Saturday, 2 September 2017

வாட்டர் பாட்டிலில் எக்ஸ்பயரி தேதி ஏன் தருகிறார்கள்? தண்ணீர் கெடுமா?

நம் நாட்டில் நிலத்தடி நீர் அல்லது கிணற்று நீர் பயன்படுத்துவது தான் வழக்கத்தில் இருந்து வருகிறது.இந்த நீர் ஆதாரத்தின் வயதை நீங்கள் பார்த்தீங்கள் என்றால் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

நம் பூமி தோன்றிய காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இங்கு நீர் ஆதாரங்கள் இருந்து வருகின்றனர். ஆனால் நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீருக்கு மட்டும் ஏன் எக்ஸ்பிரி தேதி கொடுக்கப்பட்டுள்ளது என்று யோசித்தீர்களா? ஏனெனில் இதுவரை எந்த ஒரு பாட்டில் பிராண்ட்டும் மக்களின் நம்பிக்கைக்கு நம்பகமான தரமான பொருட்களை ஏற்படுத்த முடிவதில்லை.Does Water Have An Expiry Date?
இங்கே தண்ணீரின் எக்ஸ்பிரி தேதி பற்றிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம்.உண்மை #1

உண்மை #1

தண்ணீர் கெட்டுப் போவது இல்லை. அதை பயன்படுத்தி சமைக்கும் உணவுப் பொருட்கள் தான் கெட்டுப் போகும். உப்பு மற்றும் சர்க்கரை கூட கெட்டுப் போவதில்லை.உண்மை #2

உண்மை #2

அப்போ என்ன காரணத்திற்காக வாட்டர் பாட்டிலில் எக்ஸ்பயரி தேதி கொடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கேட்பீங்க. என்னவென்றால் எக்ஸ்பிரி தேதி கெமிக்கல் வினைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.
ஏனெனில் பாட்டிலில் இருக்கும் சில கெமிக்கல் பொருட்கள் கொஞ்ச நாள் கழித்து தண்ணீருடன் வினைபுரிய தொடங்கி விடுமாம். .உண்மை#3

உண்மை#3

மற்றொரு காரணம் என்னவென்றால் பாட்டில் கம்பெனிகள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.ஒரு பொருளை மக்களிடம் விற்பனை செய்ய இந்த விதிமுறைகளின் படி செயல் பட வேண்டும். உண்மை #4

உண்மை #4

நீரில் கலக்கும் கெமிக்கல்கள் தண்ணீருடன் கலந்து விட்டால் அது மாசுபட்டு விட்டது என்று தானே அர்த்தம்.உண்மை #5

உண்மை #5

வேறு சில காரணிகளான வெப்பம், கெமிக்கல்கள், சேமிப்பு பொருட்கள் மற்றும் தொற்றுப் பொருட்கள் போன்றவற்றாலும் தண்ணீரின் தூய்மை கெடுகிறது.
எனவே எக்ஸ்பயரி தேதி கொடுக்கப்பட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் கொடுக்கின்றனர்.
என்னங்க வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் தூய்மை பற்றி தெரிந்து கொண்டீங்களா? இனி அதை பாதுகாப்பாக பயன்படுத்துங்க.

உடல் எடையை குறைக்க ஆரம்பிச்சாச்சா? கார்ப் குறைவான உணவுகள் எப்படி தேர்ந்தெடுப்பது?

உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட். ஜங் உணவுகள் சாப்பிடுவதால் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் கொழுப்பை சேர்க்க உதவுகிறது. இது உடல் பருமன் அதிகரிப்பதை படிப்படியாக அதிகரிக்கச் செய்கிறது.
கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் வைட்டமின் போன்றவை அன்றாடம் நாம் உணவு உண்ணும் போது உடலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களாகும். ஆனால், அதற்கும் ஒரு அளவு உண்டு. எவ்வளவு சத்துக்கள் சராசரியாக நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது என்பதை தெரிந்துக் கொண்டு நாம் உணவு உட்கொள்ள வேண்டும்.Want To Maintain Your Weight? Add These Low-carb Foods To Your Diet கார்போஹைட்ரேட் உணவுக் கட்டுப்பாட்டில் முக்கியமான ஒரு சத்தாகும். இதுவே உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. ஆனால், உடல் எடை குறித்து வரும் போது நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவை கவனிக்க வேண்டும். தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் எளிமையாதாக இருப்பதால் அவை எளிதில் செரித்து விடும்.
அதுவே, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிட்டால் அவை உடலில் செரிப்பதற்கு தானதம் ஆகதோடு, உடலில் கொழுப்பை சேர்த்து வைக்க வழு செய்யும். எனவே, கார்போஹைட்ரேட் குறைவான உள்ள உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதை நிச்சயம் குறைக்கலாம்.
இந்தக் கட்டுரையில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி பார்ப்போம்..முழு தானியம்

