Saturday, 2 September 2017

சிறுநீரத் தொற்று பிரச்சனைகளை தீர்க்க உதவும் எளிய இயற்கை வைத்திய முறைகள்...

உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பணியை மேற்கொள்வது சிறுநீரகம். அதுமட்டுமல்லாது உடலின் இன்ன பிற வேலைகளான இரத்தத்தை சுத்திகரிப்பது, உடல் உறுப்புகளை சரிவர இயங்கச்செய்வது, சிறுநீரை சரியாக வெளியேற்றுவது, செரிமானத்தை சரி செய்வதை போன்ற பணிகளையும் மேற்கொள்கிறது.
அப்படிப்பட்ட சிறுநீரகத்தில் தொற்றுகள் ஏற்படும்போது, அதன் பணிகளை சரிவர செய்ய முடியாது. இதனால் பாதிக்கப்படுவது சிறுநீரகம் மட்டுமல்ல அதை சார்ந்து இயங்கும் மற்ற உறுப்புகளும் தான். சிறுநீரக தொற்றினைத் தடுக்க உதவும் இயற்கை மருத்துவம் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.Top 15 Natural Remedies To Prevent Kidney Infection
சிறுநீரக தொற்று என்பது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாயிலிருந்து தொடங்கி சிறுநீரகங்கள் முழுவதும் பரவுகிற ஒரு தொற்று ஆகும்.
இந்த நோயால் ஏற்படும் அறிகுறிகள் என்றால் உடல் சோர்வு, காய்ச்சல், குமட்டல், பசியின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு, சிறுநீருடன் ரத்த வெளியேறுதல், காய்ச்சல், இடுப்பு வலி, வயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் அடங்கும் போன்றவை ஏற்படக்கூடும்.
சிறுநீர் குழாயில் பாக்டீரியா தொற்று ஏற்படும் போது சிறுநீரக தொற்று ஏற்படுகிறது. பாக்டீரியா சிறுநீரகத்தில் அதிகரிக்கும் போது இந்த தொற்றின் விளைவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சிறுநீரகத் தொற்று சிறுநீரகத்தை முற்றிலும் பாதிக்கக்கூடியது. மேலும், நாள்பட்ட சிறுநீரகப் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இந்த கட்டுரையில் சிறுநீரகத் தொற்றில் இருந்து விடுபடுவதற்காக 15 இயற்கை மருத்துவ முறை கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்...பார்சிலி ஜூஸ்

பார்சிலி ஜூஸ்

இது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் தடுத்துவிடும். சிறுநீரகத் தொற்று பிரச்சனைகளுக்கு உதவக் கூடிய சிறந்த மருந்து என்றால் அது பார்சிலி ஜூஸ் தான். பார்சிலியில் அதிகப்படியான வைட்டமின் ஏ, பி, சி, சோடியம், பொட்டாசியம், தயாமின் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை சிறுநீரகத்தை பாதுகாக்க நன்கு உதவக்கூடியதுஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

சிறுநீரக தொற்று பிரச்சனைக்கு சிறந்த வீட்டு வைத்திய முறையில் ஒன்று ஆப்பிள் சிடர் வினிகர். தேனுடன் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து உபயோகிக்கும் போது அதன் பலன் இரட்டிப்பாகும். சிறுநீரகப் பிரச்சனைகளை போக்குவதற்கு இதனை தொடர்ந்து முறையாக உட்கொள்ளவேண்டும்.பழச்சாறு

பழச்சாறு

பழச்சாறு சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறந்து உதவக்கூடியது. பழச்சாறை தினமும் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள், அழுக்குகள், தொற்று கிருமிகள் அகற்றி, சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் தடுத்துவிடும்.மூலிகை டீ

மூலிகை டீ

கெமோமில் டீ, செம்பருத்தி டீ போன்றவை மூலிகை டீக்கள் அனைத்து சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய்களையும் சரி செய்யும் தன்மை கொண்டது. இந்த டீயை தினமும் இரண்டு வேளை குடித்தால் சிறந்த தீர்வுகளை நிச்சயம் தரும். சிறுநீரத் தொற்றுகளை தடுக்கக் கூடிய இயற்கை மருந்துகளில் சிறந்த ஒன்று.கற்றாழை

கற்றாழை

சிறுநீரக நோய்களை போக்குவதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், கற்றாழை உடலில் உள்ள நச்சுக்களையும்,அழுக்குகளையும், தோற்று கிருமிகளையும் வெளியேற்றி விடுகிறது. எனவே, கற்றாழையை தினமும் 2 முறை சாப்பிடுவது பரிந்துரைக்கப்பட்டது.கிரான்பெர்ரீ ஜூஸ்

