Thursday, 31 August 2017

மஞ்சள் காமாலையில் இருந்து தப்பிக்க 7 பாட்டி வைத்தியங்கள்!

மஞ்சள் காமாலை அல்லது ஹெபடைடிஸ் பி ஆகியவை கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளாகும். இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கண்களில் இருக்கும் வெள்ளை நிறம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. சிறுநீரும் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
அலோபதி மருத்துவத்தினால் மஞ்சள் காமாலையை சரி செய்ய முடிவதில்லை. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிறைய ஓய்வு எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.Seven Home Remedies to Over Come the Symptoms of Jaundice or Hepatitisஎண்ணெய் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டியது கட்டாயம். தகுந்த மருத்துகளையும், இந்த பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் சில இயற்கை மருத்துவ முறைகளையும் கடைபிடியுங்கள்.வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இது வைரஸை எதிர்த்து போராடும் தன்மை கொண்டுள்ளது. மேலும் வேப்பிலை கல்லீரலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

வேப்பிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி, மிக்ஸியில் போட்டு 30மிலி ஜூஸாக செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பாதியளவு தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் அடங்கியுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகளவில் உள்ளது. இது கல்லீரல் சேதமடைவதை தடுக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகுவதால் மஞ்சள் காமாலையில் இருந்து தப்பிக்கலாம்.எலுமிச்சை

எலுமிச்சை

உங்களுக்கு நெல்லிக்காய் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் எலுமிச்சையை பயன்படுத்தலாம். இதிலும் விட்டமின் சி அதிகளவில் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி கல்லீரலை பாதுகாப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் எலுமிச்சை ஜூஸையும் பருகலாம்.அர்ஜுனா மரம்

அர்ஜுனா மரம்

அர்ஜுனா மரம் (Arjuna tree) இதயம் மற்றும் சிறுநீர் பிரச்சனையை போக்குவதில் சிறந்தது. இது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை போக்க உதவுகிறது. மஞ்சள் காமாலையை போக்க இது ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

அரை டீஸ்பூன் அளவு அர்ஜுனா பவுடரை சிறிதளவு நெய்யுடன் கலந்து பேஸ்டாக செய்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வர வேண்டும். இந்த அர்ஜுனா பவுடர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.மஞ்சள்

மஞ்சள்

சில பகுதி மக்கள், மஞ்சள் அதிகம் சேர்த்துக் கொள்வதால்தான் மஞ்சள் காமாலைக்கு காரணமாகிறது என நினைக்கின்றார்கள். இது மிகவும் தவறு. ஆனால் மஞ்சள், மஞ்சள் காமாலைக்கு மருந்தாக இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், ஆன்டி - மைக்ரோபையல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளது.பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

முக்கால் தேக்கரண்டி மஞ்சளை எடுத்து, ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள தண்ணீரில் கலந்து தினமும் மூன்று முறை குடித்து வர சிறந்த பலன் கிடைக்கும்.தக்காளி

தக்காளி

தக்காளி கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. புதிய தக்காளி ஜூஸை காலையில் ஒரு டம்ளர் அளவு வெறும் வயிற்றில் குடிப்பது மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கி கல்லீரலில் ஏற்படும் சேதம் மற்றும் அடைப்புகளை நீக்க உதவுகிறது. முள்ளங்கியின் மேல் இருக்கும் இலைகளை சுத்தமாக கழுவி, அதனை ஜூஸ் செய்து தினமும் ஒருமுறை குடித்தால் பத்து நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.

உடல் எடையை 6 கிலோ வரை குறைக்க இந்த அருமையான ஜூஸை குடிச்சுப் பாருங்க!!