முழு தானியம்

முழு தானியங்கள் தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை நமது உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ், கம்பு, பழுப்பு அரிசி, முதலியன சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், இரும்புச் சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. முழு தானியங்களில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட்டால், நாள் முழுவதுக்குமான சக்தியை தரக்கூடியது.பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்புகளில் அதிகப்படியான புரதச்சத்துக்கள் உள்ளன. இவை கார்போஹைட்ரேட்டுக்கு பதிலாக தாரலமாக உட்கொள்ளலாம். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமல்லாமல் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றை தன்னுள் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இது செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை சமப்படுத்துகிறது. சில முக்கியமான மற்றும் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகள் சுண்டல், சோயா பீன்ஸ், பீன்ஸ் முதலியன.நட்ஸ்

நட்ஸ்

நார்ச்சத்து, ஒமேகா 3, கொழுப்புச் சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரே நொறுக்கித் தீனி வகை என்றால் அது நட்ஸ் தான். இதனை சாலட் அல்லது மற்ற உணவுகளின் மீது தூவியும் சாப்பிடலாம். சியா விதைகள், துளசி விதைகள், பாதாம், வால்நட், பூசணி விதை, முந்திரி போன்றவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள்

மண்ணிற்கு மேலே விளைந்த அனைத்து காய்கறிகளையும், அதாவது மாவுச் சத்து இல்லாத உணவுகள் அல்லது கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகள் போன்றவை நல்லது. இந்த வகை உணவுகளை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ தினமும் சாப்பிட்டால் வயிறு நிறைந்த எண்ணம் அதிக நேரம் இருக்கும், அதுவே உடல் பருமன் சரியாக மேற்கொள்ளவும் உதவும். பழங்கள்

பழங்கள்

தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலங்கள் நிறைந்த பழங்களில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை உள்ளன. சிக்கலான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்கு பதிலாக இது போன்ற பழங்கள் சாப்பிடுவது எடை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். இறைச்சி மற்றும் கடல் உணவு

இறைச்சி மற்றும் கடல் உணவு

அசைவப்பிரியர்களுககு இது ஒரு நல்ல செய்தி தான். இறைச்சி மற்றும் கடல் உணவுகளில் உள்ள அதிகப்படியான புரதச்சத்துகள் நிறைந்ததாகவும், கார்போஹைட்ரேட் இல்லாததாகவும் இருக்கிறது. எனவே, கார்போஹைட்ரேட்டிற்கு பதிலாக சாப்பிடக்கூடிய சிறந்த உணவாக விளங்கும் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். அதற்கென்று இறைச்சி மற்றும் கடல் உணவுகளை அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. கொழுப்புக் குறைந்த பால் பொருட்கள்

கொழுப்புக் குறைந்த பால் பொருட்கள்

ஒரு பவுல் சீஸ், இனிப்பில்லா பால் அல்லது தயிர் ஆகியவற்றில் வைட்டமின் டி, புரதச்சத்துக்கள் போன்றவை அதிகமாகவே உள்ளது. மேலும், இந்த உணவுகளை சாப்பிட வாங்குவதற்கு முன் அதன் கொழுப்பு அளவினை பார்க்க மறந்துவிடாதீர்கள். அதிகமாக கொழுப்பு உள்ள பொருட்கள் ஆரோக்கிய சீர்க்கேட்டை உருவாக்கிவிடும். எனவே, கொழுப்பு குறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. முளைக் கட்டிய தானியங்கள்

முளைக் கட்டிய தானியங்கள்

புரதங்களும் அதிகமான உள்ள ஆரோக்கியமான உணவான முளைக்கட்டிய தானியத்தை தினசரி உணவில் சிறிதாவது சேர்த்துக் கொள்ளவேண்டும். சாலட் அல்லது சான்விட்ஜ் போன்றவற்றில் உருளைக்கிழங்கு போன்றவை சேர்த்து சுவையான உணவாக உட்கொள்ளுவது அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க நட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா?

