விபத்து ஏற்படும் நேரங்களில் அனைவருக்கும் முதலில் செய்யப்படுவது முதலுதவி. இந்த முதலுதவி பலரது உயிர்களை காப்பாற்றி உள்ளது. விபத்து ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் முதலுதவு செய்வதால் சிறிது நேரத்திற்கு பிரச்சனை தீவிரமடைவதை தடுக்க முடியும்.
இதற்காவே அனைத்து பொது இடங்களிலும் முதலுதவிக்கென்று பெட்டிகள் இருந்தாலும் நமது வீட்டில் உள்ள சமையல் அறைகளில் உள்ள பொருட்களை வைத்து முதலுதவி செய்ய முடியும்.
முதலுதவி பெட்டிகளில் உள்ள பேன்டேஜ் மற்றும் இதர பொருட்கள் இருக்கும் ஆனால் அவை அனைத்து வகைகளிலும் உதவினாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை உபயோகித்தால் எந்த வித பக்கவிளைவுகளும் இருக்காது. மிகவும் எளியது மற்றும் பாதுகாப்பானதும் கூட. வாருங்கள் இப்போது நாம் வீட்டில் உள்ள சில சமையல் அறைப் பொருட்கள் எப்படியெல்லாம் முதலுதவி செய்வதற்கு உபயோகிக்கலாம் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்...
பூண்டு
பூண்டு ஒரு சிறந்த ஆன்டிபயாடிக். இதனை பூச்சிக் கடி போன்ற பிரச்சனைகளுக்கான முதலுதலிக்கு உபயோகிக்கலாம்.
சில கிராமப்புற பகுதிகளில், பூண்டு சாறு மற்றும் உப்பு கலவையை சுளுக்குகள், சிறு காயங்கள் மற்றும் மணிக்கட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில், நீங்கள் காது தொற்றுநோயை அகற்ற காதுகளில் ஒரு சிறிய துண்டு பூண்டு வைக்கலாம். நிச்சயமாக இது பாதுகாப்பான முறை என்று சொல்ல முடியாது, ஏனெனில் பூண்டு துண்டு காதுகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.
பேக்கிங் சோடா
தேனீக்கள் கொட்டினால் அதற்கு கண்டிப்பாக உதவக்கூடிய வைத்தியம் என்றால் அது பேக்கிங் சோடா. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து, தேனீக்கள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும்.
இது வீக்கம் ஏற்படாமல் தடுக்கும். ஆனால், இது நிரந்தர முடிவல்ல தற்காலிக மருத்துவம் தான். நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.
கற்றாழை
வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் போன்றவற்றிற்கு கற்றாழை ஜெல் சிறந்த முதலுதவியாக உதவக்கூடியது. இதனை அடிப்பட்ட இடங்களில் தேய்க்கும் போது எரிச்சல் குறைந்து, குளிர்ச்சியைத் தரக்கூடியது.
தேன்
தேனில் அற்புத குணங்கள் கீழே விழுந்து ஏற்பட்ட காயங்களுக்கும், வெட்டு காயங்களுக்கும் சிறந்து உதவக்கூடியது. தேனில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டி- பாக்டீரியல் குணங்களும் சிறந்த முதலுதவி பொருளாக செயல்படுகிறது.
மஞ்சள் தூள்
முதலுதவி என்றாலே முதலில் அனைவரின் நினைவிற்கும் வருவது மஞ்சள் தூள். ஒரு சிறந்த கிருமி நானிசியாக இது செய்லபடக்கூடியது. அடிபட்ட இடங்களில், வெட்டுகாயங்களில் மஞ்சள் தூளை தேய்ப்பது சிறந்த முதலுதவி. நோய் தொற்றுக்களை போக்குவதற்கு மஞ்சள் தூளில் உள்ள அழற்ஜி நீக்கும தன்மை உதவுகிறது.
ஆப்பிள் சிடர் வினிகர்
முதலுதவி பொருட்களில் ஆப்பிள் விடர் வினிகரும் அடம் பிடித்தள்ளது. தேனீ கொட்டுயது அல்லது சில வகை அரிப்பு பிரச்சனைக்கு ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது.
துளசி
துளசி கோயில்களில் சாமிக்கு அர்ச்சனை செய்வதற்கும் மட்டும் பயன்படுவதல்ல. கொசுக்கடி மற்றும் சரும அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு முதலுதவி செய்வதிலும் துளசி மிகவும் உதவக்கூடியது.
No comments:
Post a Comment