நீங்கள் சரியான உடல் எடையை தொடர்ந்து வந்தால் உங்களுக்கு எந்த வித தீர்வும் தேவைப்படாது. அதுவே உடல் எடை அதிகமானால் நீங்கள் ஒவ்வொரு முறை டயட் மேற்கொள்ளும் போதும் எடையை குறைக்க படாதபாடு பட வேண்டியிருக்கும்.
எடையை குறைக்கணும் என்று நினைத்து நிறைய பேர் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே அடைகின்றனர். எடையை குறைப்பது என்பது ஒரு எளிதான விஷயம் அல்ல. ஏன் நீங்கள் செலிபிரிட்டியாக இருந்தாலும் இதற்காக அதிகமான வொர்க் அவுட் பண்ண வேண்டியிருக்கிறது.
தினமும் இதற்கான ஒரு திட்டத்தை வரையறுத்து கொண்டு அதன் படி செயல்பட வேண்டும்.நமது உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க அதிக எடை போடுவதை முதலில் தடுக்க வேண்டும்.Amazing Natural Juice That Aids In Quick Weight Lossபல நேரங்களில் வெவ்வேறு விதமான டயட் செய்தும் நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். எனவே தான் உங்கள் எடையை சரியான அளவில் பாதுகாக்கவும் கச்சிதமான உடலை பெறவும் ஒரு இயற்கை முறை தேவைப்படுகிறது. இது உங்கள் உடல் எடையை விரைவில் குறைத்து விடும்.
அதிகப்படியான உடல் எடையால் உங்கள் தன்னம்பிக்கை இழந்து மற்றவர்கள் முன்னிலையில் கேளி கிண்டலுக்கு ஆளாக நேரிடும். இது மட்டுமா உடல் பருமனாதல், கோரோனரி டிஸ்ஆர்டர், மூட்டு வலி, கொலஸ்ட்ரால் போன்றவையும் தொற்றிக் கொள்ளகின்றன.Amazing Natural Juice That Aids In Quick Weight Lossநீங்கள் உடல் எடையை குறைக்க வெவ்வேறு முறைகளை பயன்படுத்தியும் பலன் இல்லையா. உங்களுக்காக ஒரு எளிய முறை இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது உங்களுக்கு நல்ல பலனை தரும்.
இந்த எளிய முறை ஒரே மாதத்தில் 6 கிலோ வரை எடையை குறைக்க பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
காரட் ஜூஸ் - 1/2 டம்ளர்
ஆப்பிள் கூழ் - 1/2 டம்ளர்
இஞ்சி ஜூஸ் - 1 டீ ஸ்பூன்Amazing Natural Juice That Aids In Quick Weight Lossசெய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் மிக்சி சாரில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு முன் ஒரு மாதம் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
இந்த முறையை தினமும் பயன்படுத்தினால் கண்டிப்பாக வீட்டிலேயே உங்கள் உடல் எடையை குறைத்து விடலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை, உடற்பயிற்சி, எண்ணெய் உணவுகளை தவிர்த்தல் போன்றவற்றை மேற்கொண்டால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.Amazing Natural Juice That Aids In Quick Weight Lossஇதனுடன் உங்கள் மருத்துவரின் எடை குறைப்பது பற்றிய கருத்துகளையும் கேட்டுக் கொண்டால் மிகவும் நல்லது.
காரட், ஆப்பிள் மற்றும் இஞ்சி இந்த மூன்று பொருட்களும் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை வேகமாக கரைக்கின்றன.
இதி்ல் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து எடையை விரைவாக குறைக்க பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.

அலுவலகத்தில் எதையும் மறக்காமல் கவனமாக வேலை செய்ய இத சாப்பிடுங்க!

