நம் உடலில் ஏற்படும் சுவாசம் என்பது நமது முயற்சி இல்லாமல் உடலே அதை மேற்கொள்கிறது. எப்பவாவது நாம் உட்கார்ந்து ஆழமான சுவாச மேற்கொண்டு இருக்கிறோமா? அப்படி நீங்கள் செய்தால் போதும் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எண்ணிலடங்காதது.
மேலோட்டமாக நாம் சுவாசித்தால் நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். ஆனால் நீங்கள் ஆழமான சுவாசம் மேற்கொண்டால் அதிகமான ஆக்ஸிஜன் உங்கள் உடலுக்கு கிடைக்கிறது. மேலும் இது உங்கள் உடல் நிலையை உற்சாகப்படுத்துகிறது. நீண்ட ஆயுள் காலத்தை தரும்.
இங்கே ஆழமான சுவாசத்தை பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் இப்பொழுது நாம் பார்க்கலாம்.
பயன் #1
நமது உடலில் உள்ள நச்சுக்கள் வெவ்வேறு செயல்பாடுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றனர். சிறுநீர் கழித்தல், மலம் கழிப்பது மற்றும் வியர்த்தல் ஆகும்.
உங்களுக்கு தெரியுமா நமது உடலில் உள்ள நச்சுக்கள் நாம் வெளி விடும் சுவாசம் வழியாகவும் வெளியேறுகின்றனர். நாம் ஒவ்வொரு தடவையும் மூச்சை உள் இழுக்கும் போது ஆக்ஸிஜன் செல்கிறது. மூச்சை வெளியே விடும் போது கார்பன்-டை-ஆக்ஸைடு மூலம் நச்சுக்கள் வெளியேறுகின்றனர்.
பயன் #2
ஆழமான சுவாசம் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்க வல்லது. ஆக்ஸிஜன் உங்கள் மனதை அமைதியாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவுகிறது. மன அழுத்தம் இருக்கும் போது நீங்கள் மேலோட்டமான சுவாசம் மேற்கொண்டால் உங்கள் தசைகள் சுருங்கும். இதுவே நீங்கள் ஆழமான சுவாசம் மேற்கொண்டால் உங்கள் தசைகள் விரிவடையும் மனமும் ரிலாக்ஸ் ஆகும்.
பயன்#3
உடலுறவின் போது நீங்கள் ஆழமான சுவாசம் மேற்கொண்டால் உங்களுக்கு உச்சத்தையும் திருப்தியையும் அடையச் செய்யும்.
பயன் #4
ஆழமான சுவாசம் அதிக அளவு ஆக்ஸிஜன் எடுப்பதால் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. நீங்கள் வேகமாக ஓடும் பொழுதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ அதிகமான காற்றை இழுப்பதால் உங்கள் நுரையீரல் மூச்சு வாங்க திணறும்.
எனவே நீங்கள் ஆழமான சுவாச பயிற்சியை நுரையீரலுக்கு பழக்கி விட்டால் மூச்சுத் திணறல் இருக்காது.
பயன் #5
நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட நினைத்தால் 6 மாத காலம் இந்த ஆழமான சுவாசம் மேற்கொண்டால் போதும். அந்த பழக்கம் நின்று விடும் என்று யோகா பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
பயன் #6
ஆழமான சுவாசத்தை நீங்கள் பழக்கப் படுத்திக் கொண்டால் நுரையீரலில் ஏற்படும் சளி, சைனஸ் மற்றும் மார்பு நெரிசல் போன்றவை வாராது.
பயன் #7
ஆழமான சுவாசம் உங்கள் இரத்தத்தை தூய்மைபடுத்துகிறது. இரத்த அணுக்கள் அதிகமான ஆக்சிஜனை எடுத்துச் செல்வதால் தூய்மையடைகிறது.
எனவே நீங்களும் ஆழமான சுவாசம் மேற்கொண்டு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment