Saturday, 2 September 2017

இந்த 8 நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ பின்பற்றும் பழக்கம் என்ன தெரியுமா?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியின் படி நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்த செல்வமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக வாழ அவர்களது வாழ்க்கை முறை மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களது ஆரோக்கியமான வாழ்விற்கு எந்தெந்த பழக்கங்களை கடைபிடிக்கின்றனர் என்பது பற்றி காணலாம்.ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மக்கள் தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வலி இல்லாமல் உடலை திடமாக வைத்துக்கொள்ள முடியாது என்பதை அவர்கள் நம்புகின்றனர். மேலும் அவர்கள் ஜிம் உடற்பயிற்சிகளை கண்டு பயந்து ஓடுவது கிடையாது.பிரான்ஸ்

பிரான்ஸ்

பொதுவாக நாம் வேலைக்கு கிளம்பி கொண்டே சாப்பிடுவது, சாப்பிடும் போது அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவதுண்டு. இது முற்றிலும் தவறானது. பிரான்ஸ் நாட்டுக்காரர்கள் தங்களது ஒவ்வொரு கைப்பிடி உணவையும் இரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர். இதுவே அவர்களது ஆரோக்கியமான வாழ்க்கையின் இரகசியமாகும்.ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தில் நீச்சல் குளங்கள் மிகவும் பிரபலமானவை. நிச்சல் அடிப்பதால் முழு உடலுக்கும் பயிற்சி கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. எனவே நிச்சல் குளங்கள் ஐஸ்லாந்து மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக உள்ளது.இந்தியா

இந்தியா

நாம் நமது நாட்டில் யாராவது வீடுகளுக்கு சென்றால் நமது காலணியை வெளியே விட்டுவிட்டு செல்கிறோம். ஆனால் மற்ற நாடுகளில் அவ்வாறு இல்லை. மேலும் நாம் வித்தியாசமான தரைகளில் வெறும் கால்களில் நடப்பதால் நமது நரம்புகளுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது நமது ஆரோக்கியத்திற்கு காரணமாகும்.ஜப்பான்

ஜப்பான்

நாம் சிறப்பான குளியலுக்காக ஸ்பாவிற்கு செல்ல வேண்டும். அந்த நாளுக்காக வெகு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் ஜப்பானில் இது நாம் தினமும் பல்துலக்குவது போன்ற காரியமாகும். அவர்கள் தங்களது வீட்டிலேயே தினமும் ஸ்பா போன்ற குளியலை எடுத்துக்கொள்கின்றனர்.பாகிஸ்தான்

பாகிஸ்தான்

தினமும் இறைவனை பிராத்திப்பது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மன அமைதி கிடைத்துவிட்டாலே போதும் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும். இறைவனை பிராத்திப்பதே பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாகும்.சுவீடன்

சுவீடன்

சுவீடன் நாட்டில் மாறிவரும் காலநிலைகளுக்கு ஏற்ப உணவை உட்க்கொள்கிறார்கள். இது தான் அந்த நாட்டினரின் உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாம்.இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்தில் வீட்டில் சமைத்த உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். இதனால் போதுமான உணவை மன மகிழ்ச்சியுடன் அவர்களால் சாப்பிட முடிகிறது இது தான் அவர்களது மன மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...