அதிகமான வேலைப்பளு காரணமாக சிலர் சாப்பிடுவதை கூட தவிர்த்துவிடுகிறார்கள். அப்படியே சாப்பிட்டாலும் சத்தான உணவுகளை சாப்பிடுவதில்லை. நீங்கள் வேலையின் காரணமாக சத்தான உணவுகளை சாப்பிடவில்லை என்றால், எப்படி வேலையில் கவனம் செலுத்த முடியும்?
பசி உணர்வில் யாராலும் சிறப்பாக பணியாற்ற முடியாது. எதையும் சரியாக யோசிக்கவும் முடியாது. கோபம் கோபமாக தான் வரும். அதுமட்டுமின்றி காலை உணவை சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு குறையும்.foods can help you stay focused at workஎனவே மூளை சுறுசுறுப்பாக இயங்க நீங்கள் சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் இந்த பகுதியில் வேலையில் கவனமாக செயல்பட சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.1. ஆப்பிள்

1. ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது என்று கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை தான். ஆப்பிள் உங்களுக்கு மறந்த போன விஷயங்களை நினைவுப்படுத்த உதவுகிறது. புதிதாக சிந்திக்கும் திறனை வழங்குகிறது.
2. அவோகேடோ

2. அவோகேடோ

அவோகேடோ உடலுக்கும் மூளைக்கும் தேவைப்படுகின்ற ஒரு மிகச்சிறந்த உணவு. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் உடல் மற்றும் மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதை சாப்பிடுவதால் மூளை களைப்படையாமல் வேலை செய்யும்.3. தேங்காய் எண்ணெய்

3. தேங்காய் எண்ணெய்

கேரளா போன்ற இடங்களில் சமையலுக்கு தேங்காய் எண்ணெயைதான் அதிகமாக பயன்படுத்துவார்கள். நமது பகுதிகளில் அவ்வாறு கிடையாது. ஆனால் உண்மையில் தேங்காய் எண்ணெய், மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. நீங்கள் பாப்கார்னை தேங்காய் எண்ணெய்யில் பொரித்து அதில், சிறிதளவு நட்ஸ்களை சேர்த்து சாப்பிடுவது மூளைக்கு நீங்கள் தரும் சிறந்த உணவாகும்.
4. பச்சை காய்கறிகள்

4. பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளான முள்ளங்கியில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அடங்கியுள்ளன. இது உங்களது மூளையை வேகமாக இயங்க வைத்து நீங்கள் சரளமாக பேசவும், நியாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.5. சால்மன்

5. சால்மன்

சால்மன் மீனில் நல்ல கொழுப்பு, ஒமேகா 3 ஆகியவை அதிகளவில் அடங்கியுள்ளன. இவை மூளையில் உள்ள தகவல்களை சீக்கிரமாக வெளிக்கொண்டு வர உதவுகிறது. மீட்டிங் போன்றவற்றில் நீங்கள் சீக்கிரமாக பாய்ண்ட் பாய்ண்டாக பேச இது உதவும். மூளையில் உள்ள தகவல்களை எளிதாக நீங்கள் பேச்சின் மூலமாக கொண்டு வர இது உதவுகிறது.6. சூரியகாந்தி விதைகள்

6. சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளை சாலட்டுகளில் தூவி சாப்பிடலாம். இது மூளைக்கு மிகவும் சிறந்தது. ஒரு கைப்பிடி சூரியகாந்தி விதைகளில் 15 மில்லி கிராம் அளவுக்கு விட்டமின் ஈ உள்ளது. விட்டமின் ஈ உங்களது மூளையில் உள்ள விஷயங்களை சீக்கிரமாக நினைவுகூர்வதற்கு உதவுகிறது.

தோப்புக்கரணம் தினமும் 10 நிமிடம் போட்டால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

கோவிலுக்குப்போகும் பக்தர்கள் எல்லாம் திருக்கோவிலில், முதலில் உள்ள விநாயகர் சன்னதிமுன் தோப்புக்கரணம் போட்டுத்தலையில் குட்டிக்கொள்வர், அதன்பின்னே, மற்ற தெய்வச்சந்நதிகளுக்குச் செல்வர், பள்ளிகளில், வீட்டுப்பாடம் எழுதிவராத மாணவர்களை, ஆசிரியர்கள், தோப்புக்கரணம் செய்யச்சொல்வர்.
எதற்காக தோப்புக்கரணம்?
பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் சிலரும், கோவிலில் இறைவன் முன் செய்கின்றனர், அவர்களின் பிள்ளைகளும் பள்ளியில் செய்கின்றனர், ஏன்? பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக்கரணம் போடச்சொல்கிறார்.
பெற்றோர் ஏன் கோவிலில் தோப்புக்கரணம் போடுகின்றனர்?, ஒருவேளை, அவர்கள் எல்லாம் வாழ்க்கைப்பாடத்தை ஒழுங்காகச் செய்யாததனால், கோவிலில் தோப்புக்கரணம் போட, சாமி சொல்லியிருப்பாரோ!?
அப்படியில்லையாம், கோவில்களில் தோப்புக்கரணம் போடச்சொன்னது, நம் முன்னோர்களாம்!.
ஆம்! அவர்கள் வழிவழியாக, இதுபோன்ற நிறைய விசயங்களை, நமக்கு வாழ்க்கை நியதிகளாக வகுத்துச்சென்றிருக்கின்றனர்.What is Super brain yoga? கோவில்களில் போடப்படும் தோப்புக்கரணம் என்பது நம் முன்னோரின் உடல் அறிவியல். ஆமாம், இன்னும் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டாத எத்தனையோ விசயங்களை, கோவில்களில் நாம் செய்யும் நடைமுறைகளாக மாற்றி வைத்திருக்கின்றனர், நம் மூதாதையர்.
தோப்புக்கரணம், என்ற ஒற்றைப்பயிற்சியே, அனைத்துவகை உடற்பயிற்சிகளுக்கும், முன்னோடியாக விளங்குகிறது.மேலும், உடற்பயிற்சி செய்யாவிடினும், அல்லது தெரியாவிட்டாலும், நீங்கள் தினமும், தோப்புக்கரணம் போட்டுவந்தால் போதும்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடங்கள் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாத மாணவர்களை எப்படி தோப்புக்கரணம் போடச்சொல்கிறார்கள் என்று தெரியுமா?
இடது கையை மடக்கி, இடது கை பெருவிரலால் வலது காது மடலின் நுனியைப் பிடித்துகொண்டு, வலது கையை மடக்கி, வலது கை பெருவிரலால், இடது காது மடலின் நுனியைப் பிடித்துக்கொண்டு, இரு கால்களையும் மடக்கி, முதுகை வளைக்காமல் நேராக, உட்காரும் நிலையில், இந்த தோப்புக்கரணம் போட வேண்டும், எத்தனை முறை?
அது ஆசிரியரின் விருப்பத்தைப் பொறுத்தது, ஆனாலும், அவர் சொல்லும்வரை நிறுத்தக்கூடாது. பொதுவாக எல்லோரும், படிக்காத மாணவர்களுக்கு இது ஒரு தண்டனையே, என நினைப்பார்கள், அது தவறு, மாறாக, அந்த மாணவர்களே, பின்னர் வகுப்பில் முதல் மாணவர்களாக வரவேண்டும், அதற்காகவே, ஆசிரியர்கள் நல்ல எண்ணத்தில், அதை செய்யச்சொன்னார்கள்.
நன்மைகள் :
இந்தச் செய்முறைகளால், மாணவர்கள் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்னத் தெரியுமா? மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.What is Super brain yoga? நினைவு அதிகரிக்கும் :
தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது, விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கி, அவர்கள் பாடங்களில் சிறப்பான விகிதத்தில் தேர்ச்சி ஆகின்றனர்.
மேலும், செயல்திறன் மிக்க மூளையின் ஆற்றல் மூலம், மாணவர்களின் தேவையற்ற எண்ணங்கள் நீங்கி, அவர்களின் இலட்சியக்குறிக்கோளில் இலக்கை அடைய, தினசரி அவர்கள் செய்யும் தோப்புக்கரணம் உதவிசெய்கிறது. இதற்காகத்தான் ஆசிரியர்கள், மந்தமான மாணவர்களை, அறிவாற்றல்மிக்க மாணவர்களாக ஆக்கவே, தோப்புக்கரணம் செய்யச் சொன்னார்கள் என்று அறிய முடிகிறதல்லவா?
மேலும், ஆசிரியர்கள், ஆர்வமில்லாத மாணவர்களை, சமயத்தில் காதுகளைப் பிடித்துத் திருகுவார்கள். அதுவும், இதே பலன்களுக்காகத்தான் செய்தார்கள். இப்போது சொல்லுங்கள், தோப்புக்கரணம் ஒரு திறவுகோல்தானே, மனிதனின் மந்தநிலையை நீக்கி, அவனுக்கு ஊக்கமும் உற்சாகமும் தர, முன்னோர் விட்டுச்சென்ற வரம்.
புதிய ஆற்றல் :
தோப்புக்கரணம் பெரியவர்களுக்கு என்ன நன்மைகள் செய்யும் என்றால், தினமும் அதிகபட்சம் ஐந்து நிமிட நேரம் தோப்புக்கரணம் செய்துவந்தால், மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகச் சென்று, உடலின் ஆற்றல்நிலை தூண்டப்பட்டு, ஞாபகசக்தி அதிகரிக்கும், உடலில் புத்துணர்ச்சியும், செயல்களில் ஊக்கமும் உண்டாகும். மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு விலகும், மேலும், உடல் கை கால் தசைகள் எல்லாம் இறுகி, உடல் வலுவாக விளங்கி, ஆரோக்யமாக வாழலாம்.What is Super brain yoga? நினைவாற்றல் சக்தி எல்லோருக்கும் அவசியம், நினைவாற்றல் குறைந்த மாணவர்கள் படிப்பில் கோட்டை விடுகின்றனர், நடுத்தர வயதினரும், நினைவாற்றல் குறைபாடு காரணமாகவே, தினசரி வாழ்வில் பல இன்னல்களை, சந்திக்க நேரிடுகிறது. இதைப்போக்க என்ன செய்யவேண்டும்?
ஒன்றும் செய்ய வேண்டாம், இனி மறக்க மாட்டேன் பிள்ளையாரப்பா, என்று தினமும் தோப்புக்கரணம் போட்டுவர, சீக்கிரம் பிரச்னை தீரும், இல்லை, நான் கோவில்களில் எல்லாம் போய் தோப்புக்கரணம் போடமாட்டேன் என்று சொன்னால், சரி வீட்டில் மனைவியின் முன் " இனி நீ சொன்னதையெல்லாம், ஆபிஸ் முடிந்து வரும் வழியில் வாங்கிவர மறக்கமாட்டேன் " என்று தோப்புக்கரணம் போடுங்கள்.