நட்ஸ் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்களை கொண்டுள்ளது. அதே சமயம் இதில் அதிகப்படியான வைட்டமின்கள், கனிமங்கள், புரதம் மற்றும் நார்சத்துக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இதனை நொறுக்கு தீனியாக சாப்பிடுவது ஆரோக்கியமானது என நினைப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் சரியான அளவில் கட்டுப்பாடுடன் சாப்பிடுவது அவசியம்.
உடல் எடையை குறைக்கும் சில நட்ஸ் பற்றி பார்ப்போம்.பாதம்:

பாதம்:

பாதாமில் அதிகப்படியான நார்ச்சத்து, வைட்டமின் இ, மெக்னீசியம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைக்க வல்லது. நொறுக்கு தீனியாக எடுத்துக்கொள்ளும் போது உடல் எடையை குறைக்க சிறந்தது. இதில் முக்கியமானது என்னவென்றல் இதனை அளவுடன் எடுத்துக்கொள்ளும் போது இது உடல் எடையை குறைக்கும். ஒருவேளை அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் இது எதிர்மறையாக உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். 6-7 பாதம்கள் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்வது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.வால்நட்:

வால்நட்:

வால்நட் அதிகப்படியான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கியுள்ளது. இது கொழுப்பின் அளவை குறைக்க உதவியாக உள்ளது. மேலும் இது உங்கள் முகத்தை பளபளக்கச் செய்ய உதவியாக உள்ளது.முந்திரி:

முந்திரி:

முந்திரி அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளது. அதே சமயம் வளர்ச்சிதை மாற்ற நோய் அறிகுறிகளை குறைக்க வல்லது. நிறைய முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.வேர்க்கடலை:

வேர்க்கடலை:

வேர்க்கடலையில், நார்ச்சத்து அடங்கியுள்ளது. ஆண்டி- ஆக்ஸிடண்ட், கொழுப்பு, உணவு புரதம் ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ளது. இதில் உள்ள மோனோ மற்றும் பாலி நிறைவுறா கொழுப்பு ஆகிய இரண்டும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது. அதிகப்படியான வேர்கடலையை சாப்பிட்டால், நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, உடல் எடை அதிகரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் உப்பு போட்ட வேர்கடலை உண்ணும் போது முழுமையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. மேலும் கலோரி அளவு அதிகரிக்கிறது.உலர்ந்த திராட்சைகள்:

உலர்ந்த திராட்சைகள்:

உலர்ந்த திராட்சைகளை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் இதில் அதிகளவில் சக்கரை இருப்பதால், இதனை அளவுக்கு மீறி உண்ணும் போது உடல் எடை அதிகரிக்கலாம் மற்றும் இரத்தத்தில் குளோக்கோஸின் அளவை சக்கரை நோயாளிகளுக்கும் அதிகரிக்க செய்கிறது. பெரும்பாலும் இது சக்கரைக்கு பதிலாக இனிப்பான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, திராட்சை கீர், பழக்கூழ், சேமியா, ஷேக்குகள் போன்றவற்றில் சக்கரைக்கு பதிலாக சேர்க்கப்படுகிறது.நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

முதலில் இவைகலை சாப்பிடும் அளவில் கவனம் தேவை.
ஒரே வழியில் சாப்பிட வேண்டாம்.
சக்கரை / சுவையூட்டிகள் / உப்பு சேர்ந்த நட்ஸ்கள் அதிகப்படியான கலோரிகளை கொண்டிருக்கும் எனவே இது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வேறு சில பிரச்சனைகளை உருவாக்கும். சிறிதளவு நட்ஸை ஒட்ஸ் கஞ்சி, தயிர் அல்லது சூப் உடன் சேர்த்து உண்ணலாம்.

மழைக்காலத்தில் நோய்களால் அவதிப்படுறீங்களா? இதோ உங்களுக்கான உடனடி வைத்தியங்கள்!!

பருவ மழைக்காலம் வரப் போகுது என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பர். தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் குழந்தைகள் விளையாடி ஆனந்தம் கொள்வர். பெரியவர்களும் தங்களது நிறைய தேவைகளுக்கு மழையை நம்பி வாழ்கின்றனர்.
இப்படி எல்லாரும் மழைக்காலத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருப்போம். ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இந்த மழைக்காலத்தில் வளங்களோடு வியாதிகளும் நோய்களும் சேர்ந்து வருவது தான்.How To Stay Healthy During Monsoon With Ayurveda
சரிங்க வருகின்ற இந்த நோய்களை சரி பண்ற முறையை தெரிந்து கொண்டால் நிஜமாகவே நாம் எல்லாரும் மழைக்காலத்தில் சந்தோஷத்தில் நனையலாம் அல்லவா.
எனவே இந்த இக்கட்டான கால கட்டத்தை சமாளிக்கவே ஆயுர்வேதம் நமக்கு நிறைய மருத்துவ பொருட்களை கூறுகிறது. இந்த ஆயுர்வேத முறையையும் அதன் பயன்களை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போறோம்.டிப்ஸ் #1