கிரான்பெர்ரீ ஜூஸ்

அனைத்து வகையான சிறுநீரக நோய்களையும், தொற்றுகளையும் போக்கக்கூடியது. கிரான்பெர்ரீ ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதால் சிறுநீரகம் மற்றும் உடலுக்கு சிறந்தது. எனவே, சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை நீக்கக்கூடியது. வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி அதிகமாக சேர்க்கும் போது உடலில் அமிலத்தன்மை சீராகும். இது சிறுநீரகத் தொற்றுப் பிரச்சனைக்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாக இது திகழ்கிறது. அதுமட்டுமல்லாது வைட்டமின் சி பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் தடுத்துவிடும். எனவே,ஆரஞ்சு மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.தண்ணீர்

தண்ணீர்

சிறுநீரகப் பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறுர்களா? அப்படியெனில் நிச்சயம் உடலில் ஈரத்தன்மையை தக்கவைத்துக் கொள்வது மிக அவசியம். தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களையும், அழுக்குகளையும், தொற்றுக் கிருமிகளையும் சிறுநீரகத்தில் இருந்து வெளியேற்றிவிடும். தண்ணீர் சிறுநீர் வழியாக அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றிவிடுகிறது.பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

இது சிறுநீரகத்தில் உள்ள பைகார்பனேட் அளவை அதிகரிக்கிறது. 8 அவுன்ஸ் நீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து குடிக்கலாம். நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் காலங்களில் இதனை நாள் ஒன்றுக்கு ஒரு முறை குடித்தால் நோய் தொற்றுகளை வெளியேற்றிவிடும். மேலும், இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள டையூரிடிக் சிறுநீரக நோய்களை தடுத்துவிடும். இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீர தொற்று அறிகுறிகளை ஒழித்துவிடும். பூண்டில் உள்ள அலிசின் நோய் எதிர்ப்பு தன்மைகளையும், ஆன்டி-பாக்டீரியர்களையும் அதிகமாகக் கொண்டுள்ளது. எனவே, இது சிறந்த நோய் தொற்று நீக்கியாக செயல்படுகிறது.
மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் உடலில் மருத்துவ தன்மையை துரிதப்படுத்துகிறது. ஏனென்றால், மஞ்சளில் உள்ள குர்குமின் ஆன்டி பாக்டீரியலாக சிறந்து செயல்படுகிறது. அதுமட்டுமல்லாது, மஞ்சள் தூள் பாக்டீரியாக்களை தொடர்ந்து வளராமல் தடுத்துவிடும்.இஞ்சி

இஞ்சி

இஞ்சி சிறுநீரக தொற்றுக்களை சரிசெய்யக் கூடிய சிறந்த இயற்கை மருத்தாக திகழ்கிறது. பாக்டீரியாக்கள் மேற்கொண்டு பரவாமல் தடுத்துவிடுகிறது. சிறுநீரக தொற்றுகளை சரிசெய்ய தினமும் இஞ்சி டீ போட்டு குடிக்கலாம்.உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

சிறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பவர்கள், சிறந்த கட்டுப்பாடான உணவு பழக்கத்தை முறையாக கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். குறிப்பாக குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்காமல் இருப்பது மிக முக்கியம். ஏனென்றால், சர்க்கரை பாக்டீரியாக்கள் அதிகரிக்க செய்துவிடும். எனவே, பிஸ்கட், கேக், சாக்லெட், ஆல்கஹால் மற்றும் குளிரூட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றை தவிர்ப்பதே சிறந்தது.அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்கள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் வெளியேற்றப்படும். அதனால் சிறுநீரக கற்கள் மற்றும் அனைத்து சிறுநீரக நோய்களையும் போக்கிவிடும். எனவே, அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.சுகாதாரம்

சுகாதாரம்

சிறுநீரகத் தொற்றில் இருந்து தப்பிக்க சுகாதாரம் மிக அவசியம். சுகாதாரமாக இருந்தால் நிச்சயம் அனைத்து வகை சிறுநீரக நோய்களும் ஏற்படாமல் தடுக்கலாம். எனவே, பாக்டீரியாக்கள் மேற்கொண்டு பரவாமல் இருக்க சுகாதாரமான முறையில் உடலின் பகுதிகளை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...