ஹாஹ்ஹா, யாரைப்பார்த்து, [அருகில் மனைவியின் நடமாட்டம் தென்படுகிறதா, என உறுதிசெய்துகொண்டு] நான் வணங்காமுடி என்று சொல்பவராக இருந்தால், மகிழ்ச்சி, நீங்கள் வீட்டில் உள்ள அறையில் தனிமையில், ஒன்று. இரண்டு.. என எண்ணிக்கொண்டு, தோப்புக்கரணம் போடுங்கள். இடையில் உங்கள் மனைவி வந்து எட்டிப்பார்த்து, நீங்கள் அசடு வழிய நேர்ந்தால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற தோப்புக்கரணம்:
நம் மூதாதையர் கண்டுபிடித்த அரிய உடற்பயிற்சிக்கலை, இந்த தோப்புக்கரணம், ஆயினும் இன்று நிலை என்ன, நாம் பள்ளிகளில் அவற்றை மறந்துவிட்டோம், எந்த ஆசிரியரும் இதை செய்யச்சொல்வதில்லை, அவருக்குத் தெரிந்தால்தானே, அவர் சொல்லிக் கொடுப்பார். கோவில்களில் இப்போது நாம் தோப்புக்கரணம் இடுவோரைக் காண்பது மிக அரிதாகிவிட்டது, எல்லோரும் இப்போது வேகமான உலகின் விளம்பரத் தூதர்களாக மாறி, கோவிலில் விநாயகர் சன்னதி முன், கால்களை சற்றே வளைத்துக் கொண்டு, கைகளை மடக்கி, தலையின் முன்புறம் குட்டிக்கொண்டு நகர்ந்து விடுகின்றனர், பாஸ்ட் பார்வார்ட் தோப்புக்கரணம்!
நம் முன்னோர் சொன்னபோது, அலட்சியப்படுத்திய நாம், இன்று வெள்ளைக்காரன் "சூப்பர் பிரெயின் யோகா" என்று நம்மிடமே கொண்டுவந்து, இந்த யோகா, உங்கள் மூளையின் இரு பக்கங்களையும் செயல்பட வைக்கும், உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும், பெண்களின் பிரசவம் எளிதாகும், அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்களை எல்லாம் சரிசெய்யலாம், என்று விளம்பரம் செய்து, பொருளீட்டுகிறான்.
யோகாவை வளர்ப்போம் :
யார் வீட்டு சொத்தை, யாரிடம் வந்து விற்கிறான், பாருங்கள்! இதைவிடக்கொடுமை, நாமும் வரிசையில் நின்று, அவர்களிடம் நேரம் வாங்கிக்கொண்டு, பயிற்சியை செய்துவந்து பெருமை பேசுகிறோம்.
"சூப்பர் பிரெயின் யோகா"வில் எங்க பிள்ளையை சேர்த்தபிறகுதான், அவன் சூப்பரா படிச்சு, நல்ல மார்க் வாங்கிட்டு, இப்போ மெடிக்கல் படிக்கிறான், என்று. நம்முடைய வருங்காலத் தலைமுறைகள் நோய்நொடி இல்லாமல் நல்லா வாழணும்னு, நம்ம பெரியவங்க, நல்ல மனசோட செஞ்சதை, இந்த நவீனத்திருடர்கள், நம் பாட்டன் சொத்தை, நமக்கே கூச்சமில்லாமல் விற்கிறார்கள்.
நாமும் அந்நிய மோகத்தில், அதை உபசரித்து வரவேற்கிறோம், இன்றைய தலைமுறைகளின் வாழ்வும் சிந்தனையும், மிகமிக வேறுபட்ட பாதைகளில், நம்முடைய பாரம்பரிய பெருமையை மறந்து, செயற்கை உபதேசங்களின் பின் சென்று கொண்டிருக்கிறது.
பகுத்தறிந்து, ஒரு விஷயத்தை ஆராய்ந்து, அறியும் ஆற்றல் நிலை, இப்போது எங்கும் காணமுடியவில்லை. பாரம்பரியக் கலைகள் அறிந்து, வாழ்வில் அவற்றைக் கடைபிடித்து, நம்மவர்க்கும் பகிர்ந்து நலமுடன் வாழ்வோம்! எதிர்கால தலைமுறையைக் காப்போம்!!