டிப்ஸ் #1

இந்த மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஆயுர்வேத முறைப்படி இந்த காலத்தில் காரமான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
காரணம்
காரமான உணவுகள் உங்களது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சரும அழற்சிகள் மற்றும் பயோடெர்மா போன்ற நோய்களை ஏற்படுத்தி விடும். எனவே நீங்கள் அடுத்த தடவை காரசாரமான பக்ரோஸ் சாப்பிட நினைத்தால் தயவு செய்து அதை கைவிட்டு விடுங்கள்.டிப்ஸ் #2

டிப்ஸ் #2

நீங்கள் இக்காலத்தில் வேப்பிலையை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
காரணம்
வேப்பிலையில் உள்ள கசப்புத் தன்மை எந்த வகை கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் பெற்றது. எனவே இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த நோயும் உங்களை அண்டாது. மேலும் இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தில் ஏற்படும் எல்லா வகையான பாக்டீரியல் மற்றும் பூஞ்சை தொற்றை தடுக்கிறது. டிப்ஸ் #3

டிப்ஸ் #3

துளசியுடன் சுடு தண்ணீர் கலந்து குடிப்பது இக்காலத்திற்கு அருமையான மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
காரணம்
துளசி தான் மூலிகையின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் இறப்பை ஏற்படுத்தும் காய்ச்சலான டெங்கு, மலேரியா போன்றவற்றிலிருந்து காக்கிறது . இந்த இரண்டும் மழைக்காலத்தில் அதிகமாக பரவும் நோயாகும். டிப்ஸ் #4

டிப்ஸ் #4

அடுத்ததாக நாம் பார்க்க போவது மெத்தி என்று அமைக்கப்படும் வெந்தயம் ஆகும். இந்த வெந்தயம் எல்லா நேய்களுக்கும் ஒரு தடுப்புப் பொருளாக செயல்படுகிறது.
காரணம்
இது நமது உடலின் ஆற்றலை அதிகரிக்கும் பொருளாகும். இதில் உள்ள நிறைய தாதுக்கள் உங்களை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. நீங்கள் காய்ச்சலில் இருக்கும் போது கூட இதை எடுத்து கொள்ளலாம். மேலும் நிறைய வகையான சீரண பிரச்சினையை சரி பண்ணுகிறது.டிப்ஸ் #5

டிப்ஸ் #5

மஞ்சள் மற்றும் சூடான பால் தொண்டை கட்டு, தொண்டையில் ஏற்படும் தொற்றுகள், மார்புச்சளி மற்றும் சளித் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
காரணம்
இதில் குர்குமின் என்ற சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மழைக்காலத்தில் ஏற்படும் சளித் தொல்லைகளிலிருந்து நம்மை காக்கிறது.டிப்ஸ் #6

டிப்ஸ் #6

பாகற்காய் ஆயுர்வேதத்தில் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்.
காரணம்
இதில் விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது உடலில் ஏற்படும் நோய்களை நம்மை அண்ட விடாமல் துரத்தி விடும். மேலும் இதை சாப்பிட்டால் ஆரோக்கியமான கட்டுக்கோப்பான உடம்பு கிடைக்கும்.டிப்ஸ் #7

டிப்ஸ் #7

எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகள் வாய்க்கு ருசியாக இருக்கும். ஆனால் இந்த மழைக்காலத்தில் உடலுக்கு இது மிகவும் கேடு.
காரணம்
இந்த பொருட்களில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உங்கள் சீரண சக்தியை கஷ்டமாக்கி விடும். இதனால் இந்த எண்ணெய் கொழுப்புகள் நம் உடலிலே தங்கி இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது எனவே மழைக்காலத்தில் இதை தவிர்ப்பது தான் சிறந்தது.
என்னங்க இந்த ஆயுர்வேத பொருட்களை கொண்டு மழைக்காலத்தில் நோயிலிருந்து விடுபடுங்கள். மழைக்காலத்தை சந்தோஷமாக அனுபவித்து ரசியுங்க

எப்போதும் சோர்வை உணர்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களும் பெண்களும் உடலில் ஆற்றல் இல்லாமல் சோர்ந்த நிலையில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் இன்றைய வாழ்க்கை முறை. நடமாட்டம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் பல்ப், மொபைல் போன், கேட்ஜெட்டுகள் போன்றவை இல்லாததால் சரியான நேரத்திற்கு தூங்கி எழுந்து வேலை பார்த்து வந்தனர். அதனாலேயே நன்கு ஆரோக்கியமாகவும் இருந்தனர்.

ஆனால், இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மொபைல் போன் மற்றும் கேட்ஜெட்டுகளை உபயோகிப்பது பழகி விட்டது. அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்னும் நிலை ஏற்பட்டுவிட்டு விட்டதால் தூக்கம் இல்லாமல் உடல் நிலை பாதித்து சோர்ந்து காணப்படுகின்றனர்.

ஒரு மனிதனுக்கு முறையாக 7 மணி நேரம் சரியான தூக்கம் இருந்தாலேயே நல்ல ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி 7 முதல் 9 ணி நேரம் தூங்கி எழுந்தாலும் சிலர் சோர்வாக தான் காணப்படுகிறார்கள். இவ்வாறு ஏற்படுவதற்கு அந்த 7 மணி நேரத் தூக்கம் முறையான தூக்கமாக இல்லாதது காரணமாக இருக்கலாம். அப்படி சோர்வாக உணர்வதற்கான 4 முக்கிய காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாருங்கள்...Here is the reasons why you are always tired உடல் உழைப்பின்றி இருப்பது
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் கணினி சம்மந்தப்பட்ட வேலைகளை பார்ப்பதால் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலை இருக்கிறது. இதற்காக தினமும் 1000 படிகள் ஏறி இறங்குவது, நிறைய தூரம் நடப்பது என்றெல்லாமல் தேவை இல்லை. நிறைய நேரம் உட்கார்ந்திருப்பது உடலில் சோர்வினையும், மூட்டு எலும்புகளில் வலியையும், இடுப்பு வலியையும், நாள்ப்பட்ட தலைவலியையும் ஏற்படுத்தக்கூடும். இது ஆரோக்கியமான வாழ்நாளை குறைத்துவிடும். இவற்றிற்கு வழி என்னவென்றால், நிறைய நேரம்உட்கார்ந்திருக்கும் தருணத்தில் சிறிது நேரம் எழுந்து நடப்பது, அதாவது, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து 10 நிமிடம் நடக்கலாம், மாடிப்படி ஏறி இறங்கலாம், அருகில் இருப்பவருடன் நடந்து கொண்டே சிறிது பேசலாம். இவை எல்லாம் நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யக்கூடும்.
முறையற்ற உணவு பழக்கம்
சர்க்கரை அதிகமுள்ள உணவுகள், சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால் அதை முதலில் விடுங்கள். இதுவே உடலுக்கு முறையான தூக்கத்தை தரக்கூடியது. ஒரு வேலை நீங்கள் அனைத்து உணவு வகைகளையும் முறையாகவும் சரியாகவும் எடுத்துக்கொண்டாலும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று அர்த்தம். அந்த தருணங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.Here is the reasons why you are always tired தரமற்ற தூக்கம்
பெரும்பாலோர் 7 முதல் 9 மணி நேரங்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள். இருப்பினும் அவர்கள் காலையில் எழும்போது சோர்வாகவும், மந்தமாகவும் உணர்கிறார்கள். இதற்குக் காரணம் தூக்க சுழற்சி சரியாக இல்லாதது. ஒரு வழக்கமான தூக்க சுழற்சியை 75 முதல் 90 நிமிடங்கள் வரை REM மற்றும் REM இல்லாத தூக்கம் மற்றும் பிற நிலைகள் இடையே அமையும். இந்த நிலைகளில் ஒவ்வொன்றும் உங்கள் உடலை புதுப்பித்துக்கொள்வதற்கு மற்றும் நச்சுத்தன்மையை நீக்க உதவுவதற்காகவும் செயல்படக்கூடியது. தரமற்ற தூக்கத்திற்கு முக்கிய காரணங்கள் மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவு பழக்கம், நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது, ஆல்கஹால் குடிப்பது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரவில் அதிக நேரம் வெளிச்சத்தில் இருப்பது போன்றவை.
இவற்றில் இருப்பது தப்பிக்க அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் பட செய்வது, மதிய வேலையில் காஃபின் அளவு சேர்ப்பதை குறைப்பது, எலெக்ட்ரிக் உபகரணங்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது, புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.Here is the reasons why you are always tired மன அழுத்தம்
வேலையிலும், தொழிலும், எதிர் காலத்திலும் அதிக அக்கறை செலுத்தி உடலை கவனித்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் பலரை பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களை பார்க்கும போது நீங்களே தெரிந்துக்கொள்ளலாம் அவர்களின் தூக்கம் கெட்டு உடல் சற்று சோர்வாகவே காணப்படும். தூக்கத்தை கெடுத்துக்கொண்டு தொழிலை கவனிப்பதால் கிடைக்கும் பலன் மனஅழுத்ததின்ல் உருவான உடல் சோர்வு. இந்த காலத்து ஆண்களும பெண்களும் பெரும்பாலும் மருத்துவரை அணுகுவது மப அழுத்தத்தை சரி செய்வதற்காக மட்டுமே. இவற்றை போக்கும் வழியாக அமைவது தியானம், யோகா, மசாஜ் மற்றும் இயற்கை காற்றில் நடமாடுவது போன்வறை. மேலும், மொபைல் போனை சற்று தொலைவில் வைத்துவிடுங்கள்.

பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்!!

பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர்.
எதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்?
அதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும்.
பொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.An Amazing home remedy to treat irregular periods என்ன செய்ய வேண்டும்?
காலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.அற்புத மருந்து :

அற்புத மருந்து :

உடலின் வலிவிற்கும் மனதின் பொலிவிற்கும் சித்தர்கள் கூறும் காய கற்பங்கள், உறு துணையாகும், காய கற்பங்கள் மூலம் நோய் நீங்கி மனமும் செம்மையாகி, நரை திரை மூப்பு இன்றி, பெரு வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் நல் வாக்கு.
அத்தகைய பெருமையும் உயரிய குணங்களும் கொண்ட காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலாய்க் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். கடுக்காய் உண்டால், மிடுக்காய் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு. மிக உயர்ந்த நலம் பயக்கும் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டு விளங்குவதால் தான் சித்தர்கள், கடுக்காயை தாயினும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர்.
பெற்ற தாய் குழந்தையின் மேல் உள்ள பற்றால், பல விதமான தின் பண்டங்களைச் செய்து அவர்கள் உடல் நலன் கெடுத்து விடுவர், ஆயினும், கடுக்காயோ அத்தகைய உடல் நலனைச் சரி செய்து அவர்களின் வயிற்றை சுத்தம் செய்துக் காத்து, அவர்களின் நல்வாழ்வை நீட்டிக்கிறது என்பர்.
தேவர்களின் அமிர்தத்துக்கு ஒப்பானது என சித்தர்களால் போற்றப்படும் கடுக்காய் மனிதனின் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கிறது, ஒருவன் தன் உடல் நலனுக்காக மருந்து உண்ண முயற்சிக்கும் வேளையில், முதலில் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி உடல் தூய்மை பெற வேண்டும். தினமும் இரவில் கடுக்காய்ப் பொடி உண்டுவர, மாசுக்கள் நீங்கி உடல் வலுவாக, கடுக்காய் அருந் துணை புரியும்.
இத்தகைய ஆற்றல் மிக்க தேவ மூலிகை கடுக்காய் மூலம் இளம் பெண்டிரின் மாத விடாய்க் கோளாறுகளை சரி செய்வது எவ்வாறு, எனப் பார்க்கலாமா?கடுக்காயின் ரகசியம் :

கடுக்காயின் ரகசியம் :

கடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும், இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும் என்பதே, சித்தர்கள் கூறும் இரகசியம்.பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.நன்மைகள் :

நன்மைகள் :

அது மட்டுமா, ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதா மாதம் மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம்.
கடுக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக காரம் மற்றும் கொழுப்புகள் சேர்ந்த உணவுகளால், உடலின் செரிமானத் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் வயிற்றில் சேரும் நச்சுத் தன்மைகளே உடலின் பல்வேறு உபாதைகளுக்கும் மூல காரணம், இத்தகைய நச்சுக்களால் தான், மாதாந்திர வலிகளும் கடுமையாக ஏற்பட்டன. நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

கடுக்காய் தோல் தீநீர் உடல் நச்சு போக்கி, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்,
உடலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த அற்புத குணப்படுத்தும் நிலைகளால்தான், இயற்கையாக அதிகரிக்கும் உடலின் ஆரோக்கிய செயல் பாடுகளால், பெண்கள் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி, தேறி வரும்.
அற்புத கற்ப மூலிகை கடுக்காய்ப் பொடி, தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வர, நம் உடலை நோய்களில் இருந்து காக்கும், உடலுக்கும் மனதிற்கும் எப்போதும், நல்லதை மட்டுமே செய்யும்.

உங்கள் ரத்தத்தில் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் சிறந்த உணவுகள்!!

