்சை பட்டாணி
ஒரு கப் பச்சை பட்டாணியில் 5 கிராம் அளவிற்கு சீரண சக்தியை மேம்படுத்தும் நார்ச்சத்து உள்ளது. மேலும் இது உங்களை நீர் சத்துடன் இருக்க உதவுகிறது. இது ஒரு ஆரோக்கியமான பீச் ஸ்நாக்ஸ் எனவே இதை கொண்டு சென்று சாப்பிடுவதும் எளிது. இது உங்கள் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றை தரும் என்பது மருத்துவ துறையில் நீருபிக்கப்பட்டுள்ளது.
6.தர்பூசணி
இது உங்களை பீச்சில் நாள் முழுவதும் நீர் சத்துடன் இருக்க உதவுகிறது. இது மிகவும் கலோரி குறைந்த உணவு என்பதால் உங்களுக்கு வயிறு வீக்கத்தை தராது. ஒரு கப் தர்பூசணியில் 90% தண்ணீர் மற்றும் 40 கலோரிகள் இருக்கின்றனர்.
7.அவகேடா
பிசைந்த அவகேடா பழம் உங்கள் உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்தது. இது உங்கள் வயிறு வீக்கம் தடுத்தல் , குறைவான கொல ஸ்ட்ரால் மற்றும் வயிற்று கொழுப்பை கரைக்க றது. உங்கள் உடல் எடையை குறைக்க இது மிகவும் நல்லது.
8.வால்நட்ஸ்
இது உங்கள் தொப்பையை மட்டும் குறைப்பதோடு இதில் உள்ள இரண்டு மடங்கான பாலிஅன்சேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் சரும புற்று நோய் வராமல் தடுக்கிறது.
9 . அன்னாசி பழம்
இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் வயிறு வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள புரோமெலைன் என்ஜைம் புரோட்டீன்களை சீரணிக்க உதவுகிறது. எனவே தான் இது உங்கள் பீச் நேரத்திற்கு சிறந்த உணவு.
10 . பூசணிக்காய் விதைகள்
இது உங்கள் பீச் ஸ்நாக்ஸ் வகையிலேயே முதன்மையானது. இது உங்கள் தொப்பையை எளிதாக குறைத்து விடும். 1 அவுன்ஸ் விதைகளில் 8 கிராம் புரோட்டீன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சத்துக்களான பொட்டாசியம், ஜிங்க், நார்ச்சத்து போன்றவை உள்ளன
11.ஆப்பிள் மற்றும் பீநட் பட்டர்
இது அதிகமான நார்ச்சத்து உள்ள உணவுகள். இதில் உள்ள சோடியம் வயிறு வீக்கத்தை குறைத்திடும். இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு நன்றாக நிறையும்.
No comments:
Post a Comment