கொடுக்காய் புளி என்று சொன்னதும் உங்க பள்ளி ஞாபகம் வருதா? இதப் படிச்சிடுங்க!!

தற்காலத்தில் மருத்துவ குணமிக்கது என புகழப்படும் கொடுக்காபுளி, ஆப்பிளின் சற்றே புளிப்பான இனிப்புச் சுவையைக் கொண்டிருந்ததால், கிராமத்து சிறுவர்களின் ஆப்பிளாக கருதப்பட்டது.
கிராமப்புறங்களில், நகரங்களில் எங்கும் காணக் கிடைக்கும். ஓசியில் கிடைக்கும் அவற்றை, சிறுவர்கள் கொத்துக்கொத்தாகப் பறித்து கால் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.


All about Camachile - The Manila Tamarind and its benefits எனினும் பழங்களை அணில்கள், பறவைகள் வேட்டையாடி விடும் என்பதால் காய்கள் சற்றே நிறம் மாறும்போதே நம் ஆட்கள் அதை பறித்து வைத்துக்கொள்வார்கள். செங்காயாக இருக்கும் அவற்றின் சுவையும் அருமையாகவே இருக்கும்.
எனவே, கண்களால் கண்ட போதே சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் பறவைகள் அல்லது வேறு யாரேனும் சிறுவர்கள் பறித்துவிடுவர் என்பதால் பையன்கள் உடனே அவற்றைக் கொய்துவிடுவர்.அதன் வித்தியாசமான புளிப்பு கூடிய இனிப்பு சுவையில், லயித்து மகிழ்வதும், பழைய நினைவுகளாகிவிட்டன. மரத்தில் சிவந்த நிறத்தில் காணப்படும் பழுத்த கொடுக்காப்புளிகளே சாப்பிட அதிக சுவையுடன் இருக்கும்.
இப்போது அரிதாகக்கடைகளில் கிடைக்கிறது. காசில்லாமல் கொத்துகொத்தாக பறித்து தின்ற அவையெல்லாம் இன்று விலையிட்டு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகின்றன.
பழைய நினைவுகளால் அன்றைய சிறுவர்களும் இன்று அறிந்த அவற்றின் மருத்துவ குணங்களால், மற்றோரும் வாங்குகின்றனர்.
கொடுக்காபுளி சர்க்கரை நோயைப் போக்குவதாக சொல்லப்பட, அநேகர் குவியல் குவியலாக வாங்கிச்செல்கின்றனர். இப்போது கொடுக்காபுளியின் மற்ற மருத்துவ குணங்கள் பார்க்கலாம்.All about Camachile - The Manila Tamarind and its benefits மருத்துவ குணங்கள் :
  • வாத நோய் மற்றும் மூட்டு வலி தீர, வலி மருந்தாகிறது.
  • நெடுநாள் நோய்வாய்ப்பட்டு உடல் தேறியவர்களுக்கு, உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
  • பெண்களின் கருப்பை நோய்களுக்கும், உள் உறுப்பு புண்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் தீர்வாகிறது.
  • உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது.
மற்ற உபயோகங்கள் :
  • கொடுக்காபுளி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையிலிருந்து, சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. 
  • இதன் புண்ணாக்கு மற்றும் இலைகள் ஆடுமாடுகளுக்கு தீவனமாகப் பயனாகிறது. கொடுக்காபுளி மரத்தில் இருந்து, மரச்சாமான்கள் செய்யப்படுகின்றன.

மாத்திரைகளை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா?

சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ இரண்டாக உடைத்து சாப்பிடுபவர்களா நீங்கள் அப்போ தொடர்ந்து வாசியுங்கள்.தவறு :

தவறு :

மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவது தான் நல்லது. அதை இரண்டாக உடைப்பது தவறான செயல். அப்படிச் செய்வதால் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடும்.ஆலோசனை :

ஆலோசனை :

மாத்திரைகளை இரண்டாக உடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் மருத்துவரிடம் அதனை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மாத்திரைகளின் அளவு வேறுபடும் போது அது உடலுக்கு பக்க விளைகளைக் கூட ஏற்படுத்தலாம். இதயம்,ஆர்த்த்ரைட்டீஸ்,பிரசர், கை நடுக்கத்திற்கான மாத்திரைகளை சாப்பிடுவோர் இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.மாத்திரைகள் :

மாத்திரைகள் :

ஒவ்வொரு மாத்திரையின் தயாரிப்பும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும். நாம் இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் தான் உடைபடும் என்றும் அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் சொல்ல முடியாது.கோட்டிங் :

கோட்டிங் :

வீரியமிக்க மருந்துகள் வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும். உடைக்கும் போது வீரியமிக்க மூலப்பொருள் நேரடியாக நம் உள்ளுறுப்புகளில் செல்வதால் இதனால் வேறு சில உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.கருவி :

கருவி :