இரத்தத்தில் இருக்கும் கூறுகளான இரத்த தட்டுக்கள், காயங்களின் போது உங்கள் உடலில் குறையும் இரத்தத்திலிருந்து காப்பாற்ற பெரிதும் உதவுகிறது.
இருப்பினும், எப்படி உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கை குறைகிறது? என்பதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தட்டுக்கள் என்பது இரத்த செல்களாகும். இது நம் உடலில் இரத்த கட்டிகளை உருவாக்க உதவுகிறது. மேலும், இந்த தட்டுக்களிற்கு, செல்களில் உண்டாகும் குறைகளை சரி செய்யும் குணமும் இருக்கிறது.
தட்டுக்களின் எண்ணிக்கையானது, தட்டுகளின் செறிவில் இருக்கும் இரத்தம் கொண்டே கணக்கிடப்படுகிறது. சாதாரணமாக, இரத்த எண்ணிக்கை என்பது 150,000 முதல் 400,000 தட்டுக்கள் வரை இரத்த நுண்ணுணர்வை காட்டிலும் இருக்கிறது.Best Foods To Increase The Blood Platelet Countகுறைவான தட்டுக்களின் எண்ணிக்கைகான சில பொது அறிகுறிகளாக, அதிகமான சிராய்ப்பு, மூக்கு அல்லது ஈறுகளில் ஏற்படும் தன்னலமற்ற இரத்தப்போக்கு, வெட்டுகளினால் ஏற்படும் தொடர் இரத்தம் வடிதல், மலத்தில் இரத்தம், தோல் வடுக்கள் ஆகியவை காரணங்களாக இருக்கிறது.
மேலும், பெண்கள்...அதிக மாதவிடாய் ஓட்டத்தின்போதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இத்தகைய சிரமத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு பலவீனம் மற்றும் சோர்வும் உண்டாகிறது.
இவ்வாறு இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை ஒரு நபருக்கு குறைவதற்கோ அல்லது ஏற்றம் அடைவதற்கோ முக்கிய காரணமாக...புற்றுநோய், கடுமையான கல்லீரல் நோய், ரத்தப் புற்று நோய் (லுகேமியா), இரத்த சோகை, தீங்குவிளைவிக்க கூடிய இரசாயணங்களின் வெளிப்பாடு, கர்ப்பமடைதல், கீமோதெரபி மருந்துகள், அதிகம் மது அருந்தும் பழக்கம், வைட்டமின் B12 குறைபாடு என இன்னும் நிறையவே இருக்கிறது.
இந்த ஆர்டிக்கலின் மூலமாக, சில சிறந்த உணவுகளை கொண்டு உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிக்க செய்வது என்பதை நாங்கள் விவரித்திருக்கிறோம். மேலும் தொடர்ந்து இதனை நீங்கள் படிப்பதன் மூலம், எத்தகைய உணவெல்லாம், உங்கள் இரத்த தட்டுக்களை அதிகரிக்க செய்யும் சிறந்த உணவுகள் என்பதை நாம் பார்க்கலாம்.வைட்டமின் C அடங்கிய உணவுகள்:

வைட்டமின் C அடங்கிய உணவுகள்:

உங்கள் உடம்பில் இருக்கும் தட்டுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஒன்றாக வைட்டமின் C அடங்கிய உணவுகள் இருக்கிறது. மேலும் இந்த வைட்டமின் Cயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் இருக்கிறது. அதனால், நம் தினசரி வாழ்க்கையில்...இந்த வைட்டமின் C அடங்கிய உணவுகளை 400 முதல் 2000 மில்லி கிராம் வரை நாம் எடுத்துகொள்ளலாம். ஆம், ஆரஞ்சு, கீரை, பூக்கோசு, பந்து மிளகுத்தூள் என இன்னும் நிறைய பொருட்களில் இந்த வைட்டமின் C இருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்:

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்:

ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள், மீன், மற்றும் கீரையில் இந்த கொழுப்பு அமிலமிருக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருவதோடு, இரத்த தட்டுக்களின் அளவையும் அதிகரிக்க நமக்கு இவை உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலம் அடங்கிய உணவுகளை நாம் அதிகம் எடுத்துகொள்வதால்...இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைபாட்டினை இது போக்க பெரிதும் துணை புரிகிறது.ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்பும் அடங்கிய உணவுகள்:

ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்பும் அடங்கிய உணவுகள்:

நாம் அதிகளவில் காய்கறிகளையும், முழு தானியங்களையும், அர்கானிக் பீன்ஸ் என பலவற்றை நாம் எடுத்துகொள்வது நல்லது.
ஆண்டிஆக்ஸிடண்ட் பண்பு அடங்கிய உணவுகள், தீங்குவிளைவிக்க கூடிய தன்மை கொண்ட பொருட்களை நடுநிலைப்படுத்த, தட்டுக்களின் எண்ணிக்கை குறைபாட்டை தவிர்க்கவும் பெரிதும் இது உதவுகிறது. ஃபோலேட் நிறைந்த உணவுகள்:

ஃபோலேட் நிறைந்த உணவுகள்:

இந்த ஃபோலேட் குறைபாட்டால், இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது குறைகிறது. அதனால், ஃபோலேட் அடங்கிய உணவுகளை நாம் அதிகம் உணவுடன் சேர்த்துகொள்வதன் மூலம், அதில் இருக்கும் அத்தியாவசிய சத்துக்கள், உங்கள் உடலின் ஆரோக்கியமான செல் பிரிவுகளுக்கு வழிவகை செய்கிறது.
இந்த ஃபோலேட் நிறைந்த உணவுகளான... அஸ்பாரகஸ், தானியங்கள், ஆரஞ்சு மற்றும் கீரைகள்., உங்களுடைய இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவி செய்கிறது. வைட்டமின் A அடங்கிய உணவுகள்:

வைட்டமின் A அடங்கிய உணவுகள்:

உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வைட்டமின் A உதவுகிறது. நம் உடம்பில் புரதம் உருவாவதற்கு இந்த வைட்டமின்கள் நமக்கு தேவைப்படுகிறது. ஆரோக்கியமான புரத கட்டுப்பாட்டின் மூலம் செல்கள் பிரிவும், செல்களின் வளர்ச்சியும் இருக்க...பூசணிக்காய், கேரட், இனிப்பு உருளைகிழங்கு என பலவற்றில் இந்த வைட்டமின் A நிறைந்து காணப்படுகிறதுவைட்டமின் B12:

வைட்டமின் B12:

உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது குறைவதற்கு ஓர் காரணமாக வைட்டமின் B12 குறைபாடு இருக்கிறது. அதனால், நம் உணவு முறையில் வைட்டமின் B12ஐ நாம் சேர்த்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதனால், இயற்கையிலே உங்கள் உடலில் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கிறது. சில சிறந்த உணவுகளான சல்மான் மீன்கள், மாட்டிறைச்சி, சிக்கன், சூரை மீன், வான்கோழி என பலவற்றுள் இந்த வைட்டமின் B12 நிறைந்திருக்க, அது உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை பெருக்கவும் பெரும் துணை புரிகிறது.அமினோ அமிலம் நிறைந்த உணவுகள்:

அமினோ அமிலம் நிறைந்த உணவுகள்:

இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும், அமினோ அமிலம் நிறைந்த உணவுகள் இரத்த உற்பத்தி முறைக்கு (haematopoiesis) பெரிதும் உதவுகிறது.
மேலும், இந்த அமிலம் நிறைந்த உணவானது, உடம்பில் புதிய இரத்த செல்களை உருவாக்கவும் வழிவகை செய்கிறது.ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்

இயற்கை காட்டும் வழியில், உடம்பில் இரத்த தட்டுக்களை அதிகரிக்க செய்யும் இந்த ஆரஞ்ச் நிற பழத்தை நாம் உண்பதால்...இதில் அதிகளவில் இருக்கும் இரும்பு சத்து, உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்த வழிவகை செய்ய, ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை நாம் சாப்பிட்டு பயனடையலாம்.
அத்துடன், இந்த பழத்தில் இருக்கும் சத்துக்கள், நம் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்களை வேகமாக அதிகரிக்கவும் உதவி புரிகிறது.பேரிட்சை

பேரிட்சை

இது ஓர் சிறந்த உணவாக, உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் பெரும் பங்கினை வகிக்கிறது. பேரிட்சையில் இருக்கும் இரும்பு சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள், தட்டுக்களின் எண்ணிக்கையை இயற்கையிலே உயர்த்த பெரும் துணையாய் நிற்கிறது.சிப்பிகள் (ஓய்ஸ்டர்ஸ்):

சிப்பிகள் (ஓய்ஸ்டர்ஸ்):

இதில் இருக்கும் துத்தநாகம், உங்கள் உடலில் இருக்கும் இரத்த செல்களையும், இரத்த தட்டுக்களையும் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், எதிர்ப்பு சக்தியை நமக்கு தரும் இந்த துத்தநாகம், உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த செல்லை வலுப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது. அதனால், இயற்கையிலே இரத்த தட்டுக்களை அதிகரிக்க செய்யும் சிறந்த உணவாக, இந்த சிப்பிகள் அடங்கிய உணவுகள் விளங்குகிறது.முழு தானிய உணவுகள்:

முழு தானிய உணவுகள்:

வைட்டமின் மற்றும் கனிம ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த முழு தானிய உணவுகள், இயற்கையிலே நம்முடைய இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்த பெரிதும் உதவ முன்வருகிறது.வைட்டமின் K அடங்கிய உணவுகள்:

வைட்டமின் K அடங்கிய உணவுகள்:

இந்த வைட்டமின் கொண்ட உணவுகளின் மூலம், நம் உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சியானது அதிகரிக்கிறது. இந்த தட்டுக்கள், பத்து நாள்களுக்கு மட்டுமே நம் உடம்பில் நீடிக்க, உடலில் அழியும் தட்டுக்களின் இடத்தை நிரப்ப, ஆரோக்கியமான தட்டுக்கள் நமக்கு தேவைப்படுகிறது.
அதனால், வைட்டமின் K அடங்கிய உணவுகளான கல்லீரல், காலே, முட்டை ஆகியவை நமக்கு இந்த முறையை மேம்படுத்த பெரிதும் துணையாக நிற்கிறது.

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...