மாத்திரைகளை இரண்டாக உடைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அவை உடைக்க தகுந்த ஆயுதங்களை கையாளுங்கள்.கையாலோ, கத்தியாலோ அல்லது வேறு பல கூர்மையான ஆயுதங்களாலோ மாத்திரைகளை உடைக்க கூடாது. மாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். மாத்திரைகளை உடைக்க பயன்படுத்தும் கருவியில் உள்ள அழுக்குகள் மாத்திரைகளில் பட்டு விடும் என்பதாலும் இவற்றை தவிர்ப்பது நலம்.கவனம் :

கவனம் :

மாத்திரைகள் சில ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்ககூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை இரண்டாக்க போகிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்ப்பட்ட வடிவங்களில் உடைத்து மாத்திரையின் முக்கிய வேலையே சிதைந்துவிடும்.
மாத்திரைகளை இரண்டாக உடைப்பதை தவிர்த்திடுங்கள்.

குறுக்கெழுத்துப் போட்டி விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

நீங்கள் குறுக்கெழுத்து புதிர் போட்டி விளையாட விரும்புவீர்களா? அப்படியானால் உங்கள் மூளையின் செயல்திறன் மேம்பட்டு பத்து வருடங்களுக்கு உங்கள் மூளை இளமையாகவே இருக்குமாம் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆய்வின் ரிசல்ட் என்ன சொல்கிறது என்றால் வார்த்தை புதிர்களில் (word puzzles) விளையாடுபவர்கள் அறிவாற்றல் சார்ந்த செயல்களை மேற்கொள்வதிலும் அவர்களின் கவனம், காரணமாய்வு மற்றும் நினைவாற்றல் போன்றவை மேம்படுகிறது. இதனால் டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன.Playing Crosswords Daily May Keep Your Brain Youngerஇந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களது வயதை காட்டிலும் பத்து வருஷம் இளைமையான மூளையின் செயல்திறனை கொண்டு இருப்பதோடு கிராமிட்டிகல் ரீசனிங் மற்றும் நினைவாற்றல் போன்றவை அவர்களுக்கு அதிகரிக்கிறது என்று சொல்கிறார்கள்.
தொடர்ச்சியான வார்த்தை விளையாட்டு விளையாடுபவர்களுக்கு ஒன்பது அறிவாற்றல் சார்ந்த செயல்களை கொடுத்து அதைச் செய்வதற்கான வேகம் மற்றும் துல்லியத்தையும் கணக்கிட்டு இரண்டு செயல்களையும் ஒப்பிட்டு பார்த்தோம்.
இதில் அவர்களின் கவனம், காரணங்களை ஆய்தல் மற்றும் நினைவாற்றல் போன்றவைகளும் கண்காணிக்கப்பட்டது என்று யுனிவர்சிட்டி ஆஃப் எக்ஸ்டரின் புரபொசர் ஹெயித் வெஸ்நஸ் பிரிட்டனிலிருந்து இதை பற்றிய கருத்துகளை Playing Crosswords Daily May Keep Your Brain Younger
இதில் வார்த்தை விளையாட்டில் ஈடுபடுபவர்களின் செயல்திறன் அதிகமாகவே காணப்பட்டது . தொடர்ச்சியான வார்த்தை புதிர்களை தீர்வு காண்பதால் அவர்களால் அறிவாற்றல் சார்ந்த டாஸ்க்கும் நிறையவே எளிதாக செய்ய முடிகிறது என்று வெஸ்நஸ் கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சியை 2017 ல் லண்டனில் உள்ள அல்சீமர் அஸோஷியேசன் இன்டர்நேஷனல் கான்பரன்ஸ் (AAIC) நடத்தியது. இந்த ஆராய்ச்சியில் 17,000 க்கும் அதிகமான 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள் கலந்து கொண்டு ஆன்லைனில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
இதனுடன் சேர்த்து நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள மூளைக்கு பயிற்சி அளித்தல், புகைப் பழக்கம் தவிர்த்தல் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல் போன்றவையும் டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்பை குறைக்கின்றன என்று ஆராய்ச்சியின் முடிவு தெரிவிக்கிறது.

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...